நீண்ட கால அன்னிய முதலீடு ஆதரிக்கும் செபி!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி அமைப்பு அன்னிய அமைப்பு முதலீட்டாளர்கள் ஒரு வருடத்திற்கும் குறைவான முதிர்வு காலம் உள்ள அரசுப் பத்திரங்களை வாங்க கட்டுப்பாடு விதித்துள்ளது. இது அதிக காலம் கொண்ட அன்னிய முதலீடுகளை ஈர்க்க எடுக்கப்பட்ட முடிவு என செபி தெரிவித்தது.

 

"அன்னிய முதலீட்டு அமைப்புகள் அல்லது தகுதிபெற்ற அன்னிய முதலீட்டாளர்கள் இனி ஒருவருடத்திற்கும் மேலான முதிர்வு காலம் உள்ள அரசுப் பத்திரங்களை மட்டுமே வாங்க அனுமதிக்கப்படுவர்" என செபி தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

நீண்ட கால முதலீடுகள்

நீண்ட கால முதலீடுகள்

"அரசுப் பத்திரங்களை வாங்க அனுமதிக்கப்படும். மேலும் குறைந்த காலத்திற்கு வழங்கப்பட்ட முதலீட்டு வரையறைகள் இனி அதிக கால வரையறைகளில் வழங்கப்படும்" என மேலும் அவ்வமைப்புத் தெரிவித்தது.

30 பில்லியன் டாலர்

30 பில்லியன் டாலர்

அன்னிய அமைப்பு முதலீடுகள் மற்றும் முதலீட்டாளர்களின் ஒட்டு மொத்த அரசுப் பத்திர முதலீடு வரையறை மாற்றமின்றி 30 பில்லியன் டாலர்களுக்குள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்பிஐ

ஆர்பிஐ

செபியின் இந்த அறிவிப்பு, ஆர்பிஐ-யின் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி வெளியிடப்பட்ட 2014-15ஆம் ஆண்டிற்கான இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வெளியிடப்படும் நிதிக் கொள்கை அறிவிப்பினை அடிப்படையாகக் கொண்டது.

கடன்களைப் பெறுவதில் அன்னிய முதலீட்டு வரையறைகளை சரிசெய்யவும் விரிவுபடுத்தவும் ஆர்பிஐ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

திட்டவட்டமான முடிவுடன் அன்னிய முதலீடு
 

திட்டவட்டமான முடிவுடன் அன்னிய முதலீடு

"நீண்ட கால நிதி ஆதாரங்களை ஆய்ந்தபோது, அரசுப்பத்திரங்களில் தகுதியுடைய ஒருவருடத்திற்கும் மேலான முதிர்வுடைய அனைத்து அன்னிய முதலீடுகளும் அனுமதிக்கப்படும்" என தன் முடிவை ஆர்பிஐ விளக்கியது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FIIs can’t buy government securities with maturity of less than 1 yr: Sebi

Capital market regulator Sebi today restricted foreign investors from buying government securities having maturity of less than one year, a move that aims at encouraging inflows of long-term overseas fund.
Story first published: Saturday, April 12, 2014, 19:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X