இந்தியாவை ரகசியமாக உளவு பார்க்கும் சீனா!! உதவி செய்த ஹுவெய் நிறுவனம் சிக்கியது..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பிஎஸ்என்எல் நெட்வொர்க்குகளை பாதிப்புக்குள்ளாக்கியதாக சீனாவின் தொலைத்தொடர்புக் கருவிகள் தயாரிப்பாளரான ஹுவெய் நிறுவனம் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அரசு இதன் மீதான விசாரனையை துவங்கியுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

 

பாரத் சன்சார் நிகம் லிமிடெட் நிறுவன தொலைத்தொடர்புக் கட்டமைப்புகளை, சீன நிறுவனமான ஹுவெய் சட்டவிரோதமாக அத்துமீறிப் பயன்படுத்திய சம்பவம் கவனத்திற்கு வந்துள்ளது. இது குறித்த விசாரனையை மேற்கொள்ள அரசு அமைச்சகங்களுக்கு இடையேயான ஒரு குழுவை நியமித்துள்ளது என தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப இணையமைச்சர் கில்லி கிருபாராணி மக்களவையில் தெரிவித்தார்.

ஹுவெய் நிறுவன பொறியாளர்களின் இந்த அத்துமீறலால் ஆந்திர மாநிலத்தின் கடற்கரைப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள மொபைல் டவர்கள் பாதிப்புக்குள்ளானதாக சில மாதங்களுக்கு முன் புகார்கள் வந்துள்ளன. அமைச்சரின் எழுத்து மூலமான பதிலில் இது குறித்த விவரங்கள் எதுவும் தரப்படவில்லை.

பிஎஸ்என்எல் மற்றும் ZTE

பிஎஸ்என்எல் மற்றும் ZTE

பிஎஸ்என்எல் சுமார் ஒரு கோடி இணைப்புகளுக்கும் மேலான ஒரு கட்டமைப்பு விரிவாக்க ஒப்பந்தத்தை மற்றொரு சீன நிறுவனமான ZTE நிறுவனத்துடன் கடந்த 2012 ஆம் வருடம் வழங்கியிருந்த்து.

ஏலம்

ஏலம்

இந்த பொருட்கள் விநியோகத்திற்கான ஏலத்தில் ஹவாய் நிறுவனம் ஒரு பெரும் போட்டியாளராக இருந்தாலும் ZTE தர முன்வந்த விலைக்கு கருவிகளைத் தர மறுத்துவிட்டது.

சோதனை செய்ய வேண்டும்..

சோதனை செய்ய வேண்டும்..

சீன நிறுவனங்கள் தொலைதொடர்பு கருவிகள் மற்றும் மென்பொருள்களை இந்திய நிறுவனங்களுக்கு வழங்குவதில் முன்னிலை வகிப்பதால், இது தொடர்பான பாராளுமன்றக் குழு, நாட்டின் பாதுகாப்புக் கருதி இந்தக் கருவிகளை சோதனை செய்யுமாறு அரசுக்குப் பரிந்துரை செய்தது.

ஆமெரிக்கா போன்று செயல்படும் இந்தியா
 

ஆமெரிக்கா போன்று செயல்படும் இந்தியா

மேலும் இத்தகைய தொலைத் தொடர்புக் கருவிகளால் பாதுகாப்பிற்கு ஏற்படக்கூடிய மோசமான விளைவுகளைக் கருத்தில் கொண்டு அமெரிக்கவினையொத்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என அரசுக்கு அக்குழு பரிந்துரை செய்தது.

உளவு பார்க்கும் சீனா

உளவு பார்க்கும் சீனா

கடந்த 2012 ஆம் வருடம், அமெரிக்காவின் சட்ட வடிவமைப்புக் குழு ஒன்று, சீன தொலைத்தொடர்பு நிறுவனங்களால் நிறுவப்பட்டுள்ளத் தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் மூலம் வேவு பார்க்கும் வேலைகள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அதனால் ஹவாய் மற்றும் ZTE போன்ற நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் வேறு நிறுவனங்களை அறிவுறுத்தியது.

இந்தப் புகார்களை இரு சீன நிறுவனங்களும் திட்டவட்டமாக மறுத்துள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Huawei allegedly hacked BSNL network: govt

Chinese telecom equipment maker Huawei allegedly hacked state-owned BSNL’s network and the government is investigation the matter, Parliament was informed last week.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X