கல்விக் கடனுக்கான வட்டி தள்ளுபடி!! மகிழ்ச்சியில் மாணவர்கள்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: திங்கட்கிழமை தாக்கல் செய்யத இடைக்கால பட்ஜெட்டில் கல்வி துறைக்கு சாதகமாக அமைந்தது என்றே சொல்லலாம். 31.1.2009 மற்றும் 31.12.2013 வரையிலான நிலுவையிலுள்ள அனைத்து கல்விக் கடன்களுக்கும் கடனை காலம் தாழ்த்தி செலுத்துவதற்கான சலுகை காலத்தை நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார். மேலும் 31.12.2013 வரை நிலுவையிலுள்ள வட்டிக்கான பொறுப்பை அரசு ஏற்கும் என்றும் எனினும் 1.1.2014ஆம் தேதிக்கு பிறகு உள்ள வட்டியினை கடன் பெற்றவர்கள் முறையாக செலுத்த வேண்டும் என்றும் ப. சிதம்பரம் அறிவித்துள்ளார்.

 

அரசாங்கத்தின் கூற்றுப்படி, இந்த ஒப்புதலின் காரணமாக கல்வி கடன் பெற்ற சுமார் 9 லட்சம் மாணவர்கள் பயனடைவர். இந்த கடன் தொகையின் மதிப்பு ஏறத்தாழ ரூ.2,600 கோடி ஆகும். இந்த தொகை இந்த நிதியாண்டின் இறுதிக்குள் கனரா வங்கிக்கு மாற்றப்படும் என்றும் அவர் கூறினார்.

வட்டி மானியமாக வழங்கப்படும்

வட்டி மானியமாக வழங்கப்படும்

1.4.2009ஆம் தேதிக்கு முன் வழங்கப்பட்ட கல்வி கடனுக்கான வட்டியை மானியமாக வழங்கும் மத்திய அரசின் திட்டம், 2009-10ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. 31.3.2009ஆம் ஆண்டுக்கு முன் கல்வி கடன் பெற்ற மாணவர்கள் படிக்கின்ற காலத்தில் வட்டியை செலுத்துவதில் சிக்கல்களை சந்தித்தனர். அவர்களின் சிக்கலை தீர்க்க சில முயற்சிகள் மேற்கொண்டனர்.

ரூ57,700 கோடி கல்வி கடன்

ரூ57,700 கோடி கல்வி கடன்

இது குறித்து ப சிதம்பரம் அவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன் கூறுகையில் சில ஆயிரம் மாணவர்கள் மட்டுமே, கல்வி கடன் பெறுகின்றனர் என்று கூறினார். டிசம்பர் 2013 இறுதியில் பொது துறை வங்கிகளில் சுமார் ரூ57,700 கோடி நிலுவை தொகையினை கொண்ட 25,70,254 கல்வி கடன் கணக்குகளை கொண்டிருந்தது குறிப்பிடதக்கது.

பொருளாதார வீழ்ச்சி
 

பொருளாதார வீழ்ச்சி

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஊழல்களினால் தொடர்ந்து தாக்கப்பட்டத்தை அடுத்து, நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், வரவிருக்கும் தேர்தலில் பெரும் தோல்வியை எதிர்பார்த்திருக்கும் சூழ்நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஓட்டுக்காக பட்ஜெட்

ஓட்டுக்காக பட்ஜெட்

வாக்குகளை பெறும் நோக்கத்துடன், தேர்தல் வரும் வரை அரசாங்கம் துடிப்புடன் செயல்பட்டு மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதையே இந்த பட்ஜெட் காட்டுகிறது. ஓட்டுக்களின் பொருட்டு இந்த பட்ஜெட் ஒரு சம்பிரதாயமாகவே கருததப்படுகிறது.

அடுத்த பட்ஜெட்டின் நிலை..

அடுத்த பட்ஜெட்டின் நிலை..

மேலும் ஒரு நிதி அமைச்சர் செலவுகளுக்கான கோரிக்கைகளை மட்டும் அடுத்த சில மாதங்களில் புதிய அரசு பொறுபேற்க்கும் நிலையில் முன்வைத்துள்ள போது அடுத்து வரும் அரசு ஒரு முழுமையான பெரிய அளவிலான பட்ஜெட்டினை அளிக்கும். ஆட்சிப் பிடிக்கும் கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என இந்த பட்ஜெட் தெளிவாக தெரிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Major relief for education loan borrowers, 9 lakh students to benefit

Finance Minister P Chidambaram announced a Moratorium period for all education loans taken-up to 31.3.2009 and outstanding on 31.12.2013.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X