உக்ரைன்-ரஷ்ய பிரச்சினையால் இந்திய ரூபாய்க்கு பாதிப்பு இல்லை: மாயாராம்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உக்ரைன் நாட்டில் நிலவிவரும் உள்நாட்டுப் பூசல்களால், இந்திய ரூபாய்க்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என பொருளாதார விவகாரங்கள் செயலர் அர்விந்த் மாயாராம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

 

மேலும் இவர் கூறுகையில் "உக்ரைன் அரசியல் நிலவரங்கள் குறித்து நாம் கவலைகொள்ளத் தேவையில்லை என நான் நினைக்கிறேன். இந்தியப் பொருளாதாரம் மிகவும் ஸ்திரமாக உள்ளது. இந்திய ரூபாய் தற்போதுள்ளது போல் வரையறைகளின் அடிப்படையில் நீடிக்கும்" என்று அவர் மாநாட்டின் இடையே பேசுகையில் குறிப்பிட்டார்.

டாலர் - ரூபாய்

டாலர் - ரூபாய்

அமெரிக்க டாலர் மதிப்பு யூரோ மற்றும் பிற செலாவனிகளுக்கெதிராக அதிகரித்ததால் ரூபாய் மதிப்பு இன்று காலை 61.83 என்ற நிலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இரு வாரச் சரிவு

இரு வாரச் சரிவு

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான பிரச்சினைகள் ஒரு போராக வெடிக்கும் அபாய நிலை காணப்பட்டதால் கடந்த இருவாரங்களில் மிக அதிக அளவாக 29 காசுகளை இழந்து, வர்த்தகம் முடியும் தருவாயில் 62.04 என்ற அளவில் நேற்று இருந்தது.

இறக்குமதி

இறக்குமதி

இந்த நாடுகளுக்கிடையேயான பிரச்சினைகள் ஒருபுறமிருக்க இறக்குமதியாளர்களின் உந்துதலால் டாலரின் தேவை சற்று பாதுகாப்பான புதிய அதிகரிப்பினைக் கண்டு இந்தியா போன்ற வளரும் நாடுகளின் செலாவணி மதிப்பைப் பாதித்தது.

டாலர் மதிப்பு 0.10% வளர்ச்சி
 

டாலர் மதிப்பு 0.10% வளர்ச்சி

ஆறு முக்கிய பன்னாட்டு செலாவனிகளை ஒப்பிடுகையில் டாலர் குறியீடு 0.10 சதவிகிதம் உயர்ந்து காணப்பட்டது. ரஷ்யாவின் ரூபிள் 9 சதவிகிதம் குறைந்திருந்தது.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

இந்திய ரூபாய் வரலாறு காணாத 68.85 என்ற அளவிற்குக் குறைந்து கடந்த ஆண்டின் ஆகஸ்டு மாதத்தில் பதிவானது இந்தியா பொருளாதாரத்தின் கெட்ட நேரம் என்ற சொல்லலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ukraine crisis will not impact rupee: Mayaram

The ongoing political crisis in Ukraine will not affect the Indian currency, which will continue to remain range bound, said Economic Affairs Secretary Arvind Mayaram.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X