அனைத்து வங்கியிலும் ஏடிஎம் அமைக்கப்படும்!!..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: வங்கி துறையின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஐக்கிய முற்போக்கு கூட்டணி கவனத்துடன் செயல் பட்டு வரும் நிலையில், நிதி துறை இணை அமைச்சர் நமோ நாராயன் மீனா இந்தியாவில் செயல்பட்டு வரும் ஒவ்வொரு வங்கி கிளையும் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் ஏடிஎம் வசதியையும் தன்னகத்தே கொண்டு செயல் பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

தேனா வங்கியின் மண்டல அலுவலகத்தை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர், ஏடிஎம் இயந்திரங்கள் கிடைப்பதில் சிரமங்கள் இருந்த போதிலும் புதிதாக செயல்பட தொடங்கியுள்ள ஒவ்வொரு வங்கியும், ஏடிஎம் மையத்தையும் தன் வசம் கொண்டு சேவையாற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.

வங்கிகள் தான் செயல்படும் தளத்தில் மட்டுமல்லாது, மக்கள் அதிகம் புழங்கும் இடங்களான கல்லூரி, பல்கலைக்ழகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் சந்தைகள் போன்ற வெளி வளாக தளங்களிலும் ஏடிஎம் மையங்களை திறக்க வேண்டும் என்றும் இதனால் மக்களுக்கு வங்கிகளுடன் தொடர்பேற்பட்டு வங்கிகளை வழங்கும் சேவையை கிடைக்க பெறுவர் என்றும் மீனா கூறினார்.

அனைத்து வங்கியிலும் ஏடிஎம் அமைக்கப்படும்!!..

தொலைபேசி வளர்ச்சியை வங்கித்துறையுடன் ஒப்பிட்டு பேசிய அமைச்சர், 90 கோடி செல்போன் பயனாளர்கள் உள்ள நமது இந்திய நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 50% பேர் கூட வங்கி கணக்கினை பெறவில்லை என்றார். ஆனால் பயனாளிகளுக்கு அரசு மூலம் வரும் ஒவ்வொரு ரூபாயும் வங்கிகள் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

நிதி துறை அதிகாரம், உள்கட்டமைப்பு, வங்கி துறை விரிவாக்கம் ஆகியவற்றின் மூலம் வறுமையை கட்டுப்படுத்தி இந்தியாவை ஒன்று சேர்ப்பது சாத்தியமாகும் என்றும் அவர் கூறினார்.1969-ல் நமது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வங்கிகளை தேசியமயமாக்கிய போது, நாட்டில் மொத்தம் 8,500 வங்கி கிளைகள் செயல் பட்டு வந்ததாக அவர் கூறினார்.

 

நாட்டில் உள்ள மொத்த வங்கி கிளைகளின் எண்ணிக்கை தற்போது 1 லட்சத்தை தொட்டு விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் திட்டப்படி, 9 வங்கிகளுக்கு 1 என்ற வீதத்தின் படி மஹிலா வங்கி (மகளிருக்கான வங்கி) மார்ச் 31 2014ஆம் ஆண்டுக்குள் ஜெய்ப்பூரில் திறக்கப்படும் என்று கூறினார். ஒரு வேளை மாநில அரசு வங்கிகளுக்கான கட்டிட வசதியை அளிக்க முன் வந்தால் இன்னும் 2 நாட்களுக்குள் வங்கி கிளைகளை திறக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இவ்விழாவில் பேசிய தேனா வங்கி தலைவர் அஷ்வானி குமார் கூறுகையில், 2013 -14 மற்றும் 15ஆம் ஆண்டில் ராஜஸ்தானில் 10 கிளைகள் திறக்கப்படும் என்றும், 25 சதவீத கிளைகள் அடுத்த நிதியாண்டிற்குள் கிராமப்புறங்களில் திறக்கப்படும் என்றும் கூறினார்.

ராஜஸ்தானில் செயல் பட்டு வரும் தேனா வங்கி நடப்பு நிதி ஆண்டில் 20 சதவீத வணிக வளர்ச்சியை அதாவது ரூ2,400 கோடி ரூபாயை எட்டியுள்ளது என்றும்,மேலும் ரூ3,300 கோடியை அடுத்த நிதியாண்டின் இலக்காக கொண்டு செயல்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Every bank branch to have ATM by March this year: Minister

Describing UPA-II government's focus on inclusive growth in the banking sector as a mission, Union Minister of State for Finance Namo Narayan Meena today said every old bank branch should have ATM facility by the end of current fiscal.
Story first published: Friday, February 21, 2014, 7:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X