உலகின் 50 வலுவான வர்த்தகப் பெண்களில் இரண்டு இந்தியர்கள்!! ஃபார்ச்சுன் நாளிதழ்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: பெப்சிகோ நிறுவனத்தின் தலைவர் இந்திரா நூயி அவர்களும், ஐசிஐசிஐ வங்கியின் மேலாண்மை இயக்குனர் சந்தா கோச்சாரும் உலகின் மிக வலுவான வர்த்தகப் பெண்களின் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக ஃபார்சுன் இதழ் தெரிவித்துள்ளது. அவர்கள் புதிய பகுதிகளில் காலடி வைத்து உலகை முன்னோக்கி அழைத்துச்சென்று தங்கள் நாட்டின் பெண்களின் பெருமையை உணர்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 

ஃபார்ச்சுன் இதழின் உலகின் வல்லமை வாய்ந்த 50 பெண்களின் பட்டியல் கடந்த வாரம் வெளியிட்டது. இப்பட்டியலின் முதல் இடத்தில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத் தலைவர் மேரி பார்ரா இடம் பெற்றுள்ளார். இவர் பன்னாட்டு ஆட்டோமொபைல் நிறுவனத்தை நடத்தும் முதல் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெனரல் மோட்டார்ஸ்

ஜெனரல் மோட்டார்ஸ்

எலக்ட்ரிகல் எஞ்சினியரான இவர் தன்னுடைய பணிகாலம் முழுவதும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் செலவிட்டு ஆறு கண்டங்களிலுள்ள 396 துணை நிறுவனங்களிலிருந்து சுமார் 2,12,000 பணியாட்களை மேற்ப்பார்வையிடுகிறார்.

பெண்கள் நம் கண்கள்

பெண்கள் நம் கண்கள்

"புதிய பாதைகளைத் தேர்ந்தெடுத்து தங்கள் நாட்டுப் பெண்களைக் கவர்ந்த இவர்கள், உண்மையாக, உலகை வழிநடத்திச் செல்கிறார்கள்" என அந்த இதழ் தெரிவித்தது.

இந்திரா நூயி

இந்திரா நூயி

இப்படியலில் இந்திரா நூயி இரண்டாவது இடத்தையும், கோச்சார் பதினெட்டாவது இடத்தையும் பிடித்துள்ளதோடு இப்பட்டியலிலுள்ள இரண்டு இந்தியப் பெண்கள் ஆவர். 58 வயதான நூயி அமெரிக்காவை தவிர்த்து உலக நாடுகளில் பெப்சிகோவின் விற்பனையை இருமடங்காக தான் பதவியேற்ற 7 வருடங்களில் சாதித்துள்ளார் என ஃபார்சுன் நாளிதழ் தெரிவித்துள்ளது.

நூயின் சாதனை
 

நூயின் சாதனை

அந்நிறுவனம் பன்னாட்டு சந்தைகளின் மூலமாக தன் வருமானத்தில் பாதியை அதாவது 65.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியுள்ளது.

உலக நாடுகளில் கால் தடம்

உலக நாடுகளில் கால் தடம்

இந்தியாவில் பிறந்த இந்திரா நூயி 2012 ஆம் ஆண்டு முதல் தன் நிறுவன வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தாங்கள் அறிமுகப்படுத்தவிருக்கும் பொருட்கள் இருக்குமாறு உறுதிசெய்ததோடு, புதிய கண்டுபிடிப்பு மையங்கள் ஷாங்காய், ஹாம்பர்க் மற்றும் மான்டெர்ரெ (மெக்சிகோ) ஆகிய இடங்களில் உருவாக காரணமானார்.

சந்தா கோச்சார்

சந்தா கோச்சார்

52 வயதான கோச்சார் 124 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துக்களையும் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் 3,588 கிளைகளையும் கொண்ட இந்தியாவின் இரண்டாவது பெரும் வங்கியை வழி நடத்திச் செல்பவராவார்.

உலகெங்கும் வங்கி கிளைகள்

உலகெங்கும் வங்கி கிளைகள்

ஐசிஐசிஐ வங்கி தன் பெரும்பாலான நடவடிக்கைகளை இந்தியாவில் மேற்கொண்டாலும், 19 நாடுகளில் செயல்பட்டுவரும் நிறுவனங்களின் மூலமாக வெளிநாட்டு இந்தியர்கள் தங்கள் குடும்பங்களுக்கு செய்யும் பணப்பரிமாற்ற வர்த்தகத்தை சுறுசுறுப்பாகச் செய்துவருகிறது.

கின்னி ரோமெட்டி

கின்னி ரோமெட்டி

இந்தப்பட்டியலில் ஐபிஎம் தலைவர் கின்னி ரோமெட்டி இரண்டாம் இடத்திலும், எரிசக்தி நிறுவனமான பெட்ரோபாஸ்-ன் தலைவர் மரியா தஸ் க்ரா சில்வா 4ஆம் இடத்திலும், ஃபேஸ்புக் நிர்வாகி ஷெரில் சாண்ட்பர்க் (11), யாஹூ தலைவர் மற்றும் நிர்வாகி மரிஸ்ஸா மேயர் (14) மற்றும் கூகுள் துணைத் தலைவர் (விளம்பரம் மற்றும் வர்த்தகம்) சூசன் வாஜ்சிகி (20) ஆகிய இடங்களிலும் உள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nooyi, Kochhar in Fortune's 50 most powerful businesswomen list

PepsiCo CEO Indra Nooyi and ICICI Bank Managing Director Chanda Kochhar are among Fortune magazine's list of 50 most powerful women in business.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X