இந்தியாஃபஸ்ட் இன்சூரன்ஸ் நிறுவனம் அறிந்ததும்.. அறியாததும்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவின் புதிய இன்சூரன்ஸ் நிறுவனமான இந்தியாஃபஸ்ட் இன்சூரன்ஸ் நிறுனவனம் 2010ஆம் ஆண்டு 475 கோடி முதலீட்டுடன் பாங்க் ஆஃப் பரோடா, ஆந்திரா வங்கி மற்றும் பிரட்டன் நிறுவனத்துடன் இணைந்து இந்தியா முழுவதும் செயல்பட துவங்கப்பட்டது. இந்நிறுவனம் தனது நான்காம் ஆண்டு செயல்பாட்டில் காலடி வைக்கிறது. 2013-14ஆம் ஆண்டில் அதன் வர்த்தகம் 28% உயர்ந்துள்ளது.

இந்நிறுவனத்திற்கு டாக்டர். பி. நந்தகோபால், நிர்வாக இயக்குநராகவும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பதவி வகுக்கிறார். பொருளாதார மந்த நிலையாலும், இன்சூரன்ஸ் துறையில் ஏற்பட்ட தடுமாற்றத்தாலும் இந்நிறுவனம் குறைவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி இந்நிறுவனம் 2012-13ஆம் நிதியாண்டில் 1316 கோடி வருவாயை எட்டியது, 2013-14ஆம் ஆண்டு இந்நிறுவனம் 1681 கோடியை அடைந்தது என தனது வருடாந்திர நிதி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளரின் தேவை மற்றும் நோக்கத்தை உணர்ந்து செயல்பட்டதினால் கடினமான காலங்களிலும் சிறப்பான வளர்ச்சியை கொடுக்க முடிந்தது என இந்நிறுவனம் தெரிவிக்கிறது.

நிறுவனங்களின் சொத்து மதிப்பு

நிறுவனங்களின் சொத்து மதிப்பு

2013-14ஆம் நிதியான்டில் இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு மட்டும் 6500 கோடியாகும், இதுவரை இந்நிறுவனம் 2.4 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு இன்சூரன்ஸ சேவை வழங்கியுள்ளது.

தலைமை நிர்வாக அதிகாரி நந்தகோபாலன்

தலைமை நிர்வாக அதிகாரி நந்தகோபாலன்

2013-14ஆம் ஆண்டின் முடிவுகளை பார்க்கும் போது மந்த மற்றும் நிலையற்ற பொருளாதாரத்தில் எங்கள் நிறுவனத்தின் செயல்பாட்டை உணரமுடிந்தது. இந்த அதிகப்படியான வர்த்தகத்திற்கு நிறுவனத்தின் வாடிக்காயாளர் சேவை மற்றும் திட்டங்களே முக்கிய காரணமாக இருந்தது என திரு. நந்தகோபாலன் தெரிவித்தார்.

4 துறைகளில் சேவை

4 துறைகளில் சேவை

தற்போது இந்நிறுவனம் சுகாதாரம், பாதுகாப்பு, சேமிப்பு மற்றும் வெல்த் ஆகிய துறைகளில் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. மேலும் அடுத்த சில மாதங்களில் இந்நிறுவனம் ஒய்வுதியம் மற்றும் மைக்ரோ இன்சூரன்ஸ் பகுதிகளிலும் தனது சேவையை துவங்க திட்டமிட்டுள்ளது.

1000 கிளைகள்

1000 கிளைகள்

இந்நிறுவனம் இந்தியா முழுவதும் சுமார் 1000 நகரம் மற்றும் கிராமங்களில் செயல்பட்டு வருகிறது. மேலும் இதன் இணைநிறுவனணான பாங்க் ஆஃப் பரோடா மற்றும் ஆந்திரா வங்கி கிளைகளின் மூலம் சுமார் 8000 இடங்களில் செயல்பட்டு வருகிறது. மேலும் நாட்டு மக்கள் பணிப்புரிய தகுந்த இடமாக டாப் 100 நிறுவனங்களில் இந்நிறுவனமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IndiaFirst Life continues it growth story; grows by 28% in FY 2013-14

One of the youngest life insurers in the country, IndiaFirst Life recorded another successful year, growing by 28% in FY 2013-14.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X