3,000 கோடி ரூபாய் அன்னிய முதலீடு!! ஜொலிக்கும் இந்திய சந்தை..

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவில் அனைத்து துறைகளிலும் அன்னிய முதலீட்டுக்கான அளவுகோலை நிதியமைச்சகம் உயர்த்தியதை அடுத்து பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய சந்தைகளில் ஆர்வமுடன் முதலீடு செய்து வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரத்தில் இந்திய சந்தையில் சுமார் 3000 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்யப்பட்டுள்ளன.

 

மேலும் சந்தைக்கு சாதகமாக இந்தியாவில் புதிய அரசு அமையும் பட்சத்தில் முதலீட்டாளர்களுக்கு அதிகபடியான லாபம் கிடைக்கும். இதனை மையமாக கொண்டு பெரு நிறுவனங்கள் மூதல் சிறு நிறுவனங்கள் இந்தியா சந்தையில் முதலீடு செய்து வருகிறது.

ரூ.3000 கோடி முதலீடு

ரூ.3000 கோடி முதலீடு

கடந்த வாரத்தின் 3ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரையான காலகட்டத்தில் இந்திய சந்தையில் சுமார் 18,944 கோடி ரூபாய் முதலீடும், 15,859 கோடி ரூபாய் வெளியேறியும் உள்ளது. இதன் அடிப்படையில் சுமார் 3000 கோடி ரூபாய் இந்திய சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

கடன் சந்தை

கடன் சந்தை

அதேபோல் 10,358 கோடி ரூபாய் கடன் சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

பொருளாதாரம் மேம்பாடு
 

பொருளாதாரம் மேம்பாடு

மேலும் நடப்பு கணக்கு பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் போன்றவை குறைந்து வருவதால் இந்திய பொருளாதாரம் விரைவாக மேம்படும் என பங்கு சந்தை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 18 மாதங்களில் இந்திய பொருளாதாரம் குறிப்பிட அளவு மேம்பட்டுள்ளது என நிதியமைச்சர் ப.சதம்பரம் தெரிவித்தார்.

பங்கு சந்தை

பங்கு சந்தை

அதிகபடியான அன்னிய முதலீட்டு காரணமாக மும்பை பங்கு சந்தை கடந்த 5 நாட்களாக தெடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் உட்சபட்டமாக மும்பை பங்கு சந்தையில் இன்று காலை 22,000 புள்ளிகளை தொட்டது. இதன் பின் மிதமான வேகத்தில் சரிய துவங்கி 21826.42 புள்ளிகளில் முடிவடைந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FIIs infuse Rs 3,000 crore in Indian equities in past week

Overseas investors pumped in over Rs 3,000 crore in the Indian stock market in the past week mainly on hopes of a strong mandate for the government to be elected in polls starting next month.
Story first published: Tuesday, March 11, 2014, 17:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X