26,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம்!! ஸ்பைஸ்ஜெட்- போயிங்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹைதெராபாத்: இந்தியாவின் மலிவு விலை விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், விமான உற்பத்தி நிறுவனமான போயிங் நிறுவனத்துடன் சுமார் 4.4 பில்லியன் டாலர் அதாவது 26,000 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் எரிபொருள் செயல்திறன் அதிகமுடைய போயிங் 737 மேக்ஸ்8எஸ் விமானத்தை வாங்க முடிவு செய்துள்ளது என போயிங் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் மற்றும் இந்தியாவின் விற்பனை பிரிவின் மூத்த துணை தலைவர் தினேஷ் கேஸ்கார் தெரிவித்தார்.

 

ஸ்பைஸ்ஜெட் மற்றும் போயிங் நிறுவனங்களும் இன்று ஹைதெராபாதில் தொடங்கியுள்ள இந்தியா விமான போக்குவரத்து நிகழ்ச்சியில் தங்களது ஒப்பந்த அறிவிப்பை தெரிவித்தாது. இந்த நிகழ்ச்சியில் நடந்த மிகப்பெரிய ஒப்பந்தம் இதுவே.

சன் குழுமம்

சன் குழுமம்

சன் குழுமத்தின் சிஎஃப்ஒ எஸ்.எல். நாராயணன் இதுகுறித்து கூறுகையில் "ஸ்பைஸ்ஜெட் போயிங் நிறுவனத்திற்கும் இடையே பல வருடங்கலாக நல்ல நட்பு இருந்துவருகிறது. மேலும் போயிங் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளின் மீது எங்களுக்கு ஆபார நம்பிக்கை உள்ளது" என அவர் தெரிவித்தார்.

737 மேக்ஸ்

737 மேக்ஸ்

ஆர்டர் செய்யப்பட்ட போயிங் 737 மேக்ஸ் விமானத்தில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு ஏற்ப பல மாறுதலுக்கும் உட்படுத்தி மெருகேற்ற உள்ளம் என போயிங் நிறுவனம் தெரிவித்தது.

1800 விமானங்கள்
 

1800 விமானங்கள்

போயிங் நிறுவனத்தின் சிறப்பிக்க தயாரிப்பான போயிங் 737 மேக்ஸ் விமானம் உலகின் அனைத்து வானுர்தி நிறுவனங்களுக்கும் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டவை. இதுவரை சுமார் 1,800 விமானங்கள் வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் உற்பத்தி 2016ஆம் ஆண்டு முதல் துவங்கி 2017 ஆண்டு விநியோகம் செய்யப்படும் என போயிங் நிறுவனம் தெரிவித்தது.

90 விமானங்கள் முன்பதிவு

90 விமானங்கள் முன்பதிவு

இந்த முன்பதிவில் போயிங் விமான வரிசையில் 737-800, 737-900ER, 737 மேக்ஸ் உட்பட சுமார் 90 விமானங்களை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முன்பதிவு செய்துள்ளது இதில் 31 விமானங்களை பெற்றுவிட்டது.

பங்குசந்தை

பங்குசந்தை

இந்த அறிவிப்புக்குப் பின் ஸ்பைஸ்ஜெட் நிறுவன பங்குகள் சுமார் 3.32 சதவீதம் உயர்ந்து 14.61 என்ற விலையில் விற்கபடுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SpiceJet, Boeing ink Rs 26,000-cr deal

Spicejet has signed a $4.4 billion (about Rs 26,000 crore) deal with aircraft manufacturer Boeing for supply of 42 aircraft. Dinesh Keskar, Senior Vice-President of Asia-Pacific and India Sales, Boeing, said order is for 737 MAX8s that offer fuel efficiency.
Story first published: Wednesday, March 12, 2014, 16:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X