இந்தியாவில் குடியிருப்பு சொத்துக்களின் விலை நிலை என்ன??

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: குடியிருப்பு சொத்துக்களின் விலைகள் 2013ஆம் ஆண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடுகையில், அக்டோபர்-டிசம்பர் காலாண்டின் போது சுமார் 16 நகரங்களில் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

 

அந்த ஆய்வின் படி அதாவது டேராடூனில் 1.1% முதல் நாக்பூரில் 8% வரை அதிகரித்திருப்பதைக் காண முடிகிறது. எட்டு நகரங்களில் இவ்விலைகள் குறைவடையும் போக்குடன் திகழ்ந்தது கொச்சியில் (-1.2)% முதல் விஜயவாடாவில் (-3.6)% வரை குறைவடைந்திருக்கிறது.

மும்பை, லூதியானா

மும்பை, லூதியானா

மும்பை மற்றும் லூதியானா ஆகிய இரு நகரங்களிலும் இவ்விலைகள் எவ்வித மாற்றமின்றி நிலையாக இருந்திருக்கிறது என்று நேஷனல் ஹவுஸிங் பாங்க் (என்ஹெச்பி) சார்பில் தயாரிக்கப்பட்ட ரெஸிடென்ஷியல் இன்டெக்ஸ் கூறுகிறது.

13 நகரங்கள்

13 நகரங்கள்

எனினும், 2012 அக்டோபர்-டிசம்பர் தொடங்கி கடந்த ஒரு வருடத்தில்,குடியிருப்பு சொத்துக்களின் விலைகள் சுமார் 13 நகரங்களில் அதிகரித்தும், சுமார் ஏழு நகரங்களில் வீழ்ச்சியடைந்தும் காணப்பட்டுள்ளன.

டெல்லி

டெல்லி

2013 அக்டோபர்-டிசம்பர் காலகட்டத்தின் போது டெல்லியில் குடியிருப்புகளின் விலைகள் அதற்கு முந்தைய காலாண்டில் இருந்ததைக் காட்டிலும் சுமார் 3.1% அதிகரித்துள்ளன. எனினும், கடந்த ஓராண்டில், குடியிருப்புகளின் விலைகள் சுமார் 0.5% வரை அதிகரித்துள்ளன. கடைசி இரண்டு காலாண்டுகளில் நிலவி வந்த இவ்விலைகளின் வீழ்ச்சியடையும் போக்கை ஒருவழியாக டெல்லி மாற்றியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.

பூனே, சென்னை
 

பூனே, சென்னை

ஆனால், மும்பையில் குடியிருப்பு சொத்துக்களின் விலை கடந்த மூன்று காலாண்டுகளாக மாற்றம் ஏதுமின்றி நிலையாகவே இருந்துள்ளன. 2013 ஜனவரி-மார்ச் காலாண்டின் போது விலைகள் அதிகரித்த காரணத்தினால் இங்கு சுமார் 2.3% வருடாந்தர அதிகரிப்பு இருந்துள்ளது. இதே போல், பூனே மற்றும் சென்னை ஆகிய நகரங்களிலும் இவ்விலைகள் அதிகரித்த வண்ணமே இருந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Residential realty prices rise in 16 cities

The prices of residential properties have shown an increasing trend in 16 cities in October-December quarter, 2013 — ranging from 1.1% in Dehradun to 8% in Nagpur — compared to the July-September quarter. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X