கார்களுக்கான புதிய பாதுகாப்பு விதிமுறைகள்!! க்ராஷ்-டெஸ்டை கட்டாயமாக்கும் இந்தியா..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டில் பிரபலமாக இருக்கும் சில கார்கள் ஐரோப்பாவில் நிகழ்த்தப்பட்ட பாதுகாப்பு சோதனையில் (Safety test) தோல்வியுற்றதையடுத்து இன்னும் ஒரு மாதத்திற்குள் பயணிகள் உபயோகிக்கும் வாகனங்களுக்கென குறைந்தபட்ச பாதுகாப்பு நியமங்கள் அடங்கிய புதிய விதிமுறைகளை தீர்மானிக்கவும், புதிய கார் அசெஸ்மென்ட் புரொக்ராம் ஒன்றை கொண்டு வரவும் அரசு திட்டமிட்டுள்ளது.

 

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இன்னும் மூன்று மாதங்களுக்குள் இந்த புதிய விதிமுறைகளைப் பற்றி அனைத்து பங்குதாரர்களுக்கும் தெரிவித்து, அதைப் பற்றிய கருத்துக்களை அறிந்து, அவற்றின் அடிப்படையில் தற்போதுள்ள விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்று திட்டமிட்டுள்ளது. "இன்னும் மூன்று மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்தவிருக்கும் புதிய வரைமுறைகளைப் பற்றிய திட்ட அறிக்கையை அனுப்பி வைக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்." என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஸ்டார் ரேட்டிங்

ஸ்டார் ரேட்டிங்

கனரக வாகன தொழிற்சாலைத் துறையின் உடன்படிக்கை மற்றும் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுக்கான விலைகளின் மீதான உயர்வு பற்றிய அத்துறையின் கருத்து ஆகியவற்றைக் கொண்டே இந்த மாற்றங்கள் செய்யப்படும். கார்களின் பாதுகாப்பு அளவைப் பொறுத்து அவற்றிற்கு ஸ்டார் ரேட்டிங்களை நிர்ணயிப்பதன் மூலம் தெளிவான முடிவெடுக்க நுகர்வோர்க்கு உதவவும் அரசு திட்டமிட்டு வருகிறது.

தொழிற்கூடம்

தொழிற்கூடம்

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முதலில் ஒரு பாதுகாப்பு சோதனையை கையாள ஒரு தொழிற்கூடம் கொண்டு வர வேண்டியது அவசியம், என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

திட்ட அறிக்கை

திட்ட அறிக்கை

நான்கு-சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கான ஐரோப்பிய பாதுகாப்பு நியமங்களுடன் ஒத்திசைந்தவாறு வடிவமைக்கப்பட்ட இந்திய நியமங்களைப் பற்றிய திட்ட அறிக்கையை அமைச்சகம் வெளியிடவுள்ளது.

க்ராஷ்-டெஸ்டிங்
 

க்ராஷ்-டெஸ்டிங்

நேஷனல் ஆட்டோமோட்டிவ் டெஸ்டிங் மற்றும் ஆர்&டி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் புராஜெக்ட்டினால் (என்ஏடிஆர்ஐபி) உருவாக்கப்பட்டு, இன்னும் 18-24 மாதங்களுக்குள் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுவதான க்ராஷ்-டெஸ்டிங் ஃபெஸிலிட்டி நடைமுறைக்கு வரும் வரையில் இந்த நியமங்களின் படி நடப்பது அவரவர் விருப்பத்துக்குரியது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனடி நடவடிக்கை

உடனடி நடவடிக்கை

இந்த ஃபெஸிலிட்டி தயாரானவுடன், இந்த விதிமுறைகளும் கட்டாயமாக்கப்பட்டுவிடும். "இந்தியாவில் இதுவரைக்கும் டெஸ்ட் ஃபெஸிலிட்டி என்ற ஒன்று இல்லாதிருந்ததால், முதலில் இதை தன்னிச்சையான நடவடிக்கையாகவே அறிமுகப்படுத்தவுள்ளோம்," என்று மற்றொரு நெடுஞ்சாலை அமைச்சக அதிகாரி கூறியுள்ளார்.

விவாதம்

விவாதம்

இந்த விதிமுறைகளை பின்பற்றுவதும் பின்பற்றாததும் நிறுவனங்களைப் பொறுத்தது, ஆனால் தாங்கள் இந்திய விதிமுறைகளை பின்பற்றி வருவதாகக் கூறுவதாவது தொடராது. இந்தியாவில் விற்கப்படும் கார்களின் கட்டமைப்பு ஒழுங்கை வலுப்படுத்தும் நோக்கிலான இந்த புதிய விதிமுறைகளை, சொஸைட்டி ஆஃப் இந்தியன் ஆட்டோமொபைல் மான்யூஃபாக்சரர்ஸ் (எஸ்ஐஏஎம்) உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களுடனும் விவாதித்த பின்னரே அமைச்சகம் முடிவு செய்யும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Government plans new car safety norms in 3 months

The government plans to finalise a new set of minimum safety standards for passenger vehicles and a New Car Assessment Programme within a month, after some popular cars in the country failed safety tests done in Europe.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X