பிரேசிலில் இன்ஃபோசிஸ் விரிவாக்கம்!! புதிய விநியோக மையம்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரேசில்: லத்தீன் அமெரிக்காவில் தனது செயல்பாட்டை விரிவாக்கம் செய்யும் விதமாக, இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அப்ளிக்கேஷன் மேனேஜ்மென்ட் சேவைகளை வழங்கக்கூடிய விநியோக மையம் ஒன்றை பிரேசிலில் உள்ள அராராகுவாராவில் நிறுவப்படும் என கடந்த வாரம் அறிவித்துள்ளது.

பிரேசிலில் சுமார் 100 இருக்கைகளுடன் அமைக்கப்படவுள்ள இந்த மையம் முதல் கட்டமாக, 25 ஊழியகளுடன், உலகின் முன்னணி ஆரஞ்சு பழச்சாறு உற்பத்தியாளரான சிட்ரோஸ்கோ நிறுவனத்துக்கான ஸாப் அப்ளிக்கேஷன் மேனேஜ்மென்ட் சேவைகளை வழங்கவுள்ளது.

1,700 ஊழியர்கள்

1,700 ஊழியர்கள்

"இந்த புதிய மையத்தின் துணையோடு, இன்ஃபோசிஸ் மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் பிரேசில், கோஸ்டா ரிக்கா, ப்யூர்ட்டொ ரிக்கோ, மெக்ஸிகோ மற்றும் அர்ஜென்டினா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளில் சுமார் 1,700 ஊழியர்களுடன் தங்கள் செயல்பாடுகளை மேலும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளன" என்று இந்தியாவின் இரண்டாவது பெரிய மென்பொருள் ஏற்றுமதியாளரான இந்நிறுவனம் தனது தெரிவித்துள்ளது.

ஏன் பிரேசில்?

ஏன் பிரேசில்?

அரசினால் உருவாக்கப்பட்டுள்ள சாதகமான வர்த்தக சூழல் மற்றும் பன்முகத் திறமைகளுடன் கூடிய பணியாளர்கள் அபரிமிதமாக கிடைக்கக்கூடிய வாய்ப்பு ஆகியவையே இந்த புதிய மையத்தை அமைப்பதற்கான உகந்த இடமாக பிரேஸிலை தேர்ந்தெடுக்க வித்திட்டன என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

இஆர்பி சிஸ்டம்ஸ்

இஆர்பி சிஸ்டம்ஸ்

மேலும் இம்மையம் ஸாப் இஆர்பி சிஸ்டம்ஸ் உள்ளிட்ட முக்கிய பிசினஸ் ஆபரேஷன்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய அப்ளிக்கேஷன் மேனேஜ்மென்ட் சேவைகளை பிரேஸிலைச் சேர்ந்த இதர வாடிக்கையாளர்களுக்கும் வழங்கவிருக்கிறது.

லத்தீன் அமெரிக்க வாடிக்கையாளர்கள்

லத்தீன் அமெரிக்க வாடிக்கையாளர்கள்

"பிரேசிலில் அமைக்கப்படவிருக்கும் இந்த புதிய மையம் எங்களின் அனைத்து விநியோக மையங்களையும் இணைக்கும் உலகளாவிய நெட்வொர்க்கின் முக்கிய அங்கமாகத் திகழும். எங்களின் லத்தீன் அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு புதுமையான மற்றும் சிறப்பான வளர்ச்சியை வழங்கக்கூடியவாறு எங்களின் ஆற்றலை வலுப்படுத்தும்," என்று பிரேசில் இன்ஃபோசிஸின் கன்ட்ரி ஹெட்டாகிய க்ளாடியோ எல்சாஸ் கூறியுள்ளார்.

5 வருட செயல்பாடு

5 வருட செயல்பாடு

இன்ஃபோசிஸ் 2009 ஆம் ஆண்டிலிருந்து பிரேசிலில் இயங்கி வருகிறது. இங்கு இந்நிறுவனம் மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் சுமார் 700-க்கும் மேற்பட்ட நபர்களை பணியமர்த்தியுள்ளன.

ஆர்வம் காட்டும் இந்திய நிறுவனங்கள்

ஆர்வம் காட்டும் இந்திய நிறுவனங்கள்

கடந்த சில காலமாக, இந்திய ஐடி நிறுவனங்கள் தென் அமெரிக்கப் பகுதிகளில் தங்களின் பிபிஓக்கள், கேபிஓக்கள் மற்றும் கால் சென்டர்களைத் தொடங்குவதில் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றன. அவ்வாறு தொடங்கப்படும் மையங்கள், இதற்கு அருகிலுள்ள வட அமெரிக்க பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படக்கூடிய சேவைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும் என்பதே இதன் பின்னணியிலுள்ள இரகசியமாகும். மேலும் இது அவர்களின் ஊழியர்களுக்கான விசா தேவைகளைக் குறைத்து, அதன் மூலம் செலவையும் குறைக்க உதவும்.

பிபிஒ, கேபிஒ

பிபிஒ, கேபிஒ

வட அமெரிக்கா, இந்திய ஐடி-ஐடிஇஎஸ் துறைகளின் வருவாயான சுமார் 108 பில்லியன் அமெரிக்க டாலரில் சுமார் 60 சதவீதத்துக்கும் மேலான பங்களிப்பை வழங்கி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys to set up delivery centre in Brazil

Expanding its presence in Latin America, software services major Infosys on Thursday said it would establish a delivery centre in Araraquara (Brazil), which will deliver application management services for clients.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X