பணவீக்கம் 5 சதவீதமாக குறைந்தது!! நிதியமைச்சர் மகிழ்ச்சி..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் பொருளாதார சில மாதங்களுக்கு முன் மிகவும் மோசமான நிலையில் இருந்தது, நாம் அனைவருக்கும் தெரியும், தற்போது இந்த நிலை மாறியுள்ளது. நடப்பு நிதியாண்டின் பிப்ரவரி மாதத்தின் பணவீக்கம் 4.68 சதவீதமாக பதிவாகியுள்ளது. இது கடந்த ஒன்பது மாதங்களில் குறைவானது அளவீடு. கடந்த 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பணவீக்கம் 7.28 சதவீதமாக இருந்தது குறிப்பிடதக்கது.

 

மொத்த விலை குறியீட்டு எண் (WPI) அடிப்படையில் பிப்ரவரி மாதத்தின் பணவீக்கம் 4.68 சதவீதமாக உள்ளது, கடந்த மாதம் இது 5.05 சதவீதமாக இருந்தது.

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

இந்த பணவீக்கம் குறைப்பை குறித்து நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், "இந்த பணவீக்க நிலை தொடர்ந்து குறைக்க பல முயற்சிகளை எடுத்துள்ளோம். மேலும் நாங்கள் எடுத்த முயற்சிக்கும் விரைவில் பலன் கிடைத்துள்ளது" என தெரிவித்தார்.

உணவு பொருள் பணவீக்கம்

உணவு பொருள் பணவீக்கம்

உணவு பொருள் பணவீக்கம் தான் மத்திய அரசிற்கு பெரும் தலைவலியாக இருந்தது. பிப்ரவரி மாதம் உணவு பொருள் பணவீக்கம் 8.12 சதவீதமாக குறைந்தது, கடந்த மாதம் 8.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடதக்கது. பழங்கள், அரிசி, பால் போன்ற முக்கிய பொருட்களின் விலை குறைந்ததால் உணவு பொருள் பணவீக்கம் குறைந்துள்ளது.

விலை உயர்வு
 

விலை உயர்வு

அதேபோல் பருப்பு வகைகள், தானியங்கள், கோதுமை போன்ற பொருட்களின் விலை குறைந்தது. மேலும் இந்த மாதம் அத்தியவசிய பொருட்களான பழங்கள், பால், முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்ற பொருட்களின் விலை மார்ச் மாதம் எப்போதும் இல்லாத அளவில் அதிகரித்தது. இதன் எதிரொலி அடுத்த மாதம் துவக்கத்தில் தெரியவரும்.

ஆர்பிஐ

ஆர்பிஐ

மேலும் வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி ரிசர்வ் வங்கி நாணய கொள்கையை அறிவிக்கவுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Inflation falls below 5 per cent

Inflation slipped to a nine-month low of 4.68 per cent in February on the back of easing prices of onion and potatoes and giving comfort levels for a possible rate cut by the Reserve Bank of India (RBI) in the monetary policy review on April 1.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X