இந்தியா வல்லரசு நாடாக மாற்ற 10 வழிகள் உள்ளது!! சிதம்பரத்தின் கணிப்பு..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நிதியமைச்சர் திரு ப.சிதம்பரம் நேற்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது நாம் அனைவருக்கும் தெரியும். இந்த உரையின் முடிவில், கடந்த 10 வருட அட்சி காலத்தில் கிடைத்த அனுபவத்தை கொண்டு இந்திய பொருளாதாரம் முன்னேற்ற 10 வழிகளை தாம் கண்டறிந்ததாக அவர் தெரிவித்தார். அது என்ன வழிகள்?? வாருங்கள் நாமும் பார்ப்போம்.

 

மேலும் அவர், 'இந்தியாவின் பொருளாதாரம் அதன் மொத்த தேசிய உற்பத்தியை கணக்கில் கொள்ளும் போது, உலகிலேயே 11-வது பெரிய பொருளாதாரமாக உள்ளது. அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியாவின் பொதுவான மொத்த தேசிய உற்பத்தி, அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்திற்கு சென்று விடும்' என்று திரு.ப.சிதம்பரம் தெரிவித்தார்.

'வளர்ந்த நாடுகளின் பொருளாதார வளங்கள் இன்றைய வளரும் நாடுகளை பாதிப்பதைப் போலவே, சீனா மற்றும் இந்தியாவின் வளங்கள், உலகிலுள்ள பிற நாடுகளின் மீது ஆழமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, நமக்கு நம் மீதான பொறுப்புகள் மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த உலக பொருளாதாரத்தின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டிய பொறுப்பு உள்ளது' என்று அவர் வலியுறுத்தினார்.

நிதி பற்றாக்குறை

நிதி பற்றாக்குறை

2016-17-ல் மொத்த தேசிய உற்பத்தியில் நிதி பற்றாக்குறையை 3 சதவிகிதம் ஆக இருக்க வேண்டும், மேலும் அதன் அளவு 3% குறைவாகவே இருக்க வேண்டும் என்ற இலக்கை நிதியமைச்சர் முன்னிலைப்படுத்தி சொன்னார்.

நடப்பு கணக்கு பற்றாக்குறை

நடப்பு கணக்கு பற்றாக்குறை

'இன்னும் சில ஆண்டுகளுக்கு நடப்பு கணக்கு பற்றாக்குறையை நம்மை ஆட்டிப்படைக்கும், இதனை அந்நிய முதலீட்டின் மூலமாகவே சரி செய்ய முடியும், அது அந்நிய நேரடி முதலீடாகவோ அல்லது அந்நிய முதலீட்டாளர் நிறுவனங்கள் அல்லது ஐரோப்பிய மத்திய வங்கி அல்லது வேறு ஏதாவது வெளிநாட்டு பணமாகவோ இருக்கலாம்' என்றும் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

விலை நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி
 

விலை நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி

வளரும் பொருளாதாரத்தைப் பொறுத்த வரையில், அதிக வளர்ச்சி இருக்கும் வேளைகளில் மிதமான அளவில் பண வீக்கம் இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். 'இந்திய ரிசர்வ் வங்கி விலையின் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை சமனப்படுத்தும் வகையில் நிதிக் கொள்கையை உருவாக்க வேண்டும்' என்று திரு.ப.சிதம்பரம் குறிப்பிட்டார்.

நிதித்துறை சீர்திருத்தங்கள்

நிதித்துறை சீர்திருத்தங்கள்

நிதித்துறை சட்ட சீர்திருத்த ஆணையத்தின் பரிந்துரைகளில் எந்த வித மாற்றங்களும் தேவையில்லை மேலும் அதனை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். பிற பரிந்துரைகளைப் பொறுத்த வரையில், நாம் அவற்றை சட்டமாக மாற்றுவதற்கு ஒரு கால அட்டவணையை வரைய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

கட்டுமானத் வசதிகள்

கட்டுமானத் வசதிகள்

நீண்ட கால நிதிகள் மற்றும் முதலீட்டு குவிப்பிற்கு ஏற்ற வகையில் புதிய நிதி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று சிதம்பரம் தெரிவித்தார். 'நாம் நம்முடைய கட்டுமானத்தை மீண்டும் புணரமைக்க வேண்டும் மற்றும் எண்ணற்ற அளவில் புதிய கட்டுமானங்களையும் உருவாக்க வேண்டும். நிரூபிக்கப்பட்ட ஒவ்வொரு மாதிரியும் கடைப்பிடிக்கப் பட வேண்டும் மற்றும் பொது மற்றும் தனியார் பங்களிப்பு வழிமுறையை மிகவும் பரவலாக பயன்படுத்த வேண்டும்' என்று திரு.ப.சிதம்பரம் அழுத்தம் கொடுத்து தெரிவித்தார்.

உற்பத்தி துறை

உற்பத்தி துறை

'நாம் உற்பத்தி துறையில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் குறிப்பாக உற்பத்தி ஏற்றுமதி துறையில் கவனம் செலுத்த வேண்டும். ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது மத்திய மற்றும் மாநிலம் என அனைத்து அரசுகளின் வரிகளும் தள்ளுபடி செய்யப்படவோ அல்லது திரும்ப தரப்படவோ வேண்டும்.

இறக்குமதி, ஏற்றுமதி

இறக்குமதி, ஏற்றுமதி

இந்தியாவில் பொருட்களை இறக்குமதி செய்வதை விட, இங்கேயே உற்பத்தி செய்வதற்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் குறைந்த பட்ச விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன்' என்று திரு.ப.சிதம்பரம் குறிப்பிட்டார்.

மானியங்கள்

மானியங்கள்

மிகவும் குறைந்த வளங்களையும், அவற்றின் மீதான பல்வேறு உரிமைகளையும் குறிப்பிட்ட நிதியமைச்சர், மானியங்களை உண்மையிலேயே தேவையாக இருக்கும் போது தான் தேர்ந்தெடுக்க வேண்டும் மற்றும் மிகவும் தேவை இருப்பவர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்றார்.

நகரமயமாக்கல்

நகரமயமாக்கல்

நமது நகரங்கள் அவற்றின் பிரச்னைகளை கவனிக்காமல் விட்டு விட்டால், கட்டுப்படுத்த முடியாதவையாகவும் மற்றும் அதாவது வாழத் தகுதியற்றவையாகவும் மாறிவிடும் என்று கருத்து தெரிவித்தார். 'நகரங்களில் வளங்கள் உள்ளன, மேலும் நகரங்கள் வளங்களை உருவாக்குகின்றன. நகரங்களை புணரமைக்கும் வளங்களை உருவர்கும் வகையில் அந்த வளங்களை புதிய மாதிரியான நிர்வாகத்தினால் உருவாக்க வேண்டும்' என்று அவர் சொன்னார்.

கல்வி மற்றும் திறன் மேம்பாடு

கல்வி மற்றும் திறன் மேம்பாடு

உயர்நிலைக் கல்வி, பல்கலைக்கழக கல்வி, முழு சுகாதாரம் மற்றும் அனைவருக்குமான சுகாதார கவனிப்பு ஆகியவற்றின் வரிசையில் சேர்த்து அளவிடக் கூடிய விஷயமாக திறன் மேம்பாடு இருக்க வேண்டும் என்று திரு.ப.சிதம்பரம் தெரிவித்தார்.

மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு பங்கிடு

மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு பங்கிடு

'முன்னோடி திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் நியாயமான அளவு நிதி செலவினங்களை தாங்கிக் கொள்ளவும் மற்றும் அவ்வாறு விரும்பி செய்யவும் மாநிலங்கள் கொண்டுள்ளன. எனவே, மத்திய அரசாங்கம் பாதுகாப்பு, இரயில்வே, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் தொலை தொடர்பு போன்ற அதன் பிரத்யோகமான பொறுப்புகளில் வரும் துறைகளுக்கு அதிகளவு வளங்களை பங்கிட்டு கொடுக்க முடியும்' என்றும் திரு.ப.சிதம்பரம் குறிப்பிட்டார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chidambaram's ten point agenda to make India third largest economy

In his Vote on Account 2014 speech, Finance Minister P Chidambaram said that the UPA Government has a clear line of sight to the goals that it has set for itself.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X