இடைக்கால பட்ஜெட்: நிலை தடுமாறி மீண்ட பங்கு சந்தை..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இன்று காலை நிதியமைச்சர் ப. சிதம்பரம் 2014ஆம் ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தொடங்கிய சில நிமிடங்களில் பங்கு சந்தை வேகமாக சரிய துவங்கியது. இதனால் சந்தை முதலீட்டாளர்களிடையே கடும் பீதி நிலவியது.

 

சற்று முன்பு தான் பங்கு சந்தையின் நிலை, சரியான நிலைக்கு வந்தது.

காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 37.01 புள்ளிகள் உயர்ந்து 20,403.83 புள்ளிகளை எட்டியது. இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக 20,481.76 புள்ளிகளும், குறைவாக 20,338.95 புள்ளிகள் அடிப்படையில் வர்த்தகம் செய்யப்பட்டது.

அதேபோல் நிப்டியும் சில ஏற்ற இறக்கம் சந்தித்தது. காலை 11.30 மணியளவில் 6.45 புள்ளிகள் உயர்ந்து 6,054.80 அடைந்தது. இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக 6,079.35 புள்ளிகளும், குறைவாக 6,038.30 புள்ளிகள் பதிவானது. நிதியமைச்சர் இடைகால பட்ஜெட் தாக்கல் செய்ய துவங்கியதும் சென்செக்ஸ் 14.32 புள்ளிகள் உயர்வுடனும், நிப்டி 2.35 புள்ளிகள் சரிவடைந்தது குறிப்பிடதக்கது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி

மொத்த உள்நாட்டு உற்பத்தி

நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.6 சதவீதமாக பதிவானது, ஆனால் கணிக்கப்பட்டதோ 4.8 சதவீதம். இதனால் 2014ஆம் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையாக 45 பில்லியன் டாலராக உள்ளது என நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

முதலீட்டு மற்றும் சேமிப்பு விகிதம்

முதலீட்டு மற்றும் சேமிப்பு விகிதம்

மத்திய அரசின் செயல்பாட்டில் முதலீட்டு விகிதம் 34.8 சதவீதமாகவும், சேமிப்பு விகிதம் 30.1 சதவீதக இருந்தது என அவர் தெரிவித்தார்.

டாடா பவர்

டாடா பவர்

இன்றைய பங்கு வர்த்தகத்தில் அதிகம் லாபம் அடைந்த நிறுவனங்கள் டாடா பவர் 3.05% உயர்வு, டாக்டர் ரெட்டி ஆய்வகம் 1.74% உயர்வு, ஹெச்டிஎஃப்சி 1.46% உயர்வு, ஹெச்டிஎஃப்சி வங்கி 1.20% உயர்வு, ஆக்சிஸ் வங்கி 1.02% உயர்வு

சரிவை கண்ட நிறுவனங்கள்
 

சரிவை கண்ட நிறுவனங்கள்

அதேபோல் இன்றைய பங்கு வர்த்தகத்தில் சரிவடைந்த நிறுவனங்கள் கோல் இந்தியா 1.29% சரிவு, பஜாஜ் ஆட்டோ 1.29% சரிவு, சன் பார்மா 0.83% சரிவு, ரிலையன்ஸ் 0.83% சரிவு

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Markets slip, then recover as FM P Chidambaram presents interim Budget

The markets sliped into the negative territory as Finance Minister P Chidambaram presented interim Union Budget for FY15.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X