ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் கலக்கிய ரிலையன்ஸ் ஜியோ!! 11,500 கோடி முதலீடு..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: முகேஷ் அம்பானி தலைமையில் செயல்படும் தொலைதொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, நடந்து முடிந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் சுமார் 11,504 கோடி ரூபாய் முதலீடு செய்து 14 வட்டாரங்களில் தனது டெலிகாம் சேவையை தொடர திட்டமிட்டுள்ளது.

பிராட்பேண்ட் வயர்லெஸ் அக்செஸுக்கான (பிடபிள்யுஏ) பான்-இந்தியா லைசென்ஸ் வைத்துள்ள இந்நிறுவனம் அது தற்போது கையகபப்டுத்தியுள்ள ஸ்பெக்ட்ரமைக் கொண்டு வாய்ஸ் மற்றும் டேட்டா டெலிஃபோனியை 1800 மெகா ஹெர்ட்ஸ் பேண்டில் வழங்க ஏற்பாடுகள் செய்து வருகிறது.

ஜியோ அதன் சமீபத்திய ஸ்பெக்ட்ரமை டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய மூன்று முக்கிய மெட்ரோ நகரங்களிலும், ஏ பிரிவைச் சேர்ந்த வட்டாரங்களிலும் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கையகப்படுத்தும் திட்டத்தின் மூலம், லிபரலைஸ்ட் ஸ்பெக்ட்ரமை அதிக அளவில் கொண்ட, நீண்ட ஆயுளுடன் கூடிய ரெஸிட்யுவல் ஸ்பெக்ட்ரமை வைத்துள்ள நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது ரிலையன்ஸ் ஜியோ.

4ஜி நெட்வோர்க்

4ஜி நெட்வோர்க்

1800 மெகாஹெர்ட்ஸின் மீதான எஃப்டிடி-எல்டி, 2300 மெகாஹெர்ட்ஸின் மீதான டிடிடி-எல்டி ஆகியவற்றை இன்டெக்ரேடெட் ஈகோசிஸ்டம் ஒன்றின் மூலம் உபயோகித்து, இடைவெளியற்ற முறையில் வழங்கப்படக் கூடியதான ரிலையன்ஸ் ஜியோவினுடையை 4ஜி சேவைகளின் நோக்கம்.

உயர்தர சேவை..

உயர்தர சேவை..

நவீனமான டிஜிட்டல் கன்டென்ட், அப்ளிக்கேஷன்கள் மற்றும் சர்வீஸ்கள் போன்றவற்றிற்கு உயர்தர அக்செஸை வழங்குவதே ஆகும்." என்று ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் சேர்மனும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் டி. அம்பானி தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

ரிசர்வ் விலைக்கு 31 சதவீதம் ப்ரீமியம் செலுத்தி இந்த ஸ்பெக்ட்ரம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. 900 மெகாஹெர்ட்ஸ் பேண்டிலான ஸ்பெக்ட்ரத்தை கைக்கொள்ள சில ஆபரேட்டர்கள் செலுத்திய 55 சதவீதம் முதல் 110 சதவீதம் ப்ரீமியம் தொகையுடன் ஒப்பிடுகையில் இது குறைவான தொகை என்று இந்நிறுவனம் கூறியுள்ளது.

ஏ, பி, சி பிரிவு

ஏ, பி, சி பிரிவு

இந்நிறுவனத்திற்கு ஆந்திர பிரதேசம், குஜராத், கர்நாடகா, மஹாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய இடங்களிலும் தனது சேவையை அளித்து வந்தது. கேரளா, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகியவற்றின் பி பிரிவு வட்டாரங்களிலும் அலைவரிசையை இந்நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதிக போட்டி நிலவிய சி பிரிவைச் சேர்ந்த அஸ்ஸாம் வட்டாரம், ஒரிஸ்ஸா மற்றும் வடகிழக்குப் பகுதிகளிலும் இந்நிறுவனம் ஸ்பெக்ட்ரமை சொந்தமாக்கியுள்ளது.

33% முன்பணம்

33% முன்பணம்

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக டிஓடியினால் விடப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததைப் போல் ஸ்பெக்ட்ரம் வாங்குவதற்கான மொத்தத் தொகையில் சுமார் 33 சதவீதத்தை முன் கட்டணமாக செலுத்தி விடுவதாகவும், இரண்டு வருட கடன் தவணையுரிமை காலத்துக்குப் பின் மீதமுள்ள தொகையை 10 சரிபாதி வருடாந்தர தவணைகளில் கட்டி விடுவதாகவும் ரிலையன்ஸ் கூறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Jio spends Rs 11,054 cr on spectrum

Mukesh Ambani-owned Reliance Jio acquired telecom airwaves in 14 circles, spending Rs 11,054 crore.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X