நலிவடையும் இந்திய பீபிஒ துறை!! 70% வர்த்தகம் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்றது..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஆங்கிலம் மட்டும் பேச தெரிந்தால் போதும், பல ஆயிரங்களில் சம்பளம்!! இப்படி செழிப்பாக இருக்கும் இந்தியாவின் பீபிஒ துறைக்கு இப்போது கஷ்ட காலம் துவங்கிவிட்டது என்றே சொல்லாம். பன்னாட்டு நிறுவனங்கள் தங்களில் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த வருடத்தின் 365 நாட்களும் 24 மணி நேரமும் செயல்படும் வாடிக்கையாளர் சேவை மையத்தை செயல்படுத்த இந்தியா முழுவதும் சில பல நிறுவனங்களின் உதவியை கொண்டு செயல்பட்டு வருகிறது.

 

ஆனால் தற்போது இந்த பன்னாட்டு நிறுவனகள் தனது இந்திய செயல்பாட்டை பிலிப்பைன்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு மாற்றியுள்ளது. இதனால் இந்தியாவில் பீபிஒ துறையின் 70 சதவீத வர்த்தகம் குறைந்துள்ளதாக ஒரு தகவல் அறிக்கை தெரிவிக்கிறது.

 30 பில்லியன் டாலர் வர்த்தகம் குறைந்தது

30 பில்லியன் டாலர் வர்த்தகம் குறைந்தது

ஒரு காலத்தில் பீபிஒ துறைக்கு மிக முக்கிய முதலீட்டு நாடாக கருதப்படும் இந்தியாவில் கடந்த 10 வருடங்களாக பிலிப்பைன்ஸ் மற்றும் ஐரோப்பிய நாட்டுகளின் ஆதிக்கத்தால் சுமார் 30 பில்லியன் டாலர் அளவு குறைந்துள்ளதாக அசோச்சாம் செயலாளர் ராலத் தெரிவித்துள்ளதார்.

சம்பளம் அதிகளவில் குறையும்

சம்பளம் அதிகளவில் குறையும்

இந்த நிலை மாற வேண்டும் என்றால் இந்தியாவில் பீபிஒ சேவைக்கான கட்டணத்தை பெருமளவில் குறைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். இதனால் பீபிஒ தொழிலாளர்களின் சம்பளம் அதிகளவில் குறையவும் வாய்ப்புள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

செயல்பாட்டு கட்டணங்கள்
 

செயல்பாட்டு கட்டணங்கள்

இந்த வர்த்தக குறைப்பாட்டை குறைக்க இந்தியாவில் வாய்ஸ் பேஸ்டு சரவிஸில் செயல்பாட்டு கட்டணத்தை 20 - 30 சதவீத குறைக்கப்பட வேண்டும், மேலும் நான் -வாய்ஸ் சர்விஸில் 10-15 சதவீதம் குறைக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸ்

மேலும் இந்தியாவின் பல நிறுவனங்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் தங்களின் நிறுவனக் கிளையை துவங்கியுள்ளனர். இதனால் பிப்பைன்ஸ் நாட்டில் இந்திய நிறுவனங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

ஏன் இந்த நிலை

ஏன் இந்த நிலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் பட்டதாரிகள், மேலும் அங்கு படித்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். அவர்களின் தாய்மொழி ஆங்கிலம் என்பதால் இவர்களுக்கு பயிற்சி செலவுகள் மிகவும் குறைவு.

அமெரிக்க வாடிக்கையாளர்கள்

அமெரிக்க வாடிக்கையாளர்கள்

இந்திய பீபிஒ சேவை அளிக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்கள். பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களுக்கும் அமெரிக்க மக்களின் வாழ்கை தரம் ஒன்று போலானது. இதனால் அமெரிக்க வாடிக்கையாளர்களை அதிகளவில் அடையலாம்.

பிராந்திய மொழிகள்

பிராந்திய மொழிகள்

2ஆம் மற்றும் 3ஆம் கட்ட நகரங்களில் தொலைதொடர்பு மற்றும் விமானச் சேவை துறையில் ஆங்கிலம் அல்லாது பிராந்திய மொழிகளில் வாடிக்கையாளர் சேவை வழங்குவதில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது.

இந்திய நகரங்கள்

இந்திய நகரங்கள்

இன்னும் 5 வருடங்களில் இந்தியாவின் முக்கிய நகரங்களான அகமதாபாத், சண்டிகர், கோயம்புத்தூர், டேராடூன், ஜெய்ப்பூர், கோழிக்கோடு, நாக்பூர், நாசிக் மற்றும் பாலக்காடு ஆகிய ஊர்களில் பீபிஒ வர்த்தகம் 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

அரசு திட்டங்கள்

அரசு திட்டங்கள்

மேலும் அரசு திட்டங்களான ஆதார் (UIDAI) மற்றும் தேசிய மின் ஆளுமை திட்டம் (NeGP) ஆகியவற்றில் பிரிந்தியம் மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் சேவை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India losing 70% call centre business to Philippines

Struggling to diversify the delivery footprint to take advantage of low-cost centres, India's BPO industry is currently losing 70 per cent of all incremental voice and call centre business to competitors like Philippines and countries in Eastern Europe, says a report.
Story first published: Monday, April 7, 2014, 13:41 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X