ஏர்டெல் நிறுவனத்தின் ஆப்பிரிக்கா செயல்பாடுகள் மறுபிறவி!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: வாடிக்கையாளர் எண்ணிக்கை அடிப்படையில் உலகின் நான்காவது பெரிய நிறுவனமான பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் ஆப்ரிக்கா நாட்டின் செயல்பாடுகள் முடக்கும் தருவாயில் இருந்தது. ஆனால் இப்போது இந்நிறுவனம் தனது நிர்வாக அமைப்பை மறுவடிவமைக்க உள்ளதாகவும் 17 ஆப்பிரிக்க நாடுகளை நான்கு வர்த்தகத்திறன் மிக்க பிரிவுகளாக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

ஜாம்பியா, காங்கோ-பிராஜாவில், மலாவி, புர்கினா ஃபாஸோ, நிஜர், சாட், மடகாஸ்கர் மற்றும் செஷெல்ஸ் உள்ளிட்ட நாடுகளை அடக்கிய பிரிவுக்கு வி.ஜி.சோமசேகர் செயல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஏர்டெல் செய்தி வெளியிட்டுள்ளது. அவர் இதற்கு முன் ஏர்டெல்லின் அதிக வருமானம் ஈட்டித்தரும் உகாண்டா நாட்டுப் பிரிவின் இயக்குனராக 2010ஆம் ஆண்டு முதல் பதவிவகித்து வந்தார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிறிஸ்டோஃப் ஸூலே

கிறிஸ்டோஃப் ஸூலே

கிறிஸ்டோஃப் ஸூலே கானா, கென்யா, டான்சானியா, கெபான், உகாண்டா, சியரா லியோன் மற்றும் ருவாண்டா நாடுகளை உள்ளடக்கிய பிரிவின் செயல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

செகுன் ஒகுன்சான்யா

செகுன் ஒகுன்சான்யா

செகுன் ஒகுன்சான்யா மற்றும் லூயிஸ் லுபாலா ஆகிய இருவரும் முறையே நைஜீரியா மற்றும் காங்கோ குடியரசு பிரிவின் தலைவர்களாக தொடர்வார்கள்.

கிறிஸ்டியன் டி ஃபாரியா

கிறிஸ்டியன் டி ஃபாரியா

அனைத்து பிரிவுகளின் தலைவர்களும் ஏர்டெல் ஆப்ரிக்காவின் தலைமை நிர்வாகி கிறிஸ்டியன் டி ஃபாரியாவின் கீழ் பணியாற்றுவார்கள். இந்த மறு வடிவமைப்பு கடந்த மாதங்களில் இலங்கையும் வங்காளமும் தெற்காசிய செயல்பாடுகளுக்குள் கோபால் விட்டல் தலைமையின் கீழ் கொண்டுவரப்பட்டதை அடுத்து நடந்துள்ளது.

மனோஜ் கோஹ்லி

மனோஜ் கோஹ்லி

இந்த மறுவடிவமைப்பு முன்பு இருந்த பன்னாட்டு வர்த்தக நிர்வாகி மனோஜ் கோஹ்லி -யின் கீழ் பல்வேறு கலாச்சார மற்றும் மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டிருந்ததிலிருந்து மாற்றமடைந்தது. அப்போது நைஜீரியா, ஆங்கிலம் பேசும் நாடுகள் மற்றும் ஃப்ரெஞ்சு பேசும் நாடுகள் என தனிப்பிரிவுகளாக இருந்தன.

நிர்வாக மறுசீரமைப்பு

நிர்வாக மறுசீரமைப்பு

இந்த புதிய பிரிவுகள் அந்நிறுவன உள்நாட்டு சந்தை அமைவிடத்தைப் பொறுத்து பிரிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bharti Airtel recasts Africa operations

Bharti Airtel Ltd., the world’s fourth-largest telecom service provider by subscribers, announced a recast of its Africa operations, dividing the 17 countries in the continent into four strategic business units (SBU).
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X