வர்த்தக ஒப்பந்த பத்திரங்களை விற்க வலியுறுத்தும் ஆர்பிஐ!! குழப்பத்தில் வங்கிகள்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: நாட்டில் நிலவும் நிலையற்ற வட்டி விகிதங்களிலிருந்து பாதுகாக்க வர்த்தக ஒப்பந்த பத்திரங்களை விற்பனை செய்யும்படி அரசு வங்கிகளை ஆர்பிஐ வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஒரு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

 

இதற்குமுன் ஆர்பிஐ இது போன்ற திட்டங்களை 2003, 2009 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் அறிமுகம் செய்த முயற்சிகள் திட்டங்களின் தவறான வடிவமைப்பால் பலன் அளிக்கவில்லை.

இந்தத் திட்டங்களில் முதலீட்டாளர்களை, குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பது ஆர்பிஐ ஆளுநர் ரகுராம் ராஜனின் முக்கிய குறிக்கோள்களுள் ஒன்றாகும். ஆர்பிஐ, செபி மற்றும் பங்குச்சந்தைகள் முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வளர்ந்த நாடுகளில் மட்டுமே காணப்படும் இது போன்ற திட்டங்களுக்கான சந்தைகளை உருவாக்க ஒன்றினைந்து செயல்பட்டுவருகின்றன.

வர்த்தக ஒப்பந்த பத்திரங்களை விற்க வலியுறுத்தும் ஆர்பிஐ!! குழப்பத்தில் வங்கிகள்..

இத்திட்டத்தின் ஒரு வெற்றிகரமான துவக்கத்தை எதிர்நோக்கி ஆர்பிஐ அலுவலர்கள், வங்கிகளைத் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு, இதன் விற்பனையை செய்ய ஊக்குவித்த வண்ணம் இருந்தனர் (குறிப்பாக திட்டத் துவக்கம் தொடர்பான சந்திப்பிற்கு முன் வரை) என ராய்டர்ஸ் செய்தி தெரிவித்தது.

இந்த விற்பனை தொடர்பான பரிவர்தனைகளையும், மேலாண்மை தகவல் முறைகள் மற்றும் ஆவணங்களையும் ஆளுநர் ராஜன் அவர்களே நேரடியாக கவனிக்கவுள்ளதாக வங்கிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வங்கி வட்டாரங்கள் ராய்டர்ஸூக்கு தெரிவித்தன.

கடந்த மாதம், ஆர்பிஐ வட்டி வருவாய் ஆதாரங்களில் வங்கிகளுக்கும் அன்னிய அமைப்புகளுக்கும் அனுமதி அளித்திருந்த்து.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI insists banks to trade bond futures: Media report

In a bid to make bond future successful this time, the Reserve Bank of India is mounting pressuring on state-owned banks to trade the derivatives that provide hedges against the country's volatile interest rates, a Reuters report said.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X