அரசு நிறுவனங்களின் பரிதாப நிலை!! முதலீட்டாளர்கள் தலையில் துண்டு..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: கடந்த ஒரு ஆண்டு காலமாக, அரசாங்கம் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருக்கும் நிறுவனங்கள், அதுவும் வங்கிகள் உட்பட்ட உள்ள அரசு நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் சொத்துக்களை குறிப்பிடத்தக்க அளவில் அழித்துள்ளன.

 

ஒஎன்ஜிசி, பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் (BHEL) மற்றும் இந்திய நிலக்கரி நிறுவனம்(CIL) ஆகியவற்றின் பங்குகள் நிஃப்டியில் மிகப்பெரிய அளவில் நட்டமடைந்த நிறுவனங்களாக உள்ளன.

ஒரு ஆண்டுக்கு முன்னர் ரூ.650 ஆக இருந்த எம்எம்டிசியின் (MMTC) பங்கு மதிப்பு இன்று ரூ.46.85 ஆக சரிவடைந்துள்ளது. அதாவது, ஒரு ஆண்டுக்கு முன்னர் 100 பங்குகளை ரூ.65000-க்கு வாங்கிய ஒரு முதலீட்டாளர், இன்று அந்த பங்குகளை விற்றால் ரூ.4700 மட்டுமே பெறுவார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட பாரத் ஹெவி எலக்ட்ரிகல் நிறுவனத்தின் பங்குகள் பாதியாக குறைந்துள்ளன.

பொதுத்துறை வங்கிகளும் இதில் பின்னால் இல்லை. ஒரு ஆண்டுக்கு முன்னர் ரூ.450 ஆக இருந்த கனரா வங்கியின் பங்கு மதிப்பு, இப்பொழுது ரூ.214.35 ஆகவும், ரூ.310 ஆக இருந்த ஓரியண்டல் வங்கியின் பங்கு மதிப்பு, இன்றளவில் ரூ.163.15 ஆகவும் குறைந்துள்ளது. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, தேனா வங்கி மற்றும் பிற என பெரும்பாலான பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பாதியாக மதிப்பில் குறைந்துள்ளன.

ஏன் இந்த நிலை என்று இப்போது முழுமையாக பார்போம்..

அரசு நிறுவனங்களின் நிலை

அரசு நிறுவனங்களின் நிலை

ஒவ்வொரு விதமான அரசு நிறுவனத்தின் பிரச்னைகளும் மாறுபட்டிருக்கிறது. ஆனால், இந்த மதிப்பு குறைவை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில் பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்கள் தயாராக இல்லை. இது மிகவும் வருந்தத்தக்கது.

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ்

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ்

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தை எடுத்துக் கொள்வோம். மின் உபகரணங்களின் இறக்குமதிகளையும் மற்றும் மின் உபகரணங்கள் மீது அரசு விதித்துள்ள வரிகளையும் சார்ந்துள்ளதால் பெருமளவு அச்சுறுத்தல்களை இந்நிறுவனம் எதிர் கொள்கிறது.

இறக்குமதி

இறக்குமதி

கடந்த சில காலாண்டுகளாகவே இறக்குமதிகளில் உள்ள கடும் போட்டிகள் மற்றும் சாகும் தருவாயில் உள்ள மின் துறை ஆகியவற்றால் மிகவும் மோசமான அளவில் இந்நிறுவனத்தின் இலாபம் குறைந்துள்ளது.

இந்திய நிலக்கரி நிறுவனம்
 

இந்திய நிலக்கரி நிறுவனம்

நிலக்கரி துறையில் தனி நிறுவனமாக இருக்கும் இந்திய நிலக்கரி நிறுவனம், அடிக்கடி தொழிலாளர் பிரச்னைகளை சந்தித்து வருகிறது. சில நேரங்களில் அரசாங்கம் செய்யும் தவறுகளாலும் இந்நிறுவனங்கள் பிரச்னைகளுக்குள்ளாகின்றன. சமீபத்தில், அரசாங்கத்தின் நிதி பற்றாக்குறையை சமாளிக்கும் விதத்தில், இந்திய நிலக்கரி நிறுவனம் மிகப்பெரிய அளவில் டிவிடெண்டுகளை வழங்க வேண்டியிருந்தது.

ஒஎன்ஜிசி

ஒஎன்ஜிசி

இந்திய எண்ணைய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ONGC) மானியத்திற்கான மசோதாவை தன்னுடைய 'முதுகெலும்பை உடைக்கும்' செயல் என்று சமீபத்தில் தெரிவித்தது.

பொருளாதார நிலை

பொருளாதார நிலை

கடுமையான கடன் நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் அரசுடமை வங்கிகள் பேரழிவு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. பொருளாதார மந்தநிலை தனியார் வங்கிகளை விட, பொதுத்துறை வங்கிகளின் செயல்படாத சொத்துக்களை அதிகப்படுத்தியுள்ளது.

மோசமான கடன் எண்ணிக்கை

மோசமான கடன் எண்ணிக்கை

உண்மையில், 2009-ம் ஆண்டிலிருந்து மோசமான கடன்களின் எண்ணிக்கை பொதுத்துறை வங்கிகளில் 2 மடங்காக ஆகிவிட்டன. பெரும்பாலான அரசுடமை வங்கிகள் இந்த பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றன.

ஆலோசனை

ஆலோசனை

இந்த பிரச்னைகள் எதுவும் முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி இல்லை என்பது உண்மை தான். இதனால் முதலீட்டாளர்கள் அரசு நிறுவனங்களில் முதலீடு செய்ய விரும்பினால் நீண்ட கால அடைப்படையில் முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How government owned companies have destroyed investor wealth?

In the last one year, companies in which the government holds a majority of shares, including government owned banking entities have destroyed investor wealth significantly.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X