மியூச்சுவல் ஃபண்ட் துறையில் ஆன்லைன் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்!! செபி

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: காப்பீட்டு துறையில் அன்னிய முதலீட்டை அதிகரித்த பின்பு, வெளிநாட்டு நிதியியல் நிறுவனங்கள் இந்திய சந்தையில் முதலீடு செய்ய முனைந்துள்ளனர். இந்நிலையில் புதிய முதலீட்டு திட்டங்களின் பயன்பாட்டை எளிதாகக்கவும், விற்பனையை அதிகரிக்கும் நோக்குடன் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு ஆன்லைன் பயன்பாட்டை அதிகரிக்க செபி வலியுறுத்தியுள்ளது.

 

இண்டர்நெட்டின் பயன்பாடு இந்தியாவின் அனைத்து சிறு மற்றும் குறு நகரங்களிலும் கிடைக்கும் பட்சத்தில் இன்றைய நாளில் மக்களுக்கு தேவையான அனைத்து விதமான சேவைகளும் இணையதளம் முழும் கிடைக்கிறது. குறிப்பாக ஏர் டிக்கெட், ரயில் டிக்கெட், பஸ் டிக்கெட் எனவும், மின்சாரம், தொலைபேசி, வருமான வரி போன்றவற்றை செலுத்தவும் இணைய வழிச் சேவை நமக்கு கிடைக்கிறது.

முதலீடு அதிகரிக்கும்

முதலீடு அதிகரிக்கும்

இந்நிலையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய மக்களுக்கு இணையம் வழியாக சேவை செய்ய செபி அமைப்பு வருப்பம் தெரிவித்துள்ளது. இணையதள பயன்பாடு நடைமுறைக்கு வந்தால் மியூச்சுவல் ஃபண்ட் துறையில் அதிகளவில் முதலீடு பெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

தொழில்நுட்ப மேம்பாடு

தொழில்நுட்ப மேம்பாடு

ஏற்கனவே பல தனியார் நிறுவனங்கள் தங்களின் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு இத்தகைய சேவையை அளித்து வருகிறது. செபியின் பரிந்துரைப்படி இச்சேவை தொழில்நுட்ப முறையில் மேம்படுத்தி வாடிக்கையாளருக்கு எளிய வகையில் கிடைக்க வேண்டும் என செபி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 விநியோக செலவுகள்

விநியோக செலவுகள்

இந்த ஆன்லைன் வாயிலாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை விநியோகிப்பது வாடிக்கையாளர்களுக்கு வசதியாக இருப்பதுடன், விநியோக செலவினங்களை கணிசமாக குறைக்கும் என்று செபி கூறியுள்ளது.

மொபைல் இண்டர்நெட்
 

மொபைல் இண்டர்நெட்

கணினியில் இண்டர்நெட் பயன்பாட்டை மிந்தும் நிலையில் உள்ளது செல்போன் அல்லது மொபைல் இண்டர்நெட் பயன்பாடு. எனவே மொபைல் வாடிக்கையாளர்களையும் கருத்தில் கொண்டு மியூச்சுவல் ஃபண்ட் இணைய வழிச் சேவையை மேம்படுத்த வேண்டும் எனவும் செபி வலியுறுத்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sebi wants mutual funds to enhance use of online route to sell products

The regulator is of the view that a greater use of Internet as a distribution channel can help increase the penetration of mutual funds, especially among young investors.
Story first published: Thursday, February 27, 2014, 15:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X