அன்னிய முதலீட்டுக்கு ஏற்ற இடம் இந்தியா தான்: உலக வங்கி

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையின் சமீபத்திய தாராளமயமாக்கல் மற்றும் முதலீட்டாளர்களுடனான சினேகபாவம் போன்றவற்றின் பின்னணியில் அனைவரும் விருப்பமுடன் முதலீடு செய்யத்தக்க இடமாக இந்தியா உருவெடுத்து வருகிறது.

2000ஆம் ஆண்டிலிருந்து இந்தியா பெற்றுள்ள ஒட்டுமொத்த அன்னிய முதலீடு சுமார் 306.88 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இதில் சுமார் 94% வரையிலான தொகை கடந்த 9 வருடங்களில் மட்டுமே பெறப்பட்டுள்ளதாக மத்திய அரசின் தகவல் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

மறுசீராய்வு செய்யப்பட்ட துறைகள்

மறுசீராய்வு செய்யப்பட்ட துறைகள்

சமீபத்தில் நடைபெற்ற இக்கொள்கையின் மறுசீராய்வுக் கூட்டத்தின் போது பின்வரும் துறைகளின் மீதான துறைசார்ந்த உச்சவரம்புகளில் அரசு சில திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது பெட்ரோலியம் & நேச்சுரல் கேஸ், கமோடிட்டி எக்ஸ்சேஞ்கள், பவர் எக்ஸ்சேஞ்கள், ஸ்டாக் எக்ஸ்சேஞ்கள், டெபாஸிட்டரீக்கள் மற்றும் க்ளியரிங் கார்ப்பொரேஷன்கள்

மற்ற துறைகள்

மற்ற துறைகள்

அஸ்ஸெட் ரீகன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனங்கள், கிரெடிட் இன்ஃபர்மேஷன் நிறுவனங்கள், டீ ப்ளான்டேஷன்கள் உள்ளிட்ட தேயிலை துறை, ஸிங்கிள் ப்ராண்ட் புராடக்ட் ரீடெயில் டிரேடிங், டெஸ்ட் மார்க்கெட்டிங், டெலிகாம் சேவைகள், கூரியர் சேவைகள் மற்றும் பாதுகாப்பு.

நம்பிக்கை அதிகரிப்பு

நம்பிக்கை அதிகரிப்பு

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதன் மூலம் எஃப்டிஐகளின் வரத்தைத் தூண்டி, பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு உதவ வேண்டும் என்ற நோக்கிலேயே எஃப்டிஐ கொள்கையில் மறுசீராய்வு செய்யப்பட்டுள்ளது என்று கடந்த புதன் கிழமையன்று அரசினால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

 உலக வங்கி

உலக வங்கி

தாராளமயமாக்கப்பட்ட அன்னிய முதலீட்டுக் கொள்கைகளினால், உலக வங்கி, யுஎன்ஸிடிஏடி (UNCTAD)உள்ளிட்ட அனைத்து சர்வதேச அமைப்புகளினாலும் இந்தியா உலகளவில் முதலீடு செய்யத்தக்க மூன்று தலைசிறந்த இலக்குகளுள் ஒன்றாக தொடர்ந்து வரிசைப்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India ranks among top investment destinations: Govt

In the back drop of recent liberalization in foreign direct investment policy and more investor friendly, India has been progressively becoming a favourable investment regime.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X