பன்னாட்டு நிறுவனங்களில் சிஇஓவாக கலக்கும் 10 இந்தியர்கள்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  சென்னை: இந்தியர்களின் அறிவும், திறமையும் உலகளவில் பெறும் மதிப்பை அடைந்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் உள்ள நிறுவனங்களில் 20 சதவிதத்திற்கும் அதிகமான நிறுவனங்களில் இந்தியர்கள் பெரும் பதவிகளில் வகுக்கின்றனர் என்று ஒரு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலகின் அனைத்து நாடுகளிலும் எதேனும் ஒரு விதத்தில் இந்தியர்களின் திறமையும், அறிவையும் கொண்டு செயல்படுகிறது என்று சொன்னால் மிகையாகாது.

  21-ம் நூற்றாண்டில் இந்திய கல்வி முறையை மிகவும் கடுமையான முறையில் பெருமை பெறச் செய்துள்ளது. லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் மற்றும் மான்செஸ்டர் பிஸினஸ் ஸ்கூல் போன்றவற்றையெல்லாம், இந்தியாவின் ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்லுரிகள் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன் வரிசைக்கு வந்துள்ளன. இந்தியாவின் திறமைக்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தேவை அதிகரித்துள்ளது.

   

  இப்பொழுது இந்தியாவில் பிறந்து உலகளவில் பரந்து விரிந்திருக்கும் நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இருக்கும் இந்திய திறமைசாலிகளைப் பற்றி இங்கு காண்போம்.

  சத்யா நாடெல்லா

  ஒரு மத்திய அரசு பணியாளரின் மகனாக ஐதராபாத் நகரில் பிறந்து, அங்கேயே தனது பள்ளிப் படிப்பை முடித்தவர் சத்யா நாடெல்லா. மணிபால் இன்ஸ்ட்டியூட் ஆஃப் டெக்னாலஜிஸ் கல்லுரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிக்கேஷன்ஸ் எஞ்சினியரிங் பட்டம் பெற்று, விஸ்கான்சின்-மில்வாகீ பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் கணிணி அறிவியல் பிரிவிலும் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றார்.

  சன் டூ மைக்ரோசாப்ட்

  சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனத்தில் முதலில் சேர்ந்த அவர், 1992-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்ந்த இவர், கடந்த பிப்ரவரி 4-ம் நாள் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்கும் நிலையை அடைந்தார். போட்டிகள் மிக்க கிரிக்கெட் விளையாட்டு தனக்கு தலைமைப் பண்பை ஊட்டியதாக இவர் சொல்கிறார்.

  இந்திரா நூயி

  ஐஐஎம் கல்கத்தா மற்றும் யேல் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ் (Yale School of Business) ஆகிய இரண்டு கல்லுரிகளில் எம்பிஏ பட்டம் பெற்ற இந்திரா நூயி, தன்னுடைய பணி வாழ்க்கையை ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தில் தொடங்கினார். அதன் பின் பாஸ்டன் கன்சல்டிங் குழுமம், மோட்டாரோலா மற்றும் ஆசியே பிரௌன் போவெரி ஆகிய நிறுவனங்களிலும் பணி புரிந்த அவர் 1994-ம் ஆண்டு பெப்ஸி கோ நிறுவனத்தில் இணைந்தார். 2001-ம் ஆண்டு தலைமை நிதி அதிகாரியாக அறிவிக்கப்பட்ட இவர், 2006-ம் ஆண்டு தலைமை செயல் அதிகாரியாக பதவி ஏற்றம் பெற்றார். வால் ஸ்ட்ரீட் ஜர்னல், போர்ஃப்ஸ், பர்ச்சூன் மற்றும் டைம்ஸ் போன்ற புகழ் பெற்ற பத்திரிக்கைகளின் 'மிகவும் பலம் பொருந்திய பெண்மணி' என்ற பட்டியலில் இந்திரா நூயி-க்கு நிரந்தர இடம் கிடைத்திருந்தது.

  பிரேம் வாட்சா

  மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளரான இவரை, 'கனடாவின் வாரன் பஃபெட்' என்ற அழைக்கிறார்கள். சார்ட்டர்டு பைனான்ஸியல் அனலிஸ்ட் (Chartered Financial Analyst) ஆக பயிற்சி பெற்றிருந்த இவர், கான்பெடரேஷன் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் ஜிடபிள்யூ அஸ்ஸெட் மேனேஜ்மெண்ட் (GW Asset management) போன்ற நிறுவனங்களில் பணியாற்றி விட்டு, இறுதியில் ஃபேர்பேக்ஸ் பைனான்ஸியல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அவர் ஃபேர்பேக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும், ஹாம்பிலின் வாட்சா இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் மற்றும் ஸெனித் நேஷனலல் நிறுவனத்தின் இயக்குநராகவும் பதவி வகித்து வருகிறார்.

  ராஜீவ் சூரி

  எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன்ஸ் எஞ்சினியரிங் பட்டம் பெற்றுள்ள இவர், ஐசிஎல், ஆர்பிஜி குழுமம் மற்றும் சர்ச்சுகேட் குழுமம் ஆகியவற்றில் பணி புரிந்து விட்டு, 1995-ம் ஆண்டு நோக்கியா நிறுவனத்தில் சேர்ந்தார். இவர் நோக்கியா நிறுவனத்தில் வியாபாரம், திட்டமிடுதல், வியாபார வளர்ச்சி மற்றும் விற்பனை என பல்வேறு வகையான பொறுப்புகளை கையாண்டு வந்தார். அக்டோபர் 2009 வரையிலும் நோக்கியாவின் சர்வீஸ் பிரிவின் தலைவராகவும் இருந்தார். 01 அக்டோபர் 2009-ம் நாளன்று அவர் நோக்கியா சொலுயூசன்ஸ் மற்றும் நெட்வொர்க்ஸ் (Nokia Solutions and Networks) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

  ஆன்சு ஜெயின்

  பொருளாதாரம் மற்றும் எம்பிஏ-நிதியியல் ஆகியவற்றில் பட்டம் பெற்றிருந்த ஆன்சு ஜெயின், கிட்டர் பீபாடி அண்டு கோ மற்றும் மெர்ரில் லிஞ்ச் ஆகிய நிறுவனங்களில் நிதி பகுப்பாய்வாளராக (Financial Analyst) தன்னுடைய பணி வாழ்க்கையை தொடங்கினார். 1995-ம் ஆண்டு டாய்ச்சிஸ் வங்கியில் (Deutsche Bank) இணைந்தார். 2002-ம் ஆண்டில் டாய்ச்சிஸ் வங்கியின் செயல் அலுவலர்கள் குழுவிற்கான குழுமத்தில் அவர் சேர்க்கப்பட்டார். 01 ஜுன் 2012-ம் நாளன்று ஜோசெப் ஆக்கெர்மானுடன் (Josef Ackermann) சேர்ந்து, இணை-தலைமை செயல் அதிகாரியாக அறிவிக்கப்பட்டார்.

  அஜய்பால் சிங் பங்கா

  தன்னுடைய பணி வாழ்க்கையை நெஸ்ட்லே நிறுவனத்தில் தொடங்கியவர் அஜய்பால் சிங் பங்கா. பின்னர் பெப்ஸி கோ நிறுவனத்திலும், சிட்டி குரூப் நிறுவனத்தின் தலைவராகவும் மற்றும் சிட்டி குரூப் நிறுவனத்தின் உலகளாவிய வாடிக்கையாளர் குழுவிற்கான தலைமை செயல் அதிகாரியாகவும் பதவி வகித்திருந்தார். 2005-ம் ஆண்டு மாஸ்டர்கார்டு நிறுவனத்தில் சேர்ந்தார். 12 ஏப்ரல் 2010ஆம் நாளன்று அவர் மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் தலைவராகவும் மற்றும் தலைமை செயல் அதிகாரியாகவும் அறிவிக்கப்பட்டார்.

  இராகேஷ் கபூர்

  பிலானியில் உள்ள பிர்லா இன்ஸ்ட்டியூட் ஆஃப் டெக்னாலஜி மற்றும் சயின்ஸ் (BITS)-ல் கெமிக்கல் எஞ்சினியரிங் பட்டமும், ஜாம்ஷெட்பூரில் உள்ள XLRI கல்லுரியில் எம்பிஏ பட்டம் பெற்றவர் இராகேஷ் கபூர். 1987-ம் ஆண்டு ரெக்கிட் பென்க்கிசர் (Reckitt Benckiser) நிறுவனத்தில் சேர்ந்த அவர், பல்வேறு பதவிகளை வகித்திருந்தார். 01 செப்டம்பர் 2011-ம் நாள் அவர் ரெக்கிட் பென்க்கிசர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கிரிக்கெட், கால்பந்து மற்றும் பிரிட்ஜ் ஆகியவை இவருக்குப் பிடித்தமான விளையாட்டுகளாகும்.

  ஐவன் எம் மெனெஸெஸ் (Ivan M Menezes)

  ஐவன் எம் மெனஸெஸ் தன்னுடைய பணி வாழ்க்கையை நெஸ்ட்லே நிறுவனத்தில் தொடங்கினார். அதன் பின்னர் வேர்ல்பூல், அல்லன் ஹாமில்டன் கோச் இன்க். மற்றும் யூடிவி ஆகிய நிறுவனங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். 1997-ம் ஆண்டு டியாஜியோ PLC நிறுவனத்தில் இவர் சேர்ந்தார். ஜுலை 2013 வரையிலும் அந்நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியாக இருந்த அவர், அதே நேரத்தில் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் அறிவிக்கப்பட்டார்.

  சாந்தனு நாராயென்

  எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பட்டப்படிப்பும், கணிணி அறிவியல் மற்றும் எம்பிஏ ஆகிய முதுகலை பட்டங்களையும் பெற்றவர் சாந்தனு நாராயென். ஆப்பிள் நிறுவனத்தில் தன்னுடைய பணி வாழ்க்கையைத் தொடங்கிய அவர், சிலிக்கான் கிராபிக்ஸ் நிறுவனத்தில் இயக்குநராக பணி புரிவதற்காக இடம் மாறினார். தன்னுடைய சொந்த நிறுவனமான பிக்ட்ரா இன்கார்ப்பரேஷனை தொடங்கும் பொருட்டாக சிலிக்கான் கிராபிக்ஸ் நிறுவனத்திலிருந்து அவர் வெளியேறினார். 1998-ம் ஆண்டு அடோப் சிஸ்டம் நிறுவனத்தின் துணைத்தலைவராக பதவி ஏற்றார். 01 செப்டம்பர் 2007-ம்நாளன்று அடோப் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, அவரை தன்னுடைய மேலாண்மை ஆலோசனை குழு உறுப்பினராக இருக்குமாறு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடதக்கது.

  ஹரிஸ் மான்வானி

  1976-ம் ஆண்டில் ஹரிஸ் மான்வானி இந்துஸ்தான் லீவர் நிறுவனத்தில் சேர்ந்தார். 2001-ம் ஆண்டு இந்நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவராக பதவி ஏற்றார். 2002-ம் ஆண்டில், இலத்தீன் அமெரிக்க வியாபார பிரிவின் வீடு மற்றும் தனிநபர் பராமரிப்பு பிரிவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். ஜுன் 2011-ல் யூனிலீவர் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியாக இவர் நியமிக்கப்பட்டார். 2008-ம் ஆண்டின் CNBC ஆசியா நடத்திய ஆசிய வியாபார தலைவருக்கான (Asia Business Leader) விருதை இவர் பெற்றிருக்கிறார்.

  தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

  English summary

  10 Indians Holding Top Post At Global Corporations

  Indian talent is in demand like never before. Let’s meet 10 India born executives who hold the top jobs in global companies.
  Company Search
  Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
  Thousands of Goodreturn readers receive our evening newsletter.
  Have you subscribed?

  Find IFSC

  Get Latest News alerts from Tamil Goodreturns

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more