இந்தியாவில் அன்னிய முதலீடுக்கு தடைவிதிக்கப்பட்ட துறைகள்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: எஃப்டிஐ என்பதன் விரிவாக்கம அன்னிய நேரடி முதலீடு என்பது நாம் அனைவருக்குமே தெரியும். அன்னிய முதலீடு எப்போதுமே பொருளாதார எதிர்ப்புகளின் முதுகெலும்பாக இருந்து வந்துள்ளது. குறிப்பாக சில்லைரை வணிகம் மற்றும் பாதுகாப்புத் துறையில் இதன் பங்கு அதிகம் என்றே சொல்லலாம்.

பொதுவாக ஒரு துறை அல்லது நிறுவனத்தில் அன்னிய முதலீடு அதிகரிக்கும் போது அத்துறை அல்லது நிறுவனத்தின் வளர்ச்சி பன்மடங்கு அதிகரிக்கும். இந்த வளர்ச்சியிலும் நிறுவனத்திலும் அன்னிய முதலீட்டாளருக்கு பெரும் பங்கு உண்டு. எனவே இத்தகையை அன்னிய முதலீட்டை அனைத்து துறையிலும் அனுமதிக்க முடியாது.

ஊடகம் மற்றும் பாதுகாப்புத் துறைகள் நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அன்னிய நேரடி முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கப்படாத துறைகளாக உள்ளது. காப்பீடு போன்ற சில துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டு விகிதங்கள் பெருவாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நாட்டில் அனைத்து துறையிலும் அன்னிய முதலீடு அனுமதிக்கும் அளித்துள்ளது. இதில் சில துறைகள் மட்டுமே விதிவிளக்காக விளங்குகிறது. இந்த துறைகளின் அன்னிய நேரடி முதலீடுகளுக்குத் அரசின் மூலமாகவோ அல்லது ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட முறைகள் மூலமாகவோ தடை விதிக்கப்பட்டுள்ளன. அப்படிபட்ட துறைகளை நாம் இங்கு பார்போம்..

அணுசக்தி

அணுசக்தி

மிகவும் அபாயகரமான சக்தியின் முலம் பாதுகாப்பான முறையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் அணுசக்தி துறையில் அன்னிய முதலீட்டிற்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

லாட்டரித் தொழில்

லாட்டரித் தொழில்

தமிழ்நாட்டில் முற்றிலும் ஒழிக்கப்பட்ட லாட்டரித் துறையிலும் அன்னிய முதலீடு இல்லை

 சூதாட்டம் மற்றும் பந்தயம் வைத்தல்

சூதாட்டம் மற்றும் பந்தயம் வைத்தல்

இழப்பை மட்டுமே சம்பாதித்து தரும் சூதாட்டம் மற்றும் பந்தயத்துறையில் அன்னிய முதலீட்டுக்கு இடமில்லை.

சீட்டுத் தொழில்

சீட்டுத் தொழில்

சீட் பண்டு, சிறு சேமிப்பு என பல பரிமானங்களில் இந்தியாவில் செயல்படும் சீட்டுத் தொழில் அன்னிய முதலீட்டுக்கு 0% அனுமதி.

நிதி நிறுவனம்

நிதி நிறுவனம்

நிதி நிறுவனங்களிலும் அன்னிய முதலீட்டுக்கு இடம் இல்லை.

வேளாண்மை துறை

வேளாண்மை துறை

வேளாண்மை துறையில் பூக்கள் சாகுபடி, செடிகள் வளர்ப்பு, விதைகள் துறை, வளர்ப்புப் பிராணிகள், வரையறைக்குட்பட்ட சூழ்நிலைகளில் வேளாண்மை மற்றும் அது தொடர்பான துறைகள் நீங்கலாக மீன் வளர்ப்பு மற்றும் காய்கறி சாகுபடி, காளாண்கள் வளர்ப்பு ஆகியவற்றில் அன்னிய முதலீடு அனுமதிக்கப்படுவதில்லை.

வீட்டு வசதி மற்றும் வீட்டுமனை வர்த்தகம்

வீட்டு வசதி மற்றும் வீட்டுமனை வர்த்தகம்

வீட்டு வசதி மற்றும் வீட்டுமனை வர்த்தகம் துறை சார்ந்த நகரமைப்பு வளர்ச்சி, வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுமானம், குறிப்பிட்ட அளவிற்கு சாலைகள் மற்றும் பாலங்கள் அமைத்தல் ஆகியவை இல்லாமல் மற்ற எந்த துறையிலும் இந்திய அரசு அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கவில்லை.

மாற்றத்தக்க வளர்ச்சி உரிமைகள் வர்த்தகம்

மாற்றத்தக்க வளர்ச்சி உரிமைகள் வர்த்தகம்

மாற்றத்தக்க வளர்ச்சி உரிமைகள் வர்த்தகம் என்று அழைக்கப்படும் Trading in Transferable Development Rights துறையிலும் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி இல்லை.

சிகரெட் மற்றும் புகையிலை உற்பத்தி

சிகரெட் மற்றும் புகையிலை உற்பத்தி

புகையிலையில் தயாராகும் அல்லது அதற்கு மாற்றாக இருக்கும் சிகார், செரூட்டுகள், சிகாரில்லொஸ் மற்றும் சிகரெட்டுகள் உற்பத்தி துறையிலும் அன்னிய முதலீட்டுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Which are the sectors where FDI is not permitted in India?

Foreign Direct Investment (FDI) has always remained a bone of contention and FDI in multi-brand retail, defense etc. Here are a few sectors where FDI is prohibited under both the Government Route as well as the Automatic Route.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X