இ-காமர்ஸ் துறையில் களம் இறங்கும் ட்விட்டர்! பேஸ்புக் பின்வாங்கியது..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சான் பிரான்சிஸ்கோ: ட்விட்டரினால் அறிமுகப்படுத்தப்பட்ட டிரெண்டிங் ஃப்யூச்சர்ஸ் திட்டதை போலவே அதன்போட்டி நிறுவனமான ஃபேஸ்புக்கும் அத்தகைய திட்டத்தை அறிமுகப்படுத்தியது, அதே வேளையில் ட்விட்டரும் ஃபேஸ்புக்கைப் போன்று இ-காமர்ஸ் துறையை நோக்கி படையெடுத்துள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் முன்பு ஈடுபட்ட ஃபேஸ்புக் நிறுவனம் அதன் உபயோகிப்பாளர்களிடையே அதற்கு அவ்வளவாக வரவேற்பு இல்லாத காரணத்தினால் பின்வாங்கிவிட்டது.

 

தற்போது பரிந்துரைக்கப்படும் இந்த புதிய சேவையின் ஸ்க்ரீன்ஷாட்டை ரீ/கோட் பதிவிட்டுள்ளது. இந்த படம் வெளியானதாகக் கருதப்படும் ஃபேன்ஸி.காம் என்ற இ-டெயிலிங் சைட், மைக்ரோ-ப்ளாக்கிங் சைட்டான ட்விட்டரின் ஆன்லைன் வர்த்தக குறிக்கோள்களை நிறைவேற்றும் நோக்கில் அதனுடன் கைகோர்த்துள்ள பார்ட்னர் என்ற வதந்தியும் நிலவி வருகிறது.

இ-காமர்ஸ் துறையில் களம் இறங்கும் ட்விட்டர்! பேஸ்புக் பின்வாங்கியது..

ஆனால், தற்போது இந்த சைட்டில் அந்த ஸ்க்ரீன்ஷாட் காணப்படவில்லை என்று என்டிடிவி கூறியுள்ளது. "ட்விட்டர் காமர்ஸ்" என்று காட்டும் சில ட்வீட்களும் அதன் வசம் உள்ளன. அதனை எக்ஸ்பாண்ட் செய்து பார்த்தால் அது "பை வித் அ ஃபேன்ஸி பட்டன்" என்று காட்டுகிறது. இதனை க்ளிக் செய்தால் விற்பனையை நிறைவு செய்யும் வகையில் ஷிப்பிங் முகவரி மற்றும் கட்டணத்தைப் பற்றிய தகவல்களை நிரப்பச் சொல்லிக் கேட்கும் ஒரு பக்கத்துக்கு நம்மை இட்டுச் செல்கிறது. மேற்கூறிய அனைத்திலும், ட்விட்டரே நமது ஹோஸ்ட் ஆக செயல்படுகிறது.

எப்போதும் போல், ட்விட்டரில் விற்கப்பட்ட பொருட்களின் கமிஷன் தகவல்கள் வெளியிடப்படவில்லை. மேலும், ஃபேன்ஸி.காம் என்ற சைட் ஒன்று மட்டும் தான் பார்ட்னராக செயல்பட்டு வருகிறதா என்பதும் நமது யூகத்துக்கே விடப்பட்டுள்ளது. இந்த முயற்சியை விவகாரமானது எனக் கருதும் நிபுணர்கள் இதன் உபயோகம், வருவாய் மற்றும் இது ஈட்டக்கூடிய லாபம் ஆகியவை இதனை தொடர்ந்து நடத்த போதுமானதாக இருக்காது என்றே எண்ணுகின்றனர். கடந்த நவம்பர் மாதத்தில் முதன் முதலாக வால் ஸ்ட்ரீட்டில் களமிறங்கிய ட்விட்டர் அதன் முதல் நாள் வர்த்தகத்தில் 73 சதவீதம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Twitter To Mark It's Footprint In E-Commerce

While Facebook introduced trending feature which was inspired by Twitter, the latter has made a foray into e-commerce much like its rival.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X