காதலர்கள் உள்ள வரை பொருளாதாரம் வீழ்ச்சி அடைய வாய்ப்பில்லை!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்திய நிறுவனங்கள் காதலர் தினத்தன்று நடக்கவுள்ள பரிசுப் பொருள், ஆபரணங்கள், சாக்லெட்டுகள், பொம்மைகள், ஆயத்த ஆடைகள், மொபைல் போன்கள், எலக்ட்ரானிக் கருவிகள் மற்றும் வாட்சுகள் போன்றவற்றின் விற்பனை மூலம் சுமார் ரூ18,000 கோடி வர்த்தகம் எட்டியது என இந்திய தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலகங்கள் மூலம் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் அஸ்ஸோசேம் தெரிவித்துள்ளது.

 

ஒரு வாரத்தில் ரூ18,000 கோடி மதிப்புள்ள பொருட்கள் விற்பனை..

தொழில் மற்றும் வர்த்தகப் பொது அமைப்பான ஒருங்கிணைந்த தொழில் மற்றும் வர்த்தக அமைப்பு (அஸ்ஸோசேம்) இது குறித்துத் தெரிவிக்கையில், காதலர் தினம் ஒரு தினத்தன்று மட்டும் கொண்டாடப்படாமல் ஒரு வாரம் முழுவதும் கொண்டாடப்படுவதால், விற்பனையின் அளவு அதிகமாக உள்ளதாகத் தெரிவித்தது.

காதல் வாரம்..

காதல் வாரம்..

ரோஸ் டே (பிப்ரவரி 7) வில் தொடங்கி, ப்ரொபோசல் டே, சாக்லெட் டே, டெட்டி டே, ப்ராமிஸ் டே, கிஸ் டே, ஹக் டே எனத் தொடர்ந்து வாலண்டைன்ஸ் டே-வில் (பிப்ரவரி 14) முடிகிறது. அந்த வாரத்தில் மட்டும் விற்பனை கணக்கீடப்பட்டது சுமார் 15,000 கோடி ரூபாய் எட்டியது, இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 25 சதவிகிதம் அதிகமாகும்.

பன்னாட்டு நிறுவனங்கள்

பன்னாட்டு நிறுவனங்கள்

இந்த கணக்கெடுப்பின்படி, பெரும் சம்பளம் இளம் வயதினர், குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்கள், பிபீஓ, ஐடி மற்றும் பெரு நிறுவனங்களில் பணிபுரிவோர் பெருமளவில் காதலர் தின பரிசுகளுக்காக சுமார் 1,000 முதல் 50,000 ரூபாய் வரை செலவழிக்கத் திட்டமிட்டுள்ளனர்

கல்லூரி மாணவர்கள்
 

கல்லூரி மாணவர்கள்

கல்வி பயிலும் இளம் வயதினர் 500 முதல் 10,000 ரூபாய் வரை செலவு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அஸ்ஸோசேம் அமைப்பின் பொதுச் செயலாளர் டி எஸ் ராவத் இதழை வெளியிடுகையில் தெரிவித்தார்.

ஆடம்பர பொருட்கள்

ஆடம்பர பொருட்கள்

காதல் பரிசுப் பொருட்கள் விற்பனை ஒரு ஆடம்பர பொருளின் விற்பனையில் 25 சதவிகிதம் இருக்கும்.

வித்தியாசமான பரிசு

வித்தியாசமான பரிசு

பூக்கள், பிளாட்டினம் அல்லது வைர நகை மற்றும் விலை மதிப்பான ஆடைகள் உகந்த தேர்வாக இருப்பினும், ஏதாவது "வித்தியாசமாக" வாங்கவேண்டும் என்ற எண்ணம் மெட்ரோ நகரங்களில் வளர்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

ஃபேஷன்.. மேற்கத்திய கலாச்சாரம்

ஃபேஷன்.. மேற்கத்திய கலாச்சாரம்

"ஃபேஷனில் அதிக அக்கறையுள்ள இளம் பருவத்தினர், ஆணாக இருந்தாலும் அல்லது பெண்ணாக இருந்தாலும், தங்கள் தோற்றம் பற்றி அதிக கவலைப்படத் தொடங்கியுள்ளதோடு தாங்கள் அணிபவைகளைப் பற்றி முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சிரத்தை எடுத்துக்கொள்கின்றனர்" என ராவத் தெரிவித்தார்.

ஆண்களுக்கான பரிசு பொருள்

ஆண்களுக்கான பரிசு பொருள்

விலையுயர்ந்த ஆடை, சட்டைகளுக்கான வெள்ளிக் க்ஃப்னிக்குகள், பட்டினாலான டை, மென்தோலினாலான பெல்ட், வாலட் மற்றும் கீ-செயின் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆண்களுக்கான சிறப்பு பரிசுத் தொகுப்பின் விலையானது 12,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை இருப்பதோடு இவற்றின் தேவையும் அதிகரித்துள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது (பார்ரா !!! காதலுக்குக் கண்ணில்லை என்பது சரிதான் போல..).

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ASSOCHAM foresees Rs 18,000 cr business in V-Day week

Despite the global economic slowdown, companies are ready to cash in on Valentine Day's an estimated Rs 18,000 crore with record sales of popular gift.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X