இந்தியாவின் புதிய வங்கியான ஐடிஎஃப்சியின் சிறப்புகள்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ரிசர்வ் வங்கி கடந்த புதன்கிழமையன்று, கார்ப்பரேட் ஜாம்பவான்களாகிய ஏடிஏஜி குழுமம், ஆதித்யா பிர்லா குழுமம் மற்றும் பஜாஜ் குழுமம் உள்ளிட்ட 25 மனுதாரர்கள் மத்தியில், உள்கட்டமைப்பு நிதி நிறுவனமான ஐடிஎஃப்சி மற்றும் மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனமான பந்தன் ஆகியவற்றுக்கு வங்கி உரிமம் வழங்கி, நெடுநாட்களாக நிலவி வந்த எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது ரிசர்வ் வங்கி.

இந்திய வங்கித் துறையின் புது வரவாகிய இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (ஐடிஎஃப்சி) பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களும் இதோ உங்களுக்காக..

உள்கட்டமைப்பு திட்டங்கள்

உள்கட்டமைப்பு திட்டங்கள்

ஐடிஎஃப்சி நிறுவனம், நீண்டகால உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு கடனாக நிதி அளிக்கும் நோக்கத்துடன் 1997 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. "வர்த்தக ரீதியில் வெற்றியடையக்கூடிய உள்கட்டமைப்பு செயல்திட்டங்களுக்கு தனியார் முதலீடுகளைக் கொண்டு வந்து சேர்ப்பதே" இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கம் என்று தி எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.

குறிகிய கால நிதி திட்டம்

குறிகிய கால நிதி திட்டம்

ஐடிஎஃப்சி நிறுவனம், நிதி தொடர்பான சேவைகளுள், அஸெட் மேனேஜ்மென்ட் மற்றும் இன்வெஸ்ட்மென்ட் பாங்கிங் ஆகியவற்றில் கோலோச்சி வந்தாலும், டெர்ம்-லெண்டிங் தான் அதன் வர்த்தக மையப் புள்ளியாகும். பிசினஸ் ஸ்டாண்டர்ட் இதழ், ஐடிஎஃப்சி இந்தியாவின் ஐந்தாவது பெரிய நான்-பாங்கிங் நிதி நிறுவனம் (என்பிஎஃப்ஸி) என்று குறிப்பிட்டள்ளது.

நிதி முடிவுகள்
 

நிதி முடிவுகள்

2012-2013 நிதியாண்டுக்கான சில நிதி சார்ந்த முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன:
- பாலன்ஸ் ஷீட் சைஸ்: 71,059 கோடி ரூபாய்
- மொத்த வருமானம்: 8,148 கோடி ரூபாய்
- மொத்த கடன்கள்: 56,595 கோடி ரூபாய்
- நிகர லாபம்: 1,836 கோடி ரூபாய்
- ஈக்விட்டி மீதான ரிட்டர்ன்: 14 சதவீதம்
- ஸிஏஆர்: 22.1 சதவீதம்

பலம் வாய்ந்த வாடிக்கையாளர் பட்டியல்

பலம் வாய்ந்த வாடிக்கையாளர் பட்டியல்

ஜிஎம்ஆர், டாடா குழுமம், எஸ்ஸார், வோடஃபோன், ரிலையன்ஸ், என்டிபிஸி மற்றும் இதர பெரும் இந்திய இன்க் நிறுவனங்கள் ஆகியவை ஐடிஎஃப்சியின் சர்வ வல்லமை பொருந்திய சில வாடிக்கையாளர்கள் ஆவர்.

முதலீடு

முதலீடு

2012-2013 ஆண்டுக்கான வருடாந்தர தகவலறிக்கையின் படி, ஐடிஎஃப்சியின் எக்ஸ்போஷரில் சுமார் 40 சதவீதம் எனர்ஜி ஸெக்டாருக்கு வழங்கப்பட்ட கடனாலும், எஞ்சியுள்ள சதவீதம் போக்குவரத்து (23 சதவீதம்), டெலிகாம் (23 சதவீதம்) மற்றும் இதர துறைகள் (11 சதவீதம்) ஆகியவற்றினாலும் அமைந்திருப்பதை காணலாம்.

2005ஆம் ஆண்டில் பொதுவுடமை

2005ஆம் ஆண்டில் பொதுவுடமை

ஐடிஎஃப்சி 2005 ஆம் ஆண்டில் பொதுவுடமையாக்கப்பட்டது.

10 கிளைகள்

10 கிளைகள்

ஐடிஎஃப்சி நிறுவனமானது, ஐடிஎஃப்சி செக்யூரிட்டீஸ் லிமிட்டெட், ஐடிஎஃப்சி அஸெட் மேனேஜ்மென்ட் லிமிட்டெட் மற்றும் ஐடிஎஃப்சி பிரைமரி டீலர்ஷிப் உள்ளிட்ட 10 நேரடி கிளை நிறுவனங்களைக் கொண்டுள்ளது.

விக்ரம் லிமாயே

விக்ரம் லிமாயே

இந்நிறுவனத்தின் எம்டியும், சிஇஓவுமாகிய விக்ரம் லிமாயே, "22.5 சதவீதம் வரையிலான முதல் அடுக்கு காபிடல் அடிக்வஸியைக் கொண்டுள்ள ஐடிஎஃப்சி நிறுவனம், அது தற்போது முன்னெடுத்துள்ள வங்கி செயல்பாடுகளை தங்கு தடையின்றி செயல்படுத்தக்கூடிய வசதியான நிலையிலேயே உள்ளது." என்று பிசினஸ் ஸ்டாண்டர்டிடம் தெரிவித்திருக்கிறார்.

குறைவு விலை முதலீடு

குறைவு விலை முதலீடு

வாடிக்கையாளர்களிடமிருந்து ‘குறைவு விலை முதலீடுகளை' ஈர்க்க வேண்டியது, ஐடிஎஃப்சிக்கு முன்பாக தற்சமயம் இருக்கக்கூடிய மிகப்பெரும் சவால்களுள் ஒன்றாகும் என்று தி எகனாமிக் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

All you need to know about bank licence winner IDFC

Ending days of suspense, the Reserve Bank on Wednesday granted banking licences to infrastructure financing firm IDFC and microfinance institution Bandhan from among 25 applicants that included corporate heavyweights. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X