புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ரிலையன்ஸ்-ஏர்டெல்!! யாருக்கு லாபம்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தொலைதொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம், பாரதி இன்ஃப்ராடெல் நிறுவனத்தின் (ஏர்டெல் நிறுவனத்தின் கிளை நிறுவனம்) டெலிகாம் டவர் கட்டமைப்பை உபயோகித்துக் கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் நிதி தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

 

ரிலையன்ஸ் ஜியோ, பாரதி இன்ஃப்ராடெல் நிறுவனத்தின் டவர்களை உபயோகித்து அதன் சேவைகளை நாடெங்கிலும் தொடங்கவுள்ளது. மேற்கூறிய ஒப்பந்தத்தின் படி, விலை நிர்ணயம் சந்தை நிலவரத்தின் அடிப்படையில் இருக்கும் என்று இந்நிறுவனம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

"இந்த ஒப்பந்தம், முடிந்த வரையில் பொய்யான கட்டமைப்பை உபயோகிப்பதை தவிர்த்து, மூலதனம் மற்றும் சுற்றுப்புறத்தை பாதுகாக்கும் நோக்கில் பாரதி ஏர்டெல்லுடன் முன்பு போடப்பட்டிருந்த எங்களின் டெலிகாம் கட்டமைப்பு பகிர்வு ஒப்பந்தத்தை ஒத்திருக்கும்." என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான சஞ்சய் மஷ்ருவாலா கூறியுள்ளார்.

தொலைதொடர்பு சேவை

தொலைதொடர்பு சேவை

மேலும் அவர் " இந்த ஒப்பந்தம் நாடெங்கிலும் எங்களின் சேவைகளை விரைவாக தொடங்குவதற்கு உதவியாக இருக்கும்," என்றும் தெரிவித்தார்.

பாரதி ஏர்டெல்
 

பாரதி ஏர்டெல்

"எங்களின் பரந்த செயலாற்றல் மற்றும் உயர்வான நெட்வொர்க் அப்டைம் லெவல், விரைவான சந்தை நுழைவு மற்றும் குறைவான ஆபரேஷனல் செலவுகள் ஆகியவற்றை சாத்தியப்படுத்தக் கூடிய சிறப்பான செயல் திட்டத்தை வழங்கும்." என்று பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயலாக்க அதிகாரி டிஎஸ் ராவத் கூறியுள்ளார்.

நற்பயன்கள்

நற்பயன்கள்

மேலும் இந்த ஒப்பந்தம் மூலம் நடைமுறைக்கு வரும் கூடுதல் பகிர்வு, எங்களின் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு குறைவான வாடகை மற்றும் குறைவான எனர்ஜி சார்ஜ் தொகை போன்ற நற்பயன்களை வழங்கும் எனவும் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Jio, Bharti Infratel join hands for tower sharing

Reliance Jio Infocomm, a subsidiary of Reliance Industries, has signed an agreement with Bharti Infratel to use the latter’s telecom tower infrastructure. However, the financial details of agreement were not disclosed.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X