குஜராத் நெடுஞ்சாலைத் திட்டத்தில் உலக வங்கி இணைந்தது!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குஜராத்: இந்தியா, உலக வங்கி இணைந்து இரண்டாவது குஜராத் மாநில நெடுஞ்சாலைத் திட்ட நிதிக்காக 175 மில்லியன் அமெரிக்க டாலர் பெருமானமுள்ள கடன் ஒப்பந்தத்தை கையெழுத்திட்டன.

இந்த ஒப்பந்தத்தில் இந்திய அரசின் சார்பில் நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறையின் இணை செயலர் (பன்னாட்டு அமைப்புகள்) நிலயா மிதாஷ் மற்றும் உலக வங்கி சார்பில் இந்தியாவிற்கான உலக வங்கி இயக்குனர் ஒன்னோ ருல் ஆகியோர் கையொப்பமிட்டனர்.

"இந்த 175 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் ஒப்பந்தம் இந்திய அரசு மற்றும் உலக வங்கியிடையே இரண்டாம் குஜராத் மாநில நெடுஞ்சாலை திட்ட நிதிக்காக கையெழுத்தானது" என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

குஜராத் நெடுஞ்சாலைத் திட்டத்தில் உலக வங்கி இணைந்தது!!

நெடுஞ்சாலை திட்டக் கடன் வழிமுறைகள் மற்றும் அமைப்புகளை நவீனப்படுத்துதல், சொத்துப் பராமரிப்பு மேலாண்மை வளர்ச்சி, சாலைப் பாதுகாப்புக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் கிழக்கு குஜராத்தில் உள்ள சில பின் தங்கிய பகுதிகளை அடையும் வழிகளின் மேம்பாடு ஆகியன இந்தத் திட்டத்தின் முக்கிய குறிக்கோள்களாகும்.

இந்தத் திட்டம் நெடுஞ்சாலை மேம்பாடு (மொத்த செலவு 290 மில்லியன் அமெரிக்க டாலர்கள்), துறைக் கொள்கை மற்றும் அமைப்பு மேம்பாடு (மொத்த செலவு 12 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) மற்றும் சாலைப் பாதுகாப்பு மேலாண்மை (மொத்த செலவு 22 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஆகிய மூன்று பிரிவுகளை இந்தத் திட்டம் மொண்டிருக்கும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தக் கடனானது திட்ட அமலாக்க அவகாசமான ஐந்து ஆண்டுகளுக்கு தரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India, World Bank sign $175 mn for Second Gujarat road project

India and the World Bank have signed a USD 175 million (RM1.6 billion) credit agreement for financing second Gujarat State Highways Project (GSHP-II).
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X