பெங்களுரூ: வெயில் காலம் துவங்கியது, வெப்பத்தை தனிக்க எதையாவது நாம் செய்து கொண்டு இருக்கிறோம். இந்நிலையில் இந்த மின்சார தட்டுப்பாடு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.
மின்சார பிரச்சனையை போக்க கர்நாடக அரசு பிற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் மின்சாரத்தை முடக்க உத்தரவிட்டுள்ளது. கர்நாடகவில் உள்ள மின் உற்பத்தி நிறுவனங்களை அம்மாநில அரசு தாங்கள் பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மின்சாரத்தை நிறுத்தி மாநில தேவை பூர்த்தி செய்ய உதவுமாறு கேட்டுகொண்டுள்ளது.
மின்சார ஏற்றுமதி
மேலும் கர்நாடக அரசு நிறுவனத்தின் மின்சார ஏற்றுமதியை முற்றிலுமாக நிறுத்த உத்தரவிட்டுள்ளது.
ஒரு யூனிட் 5.50 ரூபாய்
இவ்வாறு பெறப்படும் மினசாரத்திற்கு அதிகப்படியான தொகையை செலுத்துவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. தனியார் நிறுவனகள் அளிக்கும் ஒவ்வொரு யூனிட்டுக்கும் 5.50 ரூபாய் கொடுப்பதாக அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
மின் பற்றாக்குறை
கர்நாடக மாநிலத்தின் தனியார் மின் ஏற்றுமதி 450 மெகா வாட், ஆனால் மாநிலத்தின் மின்சார பற்றாக்குறை 1,000 மொகவாட் ஆகும். மக்கள் மின்சாரம் இல்லமல் கஷ்டப்பட கூடாது என்று நினைக்கும் கர்நாடக அரசுக்கு வாழ்த்துகள்.
தமிழ்நாட்டின் நிலைமை
கர்நாடகாவின் மக்கள் தொகை 6.25 கோடி தான், தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7.2 கோடி. மக்கள் தொகை, தொழில் துறை அதிகம் கொண்ட தமிழ்நாட்டில் ஏற்கனவே தாறுமாறாக மின்தடை ஏற்படுகிறது. இன்னும் சில நாட்களில் நம் அம்மாமார்கள் மற்றும் மனைவிமார்கள் துவைத்த துணியை கரண்டு கம்பிகளின் மேல் உலர வைக்கலாம் போல..
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications