நிகர லாபம் 16% உயர்ந்தது!! வளமான வளர்ச்சி பாதையில் காக்னிசன்ட்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான காக்னிசன்ட் கடந்த வாரம் தன்னுடைய 4-வது காலண்டின் முடிவுகளை அறிவித்தது, இந்த காலாண்டு முடிவில் சுமார் 324.3 மில்லியன் டாலர் இலாபமாக பெற்றுள்ளது இந்நிறுவனம். இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் வந்த இலாபத்தை விட, 16.3% அதிகமாகும்.

 

கடந்த காலாண்டின் 2,355 பில்லியன் டாலர்களாக இருக்கும் வருமானமும் 2.2% அதிகரித்துள்ளது மற்றும் கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட 20.9% சதவிகிதம் அதிகமாக உள்ளது. இந்த காலாண்டிற்கான நிகர ஆட்சேர்ப்பு சுமார் 5,000 ஆகவும், இதனால் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 1,71,400 ஆகவும் மாறியுள்ளது.

சிஇஓ நின்றி

சிஇஓ நின்றி

'எங்களுடைய 20-வது ஆண்டு விழாவை கொண்டாடப் போகும் நாங்கள், எங்கள் மேல் நம்பிக்கை வைத்த வாடிக்கையாளர்களுக்கும், எங்களுடைய வளர்ச்சி மற்றும் வெற்றியில் பங்கெடுத்துக் கொண்டு உறுதுணையாக இருந்தவர்களுக்கும் மற்றும் இந்த சாதனையை செய்வதில் மிகவும் முக்கியமான பங்கு வகித்த எங்களுடைய பயனாளிகளுக்கும் நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்' என்று காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான திரு. பிரான்சிஸ்கோ டிசௌஸா குறிப்பிட்டார்.

பங்கு பிரிப்பு

பங்கு பிரிப்பு

இந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுமம் (Board of Directors) அதன் கிளாஸ் யு வகை சாதாரண பங்குகளுக்கு 100% பங்கு டிவிடென்ட் வழங்குமாறு உருவாக்கும் வகையில், 2-க்கு-1 என்ற அளவில் பங்குகளை பிரிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிறுவனத்தின் வளர்ச்சி
 

நிறுவனத்தின் வளர்ச்சி

'2013-ம் ஆண்டில் எங்களுடைய வளர்ச்சி பல்வேறு தொழில்கள், புவியியலமைப்புகள் மற்றும் சேவைப் பிரிவுகள் என பரவலான வகைகளில் இருந்தது' என்று காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைவர் திரு.கோர்டன் கோபர்ன் தெரிவித்தார்.

சிறப்பான செயல்பாடு

சிறப்பான செயல்பாடு

அதிக திறன் மற்றும் உற்பத்தி செயலபாடுகளில் சிறப்பாக நடந்து கொள்ளுங்கள் மற்றும் எதிர்கால வெற்றிக்கான தேவைகள் மற்றும் வியாபார வகைகளை உருவாக்குவதில் மாறுபட்டு நடந்து கொள்ளுங்கள்' என்ற பெயர்களில் தற்போது எங்களுடைய வாடிக்கையாளர்களிடம் நடந்து வரும் முயற்சிகளால் இந்த உறுதியான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அடுத்தகட்ட வளர்ச்சி திட்டம்

அடுத்தகட்ட வளர்ச்சி திட்டம்

எங்களுடைய உறுதியான துறை சார்ந்த சேவைகளுடன், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பிளாட்பார்ம் அடிப்படை சேவை ஆகியவற்றில் கவனம் செலுத்தியதும் கைகோர்த்துக் கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு அர்த்தமுள்ள வகையில் வியாபாரத்தை மேலும் தொழில்நுட்பம் அதிகம் பயன்படுத்தும் விஷயமாக மாற்றியுள்ளனர்.

2014ஆம் ஆண்டு

2014ஆம் ஆண்டு

2013-ம் ஆண்டில் நாங்கள் பார்த்த இந்த தேவைக்கான சூழல், 2014-ம் ஆண்டிலும் தொடரும் என்றும் மற்றும் நாங்கள் அவற்றை பிடிக்கும் வகையில் நல்ல நிலையில் இருப்போம் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்'.

20.4% வளர்ச்சி

20.4% வளர்ச்சி

2013-ம் ஆண்டு முழுமைக்குமாக 8.843 பில்லியன் டாலர்கள் வருமானம் அதிகரித்து, 2012-ம் ஆண்டை விட 20.4 சதவிகிதிம் உயர்வு பெற்றுள்ளது. 2012-ம் ஆண்டின் 1.05 பில்லியன்களாக இருந்த நிகர இலாபம், இந்த ஆண்டில் 1.23 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

4ஆம் காலாண்டு

4ஆம் காலாண்டு

அடுத்த ஆண்டில், 2013-ம் ஆண்டை விட குறைந்த பட்சம் 16.5% அதிகரித்து, வருமானம் 10.3 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்று காக்னிசன்ட் நிறுவனம் வழி செய்துள்ளது. 2014-ம் ஆண்டின் முன்றாம் காலாண்டில் வருமானம் 2.42 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்று இந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cognizant Q4 profit up 16.3%; company announces two-for-one stock split

IT services firm Cognizant on Wednesday announced its fourth quarter results, posting a profit of $324.3 million, up 16.3% from the same quarter in the previous year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X