ரூ. 9,500 கோடி அன்னிய முதலீட்டால் பங்கு சந்தையில் உயர்வு!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: வெளிநாட்டு அமைப்பு முதலீட்டாளர்கள் செயத சுமார் 2,766 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்கு முதலீடுகள் காரணமாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை வரலாறு காணாத உயரங்களை எட்டியது. கடந்த 15 முதலீட்டில், வெளி நாட்டு அமைப்பு முதலீட்டாளர்கள் சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை (அதாவது 9500 கோடி ரூபாய்) இந்திய பங்குகளில் முதலீடு செய்தனர். 2014 ஆம் ஆண்டில் அவர்களின் நிகரக் கூட்டு முதலீடுகள் (மார்ச் 6ஆம் தேதி வரை) சுமார் 820 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூபாய் 5000 கோடிக்கும் மேல்) ஆகும்.

இந்த முதலீட்டால் சென்செக்ஸ் 406 புள்ளிகள் உயர்ந்து 21290 புள்ளிகள் வரை உயர்ந்தது, மறுபுறம் தேசிய பங்குச்சந்தை அளவான நிஃப்டி இந்த ஆண்டின் பெரிய லாபமாக 6500 புள்ளிகளைக் கடந்து 126 புள்ளிகள் உயர்ந்து 6527 புள்ளிகளில் முடிந்தது.

உயர்வை கண்ட துறைகள்

உயர்வை கண்ட துறைகள்

சுவாரசியமாக, விலை சார்ந்த துறைகள் இந்த உயர்விற்கு உறுதுணையாக இருந்தன. நிலம் மற்றும் கட்டுமானத்துறை, வங்கி மற்றும் முதலீட்டுச் சொத்துகள் ஆகியவை நன்கு லாபமடைந்த துறைகளாகும். இந்த துறைகளின் மதிப்பீடு முறையே 5.4, 5.35 மற்றும் 4 சதவிகித வளர்ச்சியைக் கண்டன.

ஐடி நிறுவன பங்குகள்

ஐடி நிறுவன பங்குகள்

கடந்த மாதங்களில் நன்கு செயலாற்றிய தகவல் தொழில் நுட்பத்துறையின் (ஐடி) பங்குகள் ரூபாய் மதிப்பு வளர்ச்சி காரணமாக 2 சதவிகிதம் வரை வீழ்ச்சியைக் கண்டன.

மருத்துவம், நுகர்வோர் பொருட்கள் நிறுவனங்கள்

மருத்துவம், நுகர்வோர் பொருட்கள் நிறுவனங்கள்

போட்டி அதிகம் உள்ள மருத்துவச் சேவை மற்றும் நுகர்வுப் பொருட்களின் நிறுவனங்கள் மிகவும் மோசமான நிலையைச் சந்தித்து 2 சதவிகித வீழ்ச்சியைக் கண்டன.

நிஃப்டி

நிஃப்டி

கடந்த வாரம் வெள்ளிகிழமை நிஃப்டி சுறுசுறுப்புடன் துவங்கி ஒரு சாதகமான வேகத்துடன் நாள் முழுவதும் கொண்டிருந்தது. எப்போது இல்லாத அளவிற்கு உயர்ந்து 6538 புள்ளிகளை எட்டியது.

வலுமையான நிலையில் ரூபாய் மதிப்பு

வலுமையான நிலையில் ரூபாய் மதிப்பு

பட்டியலில் வலுவான இடத்தில் இருந்தபோதும் ஐடி மற்றும் மருந்துப் பொருட்கள் துறைகள் டாலருக்கு எதிராக ரூபாய் 61 என்ற அளவில் வலுவடைந்ததன் காரணமாக நெருக்கடியைச் சந்தித்தன.

இன்றைய வர்த்தக நிலை

இன்றைய வர்த்தக நிலை

இன்று வர்த்தகம் சரிவு முகத்துடனே துவங்கியது, இதனால் சென்செக்ஸ் 42.17 புள்ளிகள் சரிந்து 21877.08 புள்ளிகளில் உள்ளது. மேலும் நிஃப்டி 10.45 புள்ளிகள் சரிந்து 6516.20 புள்ளிகள் அடைந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FIIs push sensex to near 22, 000

Foreign institutional investors (FIIs) pumped in Rs 2,577 crore into the equity markets, driving the sensex and the nifty further into uncharted territory. In the last 15 sessions, FIIs have invested about $1.5 billion (Rs 9,500 crore) in Indian equities.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X