முக்கிய தலைகளின் வரி கணக்கை ஹேக் செய்த ஆசாமிகள்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஆன்லைன் வரி விவர பதிவாளர்கள் விவரங்கள் அத்துமீறி வெளியாட்களால் பார்க்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

 

ஒரு தகவல் அறியும் உரிமை மனுவின் அடிப்படையில் நிதி அமைச்சகம் "பல்முனை செயல் அனுமதி முறைகள்" வடிவமைக்கப்பட்டு கூடிய விரைவில் இந்த விவரங்கள் முறைகேடாகப் பார்க்கப்படுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

எனினும் அந்த இணைய தளத்தில் நுழைந்து பாஸ்வேர்டுகளைத் திருடி பாதுகாப்பினை குலைக்கும் "ஹேக்கிங்" எதுவும் செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஹேக்கிங்

ஹேக்கிங்

"சில பிரிவுகளில் உள்ள வரி செலுத்துவோர் விவரங்கள் மட்டும் வெளி நபர்களால் அத்துமீறி பார்க்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பாஸ்வேர்டுகள் மாற்றப்பட்டுள்ளதாகவும்" அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முக்கிய தலைகள்

முக்கிய தலைகள்

மும்பை போலீஸ் கடந்த வருடம் அனில் அம்பானி, சச்சின் டெண்டுல்கர், தோனி, ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் ஆகியோர் உள்ளிட்ட முன்னணி தொழிலதிபர்கள், நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் வரி விவரங்கள் முறைகேடாகப் பார்க்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தது.

பாதுகாப்பற்ற இணையச் சேவை
 

பாதுகாப்பற்ற இணையச் சேவை

ஆன்லைன் வரி விவரப் பதிவுகளில் இது போன்ற முறைகேடுகள், அவற்றைத் தடுக்கும் முறைகள் மற்றும் இது தொடர்பான வரிசெலுத்துவோர் கணக்குகள் குறித்த தகவல்களைத் தருமாறு அமைச்சகம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதள முகவரியில் தங்கள் வரி விவரங்களை மின்னணுப்பதிவு செய்யலாம்.

மொபைல் சாப்ட்வேர்

மொபைல் சாப்ட்வேர்

"வரித்துறையால் அங்கிகரிக்கப்படாத சில மொபைல் சாப்ட்வேர்கள் உள்ளன. அவற்றை வரி செலுத்துவோர் அவை வரித்துறையின் தேவைக்கேற்ப இல்லை என்பதை அறிய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அவற்றை உபயோகிப்போர் அவற்றால் ஏற்படும் விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும்" என வரித்துறை இணையதளம் மூலமாக எச்சரிக்கை செய்துள்ளது.

2.96 கோடி மக்கள்

2.96 கோடி மக்கள்

2013-14 ஆம் ஆண்டில் ஏறக்குறைய 2.96 கோடி பேர் வரி விவரங்களைப் பதிவு செய்துள்ளதாக அந்த இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முற்றிலும் ஆன்லைன்

முற்றிலும் ஆன்லைன்

வருமான வரித்துறை வரியினை ஆன்லைன் மூலமாக செலுத்துவதை ஊக்குவித்து அதன்மூலம் விவரங்களை மின்னணுமயமாக்கி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Accounts of those filing I-T online compromised: Govt

The government has disclosed that accounts of as yet unknown number of people who filed their income tax online were illegally accessed.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X