கருப்புப்பண மோசடிகளை எதிர்கொள்ள புதிய நெறிமுறைகள்!! ஒசிஇடி..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாரிஸ்: உலகளாவிய பொருளாதார அமைப்பான, உலக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு (OECD) கடல் கடந்த வரிஏய்ப்பு மற்றும் கருப்புப்பண மோசடிகளை எதிர்கொள்ள முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய உக்தியை வெளியிட்டுள்ளது. இதற்கு ஒத்துழைக்க இந்தியாவும் சம்மதித்துள்ளது.

 

"உலக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு (OCED), இந்த புதிய நெறிமுறைகளை ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்களின் பரிந்துரைக்காக பிப்ரவரி மாதம் 22-23 தேதிகளில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடக்கவுள்ள சந்திப்பின்போது அதிகாரப்பூர்வமாக வழங்கும்" என அந்த அமைப்பு தெரிவித்தது. இந்த அமைப்பின் பொருளாதாரக் கொள்கைகளை உலகெங்கிலும் 120 நாடுகள் பின்பற்றுகின்றன.

ஜி-20 நாடுகள்

ஜி-20 நாடுகள்

"ஜி-20 நாடுகள் அந்த அமைப்பை தன்னிச்சையான விவரப் பரிமாற்றங்களுக்கான ஒரு நெறிமுறையை உருவாக்க 2013ஆம் ஆண்டில் அழைப்பு விடுத்திருந்தன. இது உலகளாவிய ஒரு வெளிப்படையான வரி விதிப்பை உண்டாக்க ஒரு உந்துதலாக இருக்கும்" என அந்த அமைப்பு தெரிவித்தது.

இந்தியா எப்வோ ரெடி

இந்தியா எப்வோ ரெடி

உலக நாடுகளுக்கு இடையேயான வரி அதிகார அமைப்புகள் விவரங்களைப் தானாகவே பகிர்ந்துகொள்ள வழிவகை செய்யும் இந்த நெறிமுறை ஒப்பந்தத்தில் இந்தியா இரண்டாண்டுகளுக்கு முன்பாகவே கையெழுத்திட்டிருந்தாலும், இந்த புதிய நெறிமுறைகள் அமல்படுத்தப்பட்டவுடன் புதிய விதிகளைப் பின்பற்றும்.

கருப்புப் பணம்
 

கருப்புப் பணம்

தலைநகர் டெல்லியில் உள்ள ஒரு மூத்த நிதி அமைச்சக அதிகாரி இதுகுறித்துப் பேசுகையில், இந்த புதிய நெறிமுறைகள் தானாகவே நிகழும் விவரப் பரிமாற்றங்களை எளிதாக்கி கருப்புப் பண மற்றும் வரி ஏய்ப்பு மோசடிகளை வெளிக் கொணர உதவும் என்றார்.

பாரிஸ்

பாரிஸ்

பாரிஸ் நகரில் தலைமயிடமாகக் கொண்ட இந்த அமைப்பின் தகவல்கள் படி இந்த புதிய விதிகள் பரிமாற்றத்தில் உள்ள பழைய தகவல்களின் அடிப்படையில் அமைந்தது என்பது குறிப்பிடதக்கது.

நெறிமுறைகள்

நெறிமுறைகள்

"ஐரோப்பிய உருப்பு நாடுகளில் இந்த விவகாரங்களில் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் மேலும் சட்டத்திற்குப் புறம்பான பணப் பரிமாற்றங்களுக்கு எதிரான முயற்சிகளையும் உள்ளடக்கியதாக இந்த நெறிமுறைகள் இருக்கும்" என அந்த அமைப்பு தெரிவித்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

OECD issues new standard to combat blackmoney; India to follow

Global economic body OECD today unveiled a new "game-changing" mechanism to combat the menace of offshore tax evasion, a protocol to which India is a signatory with the purpose of tackling blackmoney. 
Story first published: Friday, February 14, 2014, 12:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X