10 ஆண்டுகளில் குறைவான வளர்ச்சியை எட்டிய இந்திய பொருளாதாரம்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: உயர்ந்த வட்டி விகிதங்களினால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத 4.9 சதவிகித அளவிற்குக் குறைய வாய்ப்புள்ளதாகவும் வரவிருக்கும் தேர்தலுக்கு முன் முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்புகள் குறைவு எனவும் ரியுடர்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

 

பிப்ரவரி 19-25 தேதிகளில் நடைபெற்ற மொத்தம் 36 பொருளாதார வல்லுனர்களின் கருத்துக்கணிப்பில், ஆசியாவின் மூன்றாவது பெரும் பொருளாதாரமான இந்தியா, கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் அதற்கு முந்தைய காலாண்டினை ஒப்பிடும் போது 4.8 சதவிகிதத்திலிருந்து 4.9 சதவிகித அளவிற்கு உயர்ந்தது.

இந்த வளர்ச்சி, சமீபத்திய ஆண்டுகளில் எட்டப்பட்ட இரண்டிலக்க வளர்ச்சியை சற்றே பிரதிபலித்தாலும், இந்தியத் தொழில் துறையை பிடித்துள்ள குறைந்துவரும் நுகர்வு மற்றும் அதிகரித்துள்ள வட்டி விகிதங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

தொழிற்துறை உற்பத்தி

தொழிற்துறை உற்பத்தி

தொழிற்துறை உற்பத்தி 2013 ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் நீண்டகால மற்றும் குறுகிய கால நுகர்வுப் பொருட்களின் குறைவான தேவைகளினால் சரிவைச் சந்தித்தது.

உயர்ந்த கடன் செலவு

உயர்ந்த கடன் செலவு

"பணவீக்கத்தினால் உந்தப்பட்ட உயர்ந்த கடன் செலவுகள் மற்றும் தேவையின் வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக உற்பத்தித் துறை மற்றும் முதலீட்டு வட்டி ஆகியவை பாதிக்கப்பட்டன" என டிபிஎஸ் வங்கி பொருளாதார வல்லுனர் ராதிகா ராவ் குறிப்பிட்டார்.

முதலீட்டுச் சுழற்சி பாதிப்பு

முதலீட்டுச் சுழற்சி பாதிப்பு

அரசின் கொள்கைகளின் நிலையின்மையின் காரணமாக முதலீட்டுச் சுழற்சி தடைபட்டுள்ளது, அதன் காரணமாக பெரும்பாலான அடிப்படை கட்டமைப்புத் திட்டங்கள் சமீபகாலமாக கிடப்பில் உள்ளன.

நாடாளுமன்ற தேர்தல்
 

நாடாளுமன்ற தேர்தல்

இந்நிலையில் உடனடியாக முன்னேற வாய்ப்புகள் மிகவும் குறைவு எனவும் மே மாதம் நடைபெறவுள்ள தேர்தல்களுக்கு முன்பாக குறிப்பிடத்தக்க வளர்ச்சியை முதலீட்டில் எதிர்பார்க்க முடியாது எனவும் இந்த ஆய்வில் கலந்துகொண்ட அனைத்து பொருளாதார வல்லுனர்களும் தெரிவித்தனர்.

ஆர்பிஐ

ஆர்பிஐ

வளர்ச்சி உயர்ந்த போதும் வாரக் கடன் தொடர்பான செலவுகள் மற்றும் பணவீக்கத்தைக் குறைக்க ஆர்பிஐ செய்த வட்டி விகித உயர்வு ஆகியவை உற்பத்தியாளர்களின் கவலையை அதிகப்படுத்தியுள்ளன.

பணவீக்கம்

பணவீக்கம்

மொத்த பணவீக்கம் கடந்த எட்டு மாதங்களை ஒப்பிடுகையில் ஜனவரி மாதம் சற்று குறைந்தாலும், உணவு மற்றும் காய்கறி விலையினால் உந்தப்பட்டது நிலையில்லாதது, பணவீக்கம் மீண்டும் உயர வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Economic growth in India likely slowed to near decade-low of 4.9%: poll

Economic growth in India likely slowed to a near decade-low at the end of last year as high interest rates hit factory activity, according to economists polled by Reuters who don't expect a pickup in investment before May Lok Sabha elections.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X