வங்கிகளுக்கு சவாலாக இருப்பது பெருநிறுவனங்களின் வாராக் கடன்களே: சிதம்பரம்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: அதிகரித்து வரும் வராக்கடன் கவலையளிப்பதாக உள்ளதனால், பெரிய கார்ப்பரேட் நிறுவனகளிடம் அதிகமாகக் காணப்படும் வாராக்கடன்களை வசூலிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று பொதுத்துறை வங்கிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

பொது துறை வங்கிகளின் செயல்பாடுகளை மறுஆய்வு செய்தபின் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பேசிய அவர், நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பணப்பட்டுவாடா குறைந்துள்ளதாகவும், விவசாயத் துறையில் மட்டுமே அது திருப்தியளிக்கும் விதமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

"பொதுத்துறை வங்கிகள் சந்திக்கும் மிகப்பெரும் சவால் என்றால் அது செயல்படா சொத்துக்கள் மற்றும் அவற்றின் தரங்களும் தான்," என்று கூறிய அவர், வங்கிகளின் தலைமை அதிகாரிகளுடனான சந்திப்பின் பெரும்பகுதி வாராக்கடன்களைப் பற்றியும் அவற்றை வசூலிப்பதற்கு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது பற்றியுமே இருந்தது.

வங்கிகளுக்கு சவாலாக இருப்பது பெருநிறுவனங்களின் வாராக் கடன்களே: சிதம்பரம்

என்பிஏக்கள் ரியல் எஸ்டேட் துறையில் குறைவாக இருந்தாலும், அவை "பெரிய கார்ப்பரேட் துறைகள் மற்றும் சிறு நிறுவனங்களில் தான் அதிகம்" என்பதை சுட்டிக்காட்டியுள்ள சிதம்பரம், அவற்றை வசூலிப்பதில் வங்கிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை வங்கிகளில், என்பிஏக்கள் என்றழைக்கப்படும் வாராக் கடன்கள் 2013 மார்ச் மாதத்தின் போது இருந்த 1.83 லட்சம் கோடி ரூபாயிலிருந்து சுமார் 28.5 சதவீதம் வரை உயர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தின் போது சுமார் 2.36 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தின் போது, வங்கிகள் சுமார் 18,933 கோடி ரூபாய் வரையிலான வாராக் கடன்களை வசூலித்திருப்பதாகவும் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக் காலமாக, வங்கிகள் திரும்ப செலுத்த வேண்டிய தொகையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தங்களின் வாராக்கடன் பட்டியலில் முதல் 30 இடங்களில் உள்ள அக்கவுன்ட்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

யுனைட்டட் பாங்க் ஆஃப் இந்தியாவின் வாராக்கடன்கள் பற்றிய குறிப்பிட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், இப்பிரச்சினை தனிப்பட்ட முறையில் வெள்ளிக்கிழமையன்று ஆர்பிஐ கவர்னரான ரகுராம் ராஜனுடன் விவாதிக்கப்படும் என்று கூறினார்.

வங்கிகளுக்கு சவாலாக இருப்பது பெருநிறுவனங்களின் வாராக் கடன்களே: சிதம்பரம்

எனினும், ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய மாதங்களின் போது யுபிஐ சுமார் 1,200 கோடி ரூபாயை வெற்றிகரமாக வசூலித்துள்ளதையும் அவர் குறிப்பிட தவறவில்லை.

தங்க இறக்குமதிகளின் மீதான தடைகளைப் பற்றி கேட்கப்பட்ட போது, அவர் 2013-14 நிதியாண்டுக்கான இறுதி கரன்ட் அக்கவுன்ட் டெஃபிஸிட் (ஸிஏடி) எண்களை ஃபாக்டரிங் இன் செய்த பிற்பாடே அரசு சுங்க வரியை பரிசீலனை செய்வதைப் பற்றி யோசிக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

சிதம்பரம், மாநில அரசுகளுக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் (சிஇஓக்கள்) ‘காலாண்டு செயல்திறன் மறு ஆய்வு கூட்டத்தை' நடத்தி முடித்துள்ளார்.

அரசாங்கம் இதுவரையில் வங்கிகளுக்கு அளித்து வந்த கேப்பிடல் சப்போர்டை தொடர்ந்து வழங்கும் என்றும் ஆனால் லெண்டர்கள் லாபத்தை ஈட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bad loans biggest challenge facing public sector banks: Chidambaram

Concerned over rising non- performing assets, Finance Minister P Chidambaram today asked public sector banks to focus on recovery of bad loans, which happen to be high among large corporate accounts.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X