ஆர்பிஐ வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டும் : ஐஎம்எஃப் அறிவுரை..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்திய நாட்டின் பணவீக்க விகிதத்தையொட்டி இந்திய ரிசர்வ் வங்கி கொள்கை வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்தவேண்டும் என பன்னாட்டுப் பொது நிதியமைப்பு (IMF) அறிவுறுத்தியுள்ளது.

 

"ஒரு நிரந்தர பணவீக்கம் மற்றும் பணவீக்க எதிர்ப்பார்ப்புகளின் தன்மையைப் பொறுத்து, அதை நெடுநாளைக்கு கட்டுக்குள் வைக்க கொள்கை வட்டி விகிதங்களை ஒரு குறிப்பிட்ட அளவு உயர்த்த வேண்டியது அவசியம். அது வளர்ச்சியைப் பொறுத்து அமையும்" என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

 
ஆர்பிஐ வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டும் : ஐஎம்எஃப் அறிவுரை..

"இந்தப் பணவீக்க விகிதங்கள் அல்லது எதிர்ப்பார்ப்புகள் தொடருமானால், ஒரு முன்சுமை வட்டி விகித ஏற்றம் அவசியமாகும்" என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்பிஐ கவர்னரும் மேற்கூறிய அமைப்பின் முன்னாள் பொருளாதாரத் தலைவருமான ரகுராம் ராஜன் வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதங்களை 75 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தி 8 சதவிகிதம் என அறிவித்தப் பின்பு தான் கவர்னராக பதவியேற்றார். அவர் நுகர்வு விலைகளை அடிப்படை பணவீக்க அளவீடாகக் கொண்டு மொத்த விலையின் அடிப்படையைத் தவிர்த்தார்.

சமீபத்திய 25 அடிப்படைப் புள்ளிகள் உயர்வு சந்தையை ஆச்சர்யப்படுத்தியது. உணவுப் பொருட்களின் விலைகள் சற்று தளர்வுற்றதால் நுகர்வு விலைக் குறியீடு கடந்த இரண்டாண்டுகளில் இல்லாத, குறைந்த அளவான 8.79 சதவிகிதத்தைத் தொட்டது. எனினும் இந்த அளவு, கடந்த எட்டு மாத குறைந்த மொத்த விலைக் குறியீட்டு அளவான 5.05 சதவிகிதத்தைவிட மிக அதிகம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI will need to keep raising policy interest rate: IMF

The Reserve Bank of India will need to continue raising its policy interest rate given the sticky nature of inflation, the International Monetary Fund said on Thursday.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X