ஸ்பெக்ட்ரம் ஏலம் ரூ56,554 கோடியை எட்டியது!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: அரசின் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஏலத்தின் ஏழாவது நாளான இன்று நிறுவனங்கள் சற்று நிதானமாக ஏலத்தைக் கையாண்டதோடு 1800 மெகாஹெர்ட்ஸ் மற்றும் 900 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளுகான ஏலத் தொகை 56,554 கோடி ரூபாய்க்கு 43 சுற்றுகளில் உயர்த்தின. அதில் அரசின் வருவாய் மட்டும் 16,750 கோடியாகும்.

 

900 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசைக்கு மிகுந்த போட்டி இருந்ததுடன் டெல்லி பகுதியில் சேவை வழங்க அதிக வரவேற்பைப் பெற்றிருந்தது. டெல்லியில் உள்ள 16 பகுதிகளுக்கு 21 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதனால் ஒரு அலைவரிசையின் விலையானது 67 சதவிகிதம் உயர்ந்து நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக 574.08 கோடி ரூபாயை எட்டியது.

மும்பையில் 900 மெகாஹெர்ட்ஸ் ஏல விலை 563.09 கோடியாக 71 சதவிகிதம் உயர்ந்து காணப்பட்டது. கொல்கட்டாவில் அது 54 சதவிகிதம் உயர்ந்து 192.71 கோடியாக இருந்தது. மும்பை மற்றும் கொல்கட்டாவில் 43வது சுற்றின் போது வரவேற்பு சற்று குறைவாகவே காணப்பட்டது.

விலை உயர்வு..

விலை உயர்வு..

1800 மெகாஹெர்ட்ஸ் ஏலம் அஸ்ஸாம், மேற்கு வங்காளம் மற்றும் பீகாரில் அதிக தேவையைக் கண்டதோடு அடுத்த சுற்றுகளில் விலை உயரவும் என நம்பப்படுகிறது.

43வது சுற்று

43வது சுற்று

எனினும் 43வது சுற்றின் முடிவில் 1800 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசைக்கான ஏல விலை, டெல்லி, குஜராத், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உயர்வைக் கண்டதுடன் அதிக தேவையும் காணப்பட்டது.

ஆரோக்கியமான ஏலம்

ஆரோக்கியமான ஏலம்

"மெதுவான மற்றும் திடமான ஏலம், மிகவும் ஏற்றத்தாழ்வான தேவைகள் மற்றும் முன்வைக்கப்பட்ட ஏல தொகுதிகள், ஏலம் அளவுக்கு அதிகமாக இருப்பதைக் காட்டுகிறது" என மும்பையை சேர்ந்த ஒரு பன்னாட்டு தொலைத்தொடர்பு தரகு வல்லுநர் தெரிவித்ததார்.

ஏர்டெல், வோடபோன், ஐடியா
 

ஏர்டெல், வோடபோன், ஐடியா

பாரதி ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் ஏலத்தில் பங்கெடுத்துக்கொண்டதொடு 900 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசைக்குப் கடுமையா போட்டியிட்டுக் கொண்டன.

பங்கு நிலவரம்

பங்கு நிலவரம்

இந்த ஏலத்தின் போது ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் 0.63 சதவிகிகிதம் வீழ்ச்சியடைந்து 314.45 ரூபாய்க்கும், ஐடியா-வின் பங்குகள் செவ்வாயன்று 8 சதவிகிதம் வரை உயர்ந்து பின் 4.6 சதவிகிதம் வீழ்ச்சியடைந்து 144.20 ரூபாய்க்கும் விற்றன. ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் 0.89 சதவிகிதம் உயர்ந்து 125.35 ரூபாய்க்கு விற்றது.

3ஆம் முறையாக ஏலம்

3ஆம் முறையாக ஏலம்

நவம்பர் 2012 மற்றும் மார்ச் 2013 ஏலங்களைத் தொடர்ந்து கடந்த 15 மாதங்களில் 2ஜி ஏலத்தை அரசு நடத்துவது இது மூன்றாவது முறையாகும். எனினும் கடந்த இரு முறை ஏலம் மிகவும் குறைவாக மூன்றில் ஒரு பங்கு மட்டுமே நடந்ததால் தோல்வியாகக் கருதப்பட்டது.

நடப்பு கணக்கு பற்றாக்குறை

நடப்பு கணக்கு பற்றாக்குறை

ஏலத்திலிருந்து கிடைக்கும் வருவாயை கொண்டு, நடப்பு கணக்கு பற்றாக்குறையை 5 சதவிகிதத்திற்குள் வைக்க உதவும் என நிதிஅமைச்சகம் தெரிவித்தது. (உங்க முடிவு எல்லாம் நல்லாதான் இருக்கு ஆன பினிஷிங் சரி இல்லையே)

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Spectrum auction takes off from Rs 56,554 crore

spectrum auction on Monday entered the 43rd round of bidding on seventh day after starting off from Rs 56,554 crore in terms of value, ensuring minimum revenue of about Rs 16,750 crore in the current fiscal.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X