தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ13,000 கோடி ஒதுக்கீடு!!..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், தொழிற்சாலைகளை விருத்தி செய்து அதன் மூலம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவு கூட்டும் வகையில் தமிழக அரசு 2014-2015ஆம் ஆண்டிற்கான புதிய வரியற்ற பட்ஜெட்டை வியாழனன்று அமைச்சரவையில் தாக்கல் செய்யதது.

 

இந்த உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் மாநில நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்துவது, மின்சார உள்கட்டமைப்பை சீர்படுத்துவது, மோனோரயில் போன்ற புதிய நகர போக்குவரத்து சேவைகளை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளுக்கென மாநில அரசு சுமார் 13,000 கோடி ரூபாயை அடுத்த நிதியாண்டில் செலவிடவுள்ளது.

ஏப்ரல்-மே காலகட்டத்தில் வரக்கூடிய பொதுத் தேர்தலுக்கு முன் இந்த பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மின்சக்தி

மின்சக்தி

காற்றாலைகளில் இருந்து கிடைக்கக்கூடிய மின்சக்தியை ஆற்றல்மிக்க வகையில் உபயோகித்துமாநிலத்தின் திறனை அதிகரிக்க உதவக்கூடிய வகையில் ஜெர்மன் ஃபண்டிங் ஏஜென்ஸியின் நிதி உதவியோடு சுமார் 1,593 கோடி ரூபாய் முதலீட்டுடனான க்ரீன் எனர்ஜி காரிடாரை அமைப்பதன் மூலம் காற்றாலையிலிருந்து கிடைக்கும் மின்சக்தியை வெளியேற்றலாம் என்று தமிழ்நாடு டிரான்ஸ்மிஷன் கார்ப்பொரேஷன் பரிந்துரை செய்துள்ளது.

ரூ.2,000 கோடி

ரூ.2,000 கோடி

தமிழ்நாடு ஜெனரேஷன் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பொரேஷன் நிறுவனத்திற்கான நிதி மறுகட்டமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநில அரசு, மத்திய அரசின் மறுசீரமைப்புத் திட்டத்தின் வழியில் 2014-15 ஆண்டின் போது சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான லையபிலிட்டிகளை தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ளவிருக்கிறது.

மின்சாரம் = பொருளாதாரம்
 

மின்சாரம் = பொருளாதாரம்

"மின்சக்தி இருப்பின் மேம்பாடு மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார உணர்வுநிலை மேம்பாடு போன்றவையே மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்," என்று இந்தியா ரேட்டிங்ஸ் அண்ட் ரிஸர்ச் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் அஸோசியேட் டைரக்டர் சிவ சுப்ரமணியன் கூறியுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தின் நிதி அமைச்சரான திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், தொழிற்சாலைகளை விருத்தி செய்யும் பொருட்டு அரசு 2014 அக்டோபர் மாதத்தின் போது சென்னையில் குளோபல் இன்வெஸ்டர்ஸ் மீட் ஒன்றை ஏற்பாடு செய்யவிருக்கிறது என்று அறிவித்துள்ளார்.

53,000 ஏக்கர் நிலம்

53,000 ஏக்கர் நிலம்

மாநிலமெங்கும், சுமார் 53,000 ஏக்கர் நிலம் தொழிற்சாலைகளுக்கென ஒதுக்கப்படவுள்ளது. முக்கியமாக தென்னக மாவட்டங்களின் மீது தனிக்கவனம் செலுத்தப்படவுள்ளது.

ஸ்டார்ட்-அப் வேர்ஹவுஸ்

ஸ்டார்ட்-அப் வேர்ஹவுஸ்

மாநிலத்தில் உள்ள தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக, அரசினால் உருவாக்கப்படும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அனைத்திலும் 10% இடம் "ஸ்டார்ட்-அப் வேர்ஹவுஸ்கள்" அமைப்பதற்கென அரசு ஒதுக்கவுள்ளது.

இந்திய பொருளாதாரம்

இந்திய பொருளாதாரம்

"வளர்ச்சியை தூண்டி, வீழ்ந்து கொண்டிருக்கும் தேசிய அளவிலான பொருளாதார சூழலை மேம்படுத்த இந்திய அரசினால் இயலாத காரணத்தினால் தொடர்ந்து இரண்டாவது வருடமாக முதலீடுகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவை கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன," என்று நிதி அமைச்சர் கூறியுள்ளார்.

ரூ.26,625 கோடி முதலீடு ஒப்பந்தங்கள்

ரூ.26,625 கோடி முதலீடு ஒப்பந்தங்கள்

2011 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து, சுமார் 26,625 கோடி ரூபாய் மதிப்புடைய முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (எம்ஓயுக்கள்) கையெழுத்தாகியுள்ளன. இவற்றுள் சுமார் 10,660 கோடி ரூபாய் வரை ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளது அதன் மூலம் சுமார் 10,022 பணிகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tamil Nadu to spend Rs.13,000 cr to improve infrastructure

The Tamil Nadu government presented a no new-tax budget for 2014-2015 on Thursday, seeking to improve infrastructure and promote industries in a “failing macro environment” to support economic growth in the state.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X