"அஞ்சலக ஏடிஎம்" புதிய திட்டத்தை செயல்படுத்தும் இந்திய தபால் துறை...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் வங்கிகளை திறக்க முனைப்புடன் செயல்படும் இந்திய தாபல் துறை, அதற்கான விண்ணப்பத்தையும் ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்துள்ளது. இந்நிலையில் தபால் துறை தனது சேமிப்பு வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் சுமார் 3,000 ஏடிஎம்களையும், 1.35 லட்சம் சிறு-ஏடிஎம்களை இந்தியா முழுவதிலும் உள்ள தனது கிளை அலுவலகத்தில் செப்டம்பர் 2015 மாதத்திற்குள் நிறுவ திட்டமிட்டுள்ளது.

 

இச்செய்தியை பற்றி தபால் துறையை அனுகியபோது, இந்திய தபால் துறை செயலாளர் பத்மினி கோபிநாத் கூறுகையில் "இந்த ஏடிஎம்களை அதிக வாடிக்கையாளர்கள் கொண்ட கிளைகளின் அடிப்படையில் நிறுவ திட்டமிட்டுள்ளோம், இதனை பொருத்து டெல்லி, சென்னை மற்றும் பெங்களுரூ பகுதிகளில் முதற்கட்டமாக இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்." என செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

4000 ஏடிஎம்கள்

4000 ஏடிஎம்கள்

முதல் வருடத்தில் 1,000 ஏடிஎம்களை நிறுவ முழுவேகத்தில் செயல்பட உள்ளோம், பின்னர் அடுத்த 18 மாதங்களில் 3,000 ஏடிஎம்களை நிறுவவும் திட்டமிட்டுள்ளோம் என தபால் துறை செயலாளர் பத்மினி கோபிநாத் தெரிவித்தார். இந்த ஏடிஎம் சேவையை முதலில் 26 கோடி சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர் மட்டுமே செயல்படுத்த முடியும், பின்நாட்களில் இதனை அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

வங்கியிலும் பயன்படுத்தலாம்

வங்கியிலும் பயன்படுத்தலாம்

இந்த ஏடிஎம் சேவையில் இந்திய தாபல் துறை மற்றும் தேசிய நிதி சேவை நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதனால் வாடிக்கையாளர்கள் தங்களின் சேமிப்பு பணத்தை வங்கி ஏடிஎம்களிலும் எடுத்துக்கொள்ள முடியும்.

இன்போசிஸ்
 

இன்போசிஸ்

இந்த தபால் துறையில் புதிய ஏடிஎம் சேவைக்கு மென்பொருள் கட்டுமானத்தில் இன்போசிஸ் நிறுவனம் செயல்பட உள்ளது.

1.55 லட்ச கிளைகள்

1.55 லட்ச கிளைகள்

இந்திய தபால் துறை, இந்திய முழுவதும் 1.55 லட்ச கிளைகளை கொண்டு செயல்பட உள்ளது, இதில் 90 சதவீதம் கிராமபுரங்களில் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India Post to install 3000 ATMs,1.35 lakh micro-ATMs by September 15

Even as its application to start a commercial bank is pending, India Post has drawn a massive plan to install as many as 3,000 ATMs and 1.35 lakh micro-ATMs at the ubiquitous post offices across the country for savings account holders by September 2015, a top official has said.
Story first published: Thursday, February 27, 2014, 16:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X