ஃபார்மா துறையில் 1.25 பில்லியன் டாலர் அன்னிய முதலீடு!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளூர் நிறுவனங்களை பெருமளவில் வளைத்துப் போட்டு வருவதைப் பற்றிய சலசலப்புகளுக்கு இடையேயும், இந்நிதியாண்டின் ஏப்ரல்-நவம்பர் காலகட்டத்தின் போது பார்மா துறையில் அந்நிய நேரடி முதலீடு சுமார் 1.25 பில்லியன் டாலரை எட்டி இரண்டு மடங்கை விட அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

2012 ஆம் ஆண்டு ஏப்ரல்-நவம்பர் காலகட்டத்தின் போது டிரக்ஸ் மற்றும் ஃபார்மாசூட்டிகல்ஸ் துறையில் அன்னிய முதலீடு சுமார் 581 மில்லியன் டாலராக இருந்தது என டிபார்ட்மென்ட் ஆஃப் இன்டஸ்ட்ரியல் பாலிஸி அண்ட் புரமோஷன் (டிஐபிபி) துறையின் சமீபத்திய தகவல் அறிக்கை கூறுகிறது.

தற்போது இயங்கி வரும் இந்திய ஃபார்மாசூட்டிக்கல் நிறுவனங்களில் முதலீடு செய்யும் அந்நிய முதலீட்டாளர்களுக்கு, முக்கிய கூறுகளில் எஃப்டிஐ உச்சவரம்பை 100 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக குறைக்கலாம் என்பது உள்ளிட்ட கெடுபிடியான விதிமுறைகளை டிஐபிபி முன்வைத்திருந்தாலும், அவற்றை யூனியன் கேபினெட் நிராகரித்து விட்டது.

ஃபார்மா துறையில் 1.25 பில்லியன் டாலர் அன்னிய முதலீடு!!

உள்ளூர் மருந்து நிறுவனங்களின் கையகப்படுத்துகைகள், நாட்டில் கட்டுபடியாகக்கூடிய விலையில் கிடைக்கக்கூடிய மருந்துகளின் புழக்கத்தை பாதிக்கக்கூடும் என்ற தன் கவலையையும் வெளிப்படுத்தியுள்ளது டிஐபிபி.

உயிர்காக்கும் மருந்துகளை உற்பத்தி செய்யும் இந்திய நிறுவனமான அகிலா ஸ்பெஷாலிட்டீஸை கையகப்படுத்திக் கொள்வதற்கென அமெரிக்க ஃபார்மா நிறுவனமான மைலான் இன்க் நிறுவனம் முன்வைத்துள்ள 5,168 கோடி ரூபாய் திட்ட அறிக்கைக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஷாந்தா பயோடெக்னிக்ஸ் நிறுவனம் பிரெஞ்சு ஃபார்மா நிறுவனமான ஸனோஃபி-அவென்டிஸினால் கையகப்படுத்தப்பட்டது உள்ளிட்ட இதர பல பெரிய கையகப்படுத்துகைகளும் அரங்கேறியுள்ளன. 2008 ஆம் ஆண்டின் போது, நாட்டின் மிகப்பெரும் மருந்து நிறுவனமான ரான்பாக்ஸி பிஎஸ்இ-1.30% -ஐ ஜப்பானிய நிறுவனமான டாய்ச்சி சாங்கியோ சுமார் 4.6 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது.

ஃபார்மா துறையில் 1.25 பில்லியன் டாலர் அன்னிய முதலீடு!!

பார்மா துறையைப் பொறுத்தவரையில், புதிய புராஜெக்ட்களில் தன்னியக்க ஒப்புதல் வழி மூலம் 100 சதவீத எஃப்டிஐயை இந்தியா அனுமதித்து வந்தாலும், ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களில் அந்நிய முதலீடுகளை எஃப்ஐபிபியின் (ஃபாரீன் இன்வெஸ்ட்மென்ட் புரொமோஷன் போர்டு) அங்கீகாரம் மூலமாக மட்டுமே அனுமதிக்கிறது.

 

நடப்பு நிதியாண்டின் இந்த எட்டு மாதங்களின் போது சிறப்பான எஃப்டிஐ வரத்துகள் காணப்பட்ட இதர துறைகள், சர்வீஸஸ் (1.46 பில்லியன் டாலர்), ஆட்டோமொபைல் (838 மில்லியன் டாலர்), கன்ஸ்ட்ரக்ஷன் (889 மில்லியன் டாலர்) மற்றும் கெமிக்கல்ஸ் (482 மில்லியன் டாலர்) ஆகியனவாகும்.

எனினும், 2012 ஆம் ஆண்டின் ஏப்ரல்-நவம்பர் காலகட்டத்தின் போது சுமார் 15.84 பில்லியன் டாலராக இருந்த ஒட்டுமொத்த எஃப்டிஐ, நடப்பு நிதியாண்டின் இதே காலகட்டத்தின் போது 2 சதவீதம் குறைந்து 15.45 பில்லியன் டாலராக இருந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FDI in pharma jumps to $1.25 billion during April -November period

Foreign direct investment in the pharma sector has more than doubled to $1.25 billion during April-November period of the fiscal.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X