சென்னையில் 5 கிலோ எரிவாயு சிலின்டர் விற்பனை ஏப்ரல் 7 முதல் துவக்கம்!!

இதன்படி நாளை திங்கட்கிழமை சென்னையில் தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, மற்றும் அடையாறு 3 இடங்களில் இந்த விற்பனை துவங்க உள்ளது.
முதல்கட்டமாக தேனாம்பேட்டை டி. யு.சி.எஸ். கூட்டுறவு மையத்தில் நாளை (திங்கள்கிழமை) முதல் 5 கிலோ சிறிய சிலிண்டர் விற்பனை தொடங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு போதிய வரவேற்பு இல்லை என அந்த விற்பனை அங்காடி தெரிவித்துள்ளது.
சென்னையில் செயல்படவுள்ள 3 மையங்களில் ஏதேனும் ஒன்றில் ரூ.1600 செலுத்தி மானியம் இல்லாத சிலிண்டர்களை உடனடியாகப் பெற்றுக் கொள்ளலாம். காஸ் தீர்ந்து விட்டால் தங்கள் பகுதிகளில் உள்ள இந்தியன் ஆயில் விற்பனை நிலையத்தில் ‘ரீ- பில்' செய்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications