ஜப்பான் நாட்டு போர் விமானங்களை வாங்கும் இந்தியா!! அதிர்ச்சியில் உலக நாடுகள்..

By Super Admin
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலகப் போருக்குப் பின் ஜப்பானிடமிருந்து முதன் முதலில் இராணுவ விமானத்தை வாங்கும் நாடாக இந்தியா உருவெடுக்கவுள்ளது. இதன் மூலம் அந்த நாட்டின் பிரதமர் ஷின்ஜொ அபெ அந்த நாட்டின் வர்த்தக ஒப்பந்தக்காரர்களுக்கு போர்க் கருவிகளை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க வழிபிறந்துள்ளது.

 

அந்த நாட்டிலுள்ள ஷின்மாய்வா நிறுவனத்தின் நிலம் மற்றும் நீரில் இருந்து இயங்கக்கூடிய விமானத்தை வாங்குவதற்கான 1.65 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பெருமானமுள்ள விரிவான ஒரு ஒப்பந்தத்தினை இரு நாடுகளும் மேற்கொண்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் பல்வேறு விவரங்கள் தெளிவாக செயல் வடிவமாக்கவும் இந்தியாவில் இந்த விமானத்தை இணைந்து தயாரிக்க மற்றும் பிற விவரங்களை அலசவும் பேச்சுவார்த்தைகள் வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளன.

மத்திய அரசு இதுபோன்ற ஒவ்வொன்றும் 110 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள 15 விமானங்களை வாங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சரியான முயற்சி தான்..

சரியான முயற்சி தான்..

"இது இருநாடுகளுக்கும் அவசியமான ஒரு தொழில் நுட்ப உக்தி என்பதோடு இதற்கான உச்சக்கட்ட அனுமதிகள் இருநாட்டு அரசுகளாலும் வழங்கப்பட்டுவிட்டன" என இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மறுகட்டமைப்பு..

மறுகட்டமைப்பு..

தற்சமயம், உள்நாட்டு உபயோகத்திற்கான யுஎஸ்-2ஐ எனப்படும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் விமானம் மறுகட்டமைப்பு செய்யப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு ஜப்பானின் போர்க்கருவிகள் ஏற்றுமதி மீதான தடையை பரிசீலனை செய்யும் வகையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் நட்பு மற்றும் எதிரி விமானங்களை அடையாளம் காணும் கருவி நீக்கப்பட்டிருக்கும் என ஒரு இராணுவ அதிகாரி தெரிவித்தார்.

தொழில்நுட்ப பறிமாற்றம்..

தொழில்நுட்ப பறிமாற்றம்..

இரு நாடுகளும் இந்தியாவில் இந்த விமானங்களைக் கட்டமைக்கவும் அதன் மூலம் ஜப்பானின் இராணுவத் தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ளவும் தேவையான சாத்தியக்கூறுகளை குறித்து விவாதித்துக்கொண்டிருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

4500 கிமீ வரை தொடர்ந்து பறக்கும்
 

4500 கிமீ வரை தொடர்ந்து பறக்கும்

இந்த விமானம் 4500 கிலோ மீட்டர் (2800 மைல்கள்) துரம் வரை தொடர்ந்து பறக்கக்கூடியவை, அதன் மூலம் தென்கிழக்கு ஆசியாவில் வெகு தூரங்களை அது இயக்கப்படவுள்ள அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் இந்தோனேஷியாவின் மேற்கு முனை தளத்திலிருந்து அடையக்கூடியாதாகவும் இருக்கும்.

விமான உற்பத்தி நிறுவனம்

விமான உற்பத்தி நிறுவனம்

இரு அரசாங்கங்களும் இணைந்து செயற்குழுவை அமைத்து அதன் மூலம் இந்தியாவில் ஒரு கட்டுமானத் தொழிற்சாலையைத் தொடங்கவோ அல்லது உரிமத்தின் மூலம் ஒரு இந்திய நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவோ முடிவு மேற்கொள்ளப்படும் எனவும் இந்த குழு மார்ச் மாதம் கூடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 விமானங்கள் மட்டும்

2 விமானங்கள் மட்டும்

முதலில் இரண்டு விமானங்களை வழங்கவும் பின்னர் மீதமுள்ளவற்றை இந்தியாவில் உள்ள ஒரு நிறுவனத்தின் மூலம் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India close to buying Japan-made military aircraft in $1.65 bn deal

India is set to become the first country since World War Two to buy a military aircraft from Japan, helping Prime Minister Shinzo Abe end a ban on weapons exports that has kept his country's defence contractors out of foreign markets.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X