புதிய வங்கிகளுக்கான பட்டியல் ரெடி... தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்காக வெய்ட்டிங்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: புதிய வங்கிகள் திறப்பதற்காக விண்ணப்பித்த நிறுவனங்களில் தனியார் மற்றும் பொதுத்துறையைச் சேர்ந்த 25 நிறுவனங்களை ரிசர்வ் வங்கி தேர்ந்தெடுத்துவிட்டது. வங்கி ஒப்பதலுக்கான உரிமத்தை வெளியிட தேர்தல் ஆணையத்தின் அனுமதிக்காக ரிசர்வ் வங்கி காத்துக்கொண்டு இருக்கிறது. இன்னும் சில வாரங்களில் இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியீடும்.

 

இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறுகையில் நிறுவழங்களின் நன்நடத்தை பற்றிய ஆய்வு மார்ச் 5ஆம் தேதி துவங்கியது. இதன் பணி முடிவடைந்த உடன், தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்த உடன் அதிகாரபூர்வமாக ரிசர்வ் வங்கி புதிய வங்கிகளின் உரிமங்களை வெளியிடும் என அவர் தெரிவித்தார்.

ரகுவின் அதிரடி பதில்

ரகுவின் அதிரடி பதில்

வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் நிதியமைச்சர் சிதம்பரம் மற்றும் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய ரகுராம் ராஜன் "யார் என்ன சொன்னாலும் சரி.. வங்கி உரிமங்களை தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்குப் பின்னரே அறிவிக்கப்படும்" என திட்டவட்டமாக அவர் தெரிவித்தார்.

சிதம்பரத்திற்கு பதிலடி

சிதம்பரத்திற்கு பதிலடி

புதன்கிழமை அன்று நடந்த கூட்டத்தில் சிதம்பரம் பேசியபோது வங்கி உரிமங்களுக்கு தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் தேவை இல்லை என கூறினார் என்பது குறிப்பிடதக்கது.

புதிய வங்கிகள்

புதிய வங்கிகள்

புதிய வங்கிள் திறப்பதிற்காக விண்ணப்பித்தவர்களில் அதித்யா பிர்லா குழுமம், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும்ம, ஐடிஎஃப்சி, ஐஎஃப்சிஐ, எல் அண்டு டி பைனான்ஸியல், முத்தூட் பைனான்ஸ், எல்ஐசி, இந்தியா போஸ்டிங் அகியவை ஆகும்.

முன்னாள் கவர்னர்
 

முன்னாள் கவர்னர்

இந்த விண்ணப்பங்களை தேர்ந்தெடுத்தது முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் பீமல் ஜலான் தலைமையிலான குழு. இறுதி பட்டியலை ரிசர்வ் வங்கி முடிவு செய்யும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bank licences ‘soon, but with EC nod'

The RBI may issue bank licences in a few weeks subject to the Election Commission’s nod, ending the wait for the 25 applicants.
Story first published: Saturday, March 8, 2014, 11:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X