ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 1ரூபாய் திட்டத்தை முடக்கிய டிஜிசிஏ!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நேற்று நாட்டையே புரட்டிபோட்ட செய்தி ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 1 ரூபாய் செய்தி தான். ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தனது உள்நாட்டு சேவைகளுக்கு 1 ரூபாய் கட்டணத்தில் சேவை வழங்குவதாக அறிவித்தது.

 

ஆனால் இத்திட்டத்திற்கு ஆப்பு வைத்தது சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ). இத்திட்டத்தை உடனடியாக முடக்குமாறு டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.

முதல் முறை

முதல் முறை

முதல் முறையாக டிஜிசிஏ விமான தள்ளுபடி விலை கட்டணத்தை முடக்கியுள்ளது என்பதுகுறிப்பிடதக்கது. மேலும் டிஜிசிஏ-வின் பிராபாத் குமார் இத்திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இச்சேவை இருவருக்கு மட்டுமே

இச்சேவை இருவருக்கு மட்டுமே

இந்த சேவை ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் விற்கப்படும் டிக்கெட்டுகளில் வெறும் 1.7 சதவீத மட்டும் பொருந்தும். அதாவது ஒரு விமானத்திற்கு 2 இருக்கைகளுக்கு மட்டுமே இந்த குறைவான கட்டணம் சேவை வழங்கப்படுவதாக டிஜிசிஏ தெரிவித்துள்ளது. (எல்லாம் ஏமாத்து வேலை). இதனால் இத்திட்டத்தை உடனடியாக நிறுத்த டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.

ஸ்பைஸ் ஜெட்
 

ஸ்பைஸ் ஜெட்

இது குறித்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திடம் கேட்டபோது "இந்த ஒரு ரூபாய் திட்டத்தால் எங்களின் பயனச் சீட்டுகள் அனைத்தும் விற்கப்பட்டது. இதனால் நிறுவனத்திற்கு சுமார் 80
சதவீத புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர்" என தெரிவித்தது.

மலிவு விலை விமான சேவை

மலிவு விலை விமான சேவை

குறைவான கட்டணத்தில் விமான சேவை வழங்கியதால் நிறுவனத்திற்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் அடைந்துள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. (ஏப்ப சாமி இது உலக மாக நடிப்புடா!!)

நஷ்டம்

நஷ்டம்

டிசம்பர் மாத காலாண்டில் இத்தகைய சலுகை விலை கட்டணத்தால் சுமார் 171 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக ஸ்பைஸ் ஜெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எல்லாம் ஏமாத்து வேலை

எல்லாம் ஏமாத்து வேலை

ஜூலை 7ஆம் தேதி மும்பை முதல் பெங்களுரூ வரையிலான பயனத்திற்கு பயனக் கட்டணமோ 1 ரூபாய் தான், இந்த பயனத்திற்காக இவர்கள் போடும் வரிகளும் கட்டணங்களும் தான் ரொம்ப ஒவர் பாஸ், எரிபொருள் கட்டணமாக 2150 ரூபாய், கியூட் கட்டணமாக 50 ரூபாய், பயனிகள் சேவை கட்டணமாக 147 ரூபாய், மேம்பாட்டு கட்டணமாக 421 ரூபாய் , அரசு வரியாக 109 ரூபாய் ஆக மொத்தம் 2,878 ரூபாய். மற்ற விமான நிறுவனங்களிலும் இதே 2,878 ரூபாய் தான் விதிக்கப்படுகிறது.

எதற்காக இந்த சலுகை கட்டணம்

எதற்காக இந்த சலுகை கட்டணம்

எல்லாம் பப்ளிசிடிக்காக விடும் சலுகைகள் தான். இதனை நம்பி ஏமார்ந்தவர்கள் பல ஆயிரம் பேர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

DGCA grounds SpiceJet Re 1 discount ticket bonanza

THE Directorate General of Civil Aviation (DGCA) has asked SpiceJet to withdraw a discount scheme the low-cost carrier announced on Tuesday under which tickets were being offered at a base fare of Re 1 across its domestic network.
Story first published: Wednesday, April 2, 2014, 11:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X