நிதி பற்றாக்குறையுடன் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த மகாராஷ்டிரா அரசு!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் இடைக்கால பட்ஜெட்டை அம்மாநிலத்தின் நிதி அமைச்சரும் துணை முதல்வருமான அஜித் பவார் வெள்ளிகிழமை தாக்கல் செய்தார். இதில் அவர் 2014-15ஆம் நிதியாண்டு ரூ.5,417.28 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறையாக இருக்கும் என தெரிவித்தார்.

 

நடப்பு நிதியாண்டு மட்டும் ரூ1,69,907.55 கோடி ரூபாயை வருவாயாக கொண்டுள்ள இந்த பட்ஜெட் அடுத்த நிதி ஆண்டிற்கான செலவுக்கான தொகையாக ரூ1,75,324.83 கோடி ரூபாயை கொண்டுள்ளது.

வரி விலக்கு

வரி விலக்கு

கோதுமை, அரிசி, பருப்பு வகைகள், மற்றும் அவற்றிலிருந்து பெறப்படும் மாவு, வெல்லம், மஞ்சள், புளி போன்ற பொருட்களுக்கு அடுத்த நிதி ஆண்டு வரை வரி விலக்கு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.

விலை மாற்றம் இல்லை

விலை மாற்றம் இல்லை

கொத்தமல்லி விதை, வெந்தயம், மிளகாய், பார்ச்லே, தேங்காய், அப்பளம், ஈரமான பேரிச்சைகள், கரென்ட்ஸ் மற்றும் திராட்சை, சோளபுரி சாத்டர்ஸ், துண்டுகள் மற்றும் தேயிலை மீது தற்போதுள்ள சலுகை விலை மார்ச் 31, 2015 வரை தொடரும் என்று அஜித் பவார் அறிவித்துள்ளார்.

இலக்கை எட்டியும் பாற்றாக்குறை
 

இலக்கை எட்டியும் பாற்றாக்குறை

2013-14ஆம் நிதியாண்டில் சிறிய அளவிலான உபரி வருமானத்தை எதிர்பார்த்திருந்தோம், ஆனால் வருவாய் இலக்கினை எட்டி விட்ட போதிலும் கூட இயற்கை பேரிடர் நிவாரணம் வழங்குதல், மின்சார கட்டணம் மானியம் வழங்குதல் உள்ளிட்ட மற்றும் பிற அவசியமான செலவுகள் மிக அதிகமாக இருந்தது என்றும், இதன் விளைவாக, உபரி வருவாய், ரூ3,017.23 கோடி பற்றாக்குறை கொண்டதாக ஆனது என்றும்.

மின்சார கட்டணம் மானியம்

மின்சார கட்டணம் மானியம்

இந்த வருடம் எடுக்கப்பட்டிருக்கும் முடிவால் மின்சார கட்டணம் மானியம் வழங்குதல் போன்ற பல காரணங்களால் 2014 -15ஆம் ஆண்டில் ஒரு கணிசமான தொகை செலவு அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். 2014-15 -க்கான மாநில வரைவு திட்டத்தை பற்றி திட்ட கமிஷனுடன் இது வரை விவாதிக்கவில்லை என்றும் நிதி அமைச்சர் கூறினார்.

மக்களவை தேர்தல்

மக்களவை தேர்தல்

மக்களவை தேர்தலுக்கு பிறகு அடுத்த கூட்டத்தில் மேலும் ஒரு கூடுதல் பட்ஜெட்டை அவையில் தாக்கல் செய்ய தான் உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அந்த பட்ஜெட் அடுத்த நிதியாண்டிற்கான திட்டமிடப்படாத செலவுகளையும்,திட்டத்தின் புதிய பொருட்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Maharashtra govt tables Rs 5,417 crore deficit budget

Maharashtra Finance Minister and Deputy Chief Minister Ajit Pawar today tabled a Rs 5,417.28 crore revenue deficit interim budget for 2014-15 in the state legislative assembly.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X