ரூ.1,800 கோடி உற்பத்தி வரியை 'ஸ்வாகா' செய்த இந்திய நிறுவனங்கள்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மத்திய அரசு ஆயிரம் சட்டதிட்டங்கள் விதித்தாலும் மக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரிகளை சரியாக செலுத்துவதில்லை. 2013- 14ஆம் ஆண்டிற்கான வரி வசூல் கணக்கை நிதியமைச்சகம் ஆய்வு செய்கையில் சுமார் 1800 கோடி மதிப்பிலான உற்பத்தி வரி ஏய்க்கப்பட்டது தெரியவந்துள்ளது.

 

இதுகுறித்து மத்திய சுங்க வரி புலனாய்வு இயக்குநரகம் இதுவரை 379 வழக்குகள் பதிவு செய்துள்ளது. பதிவு செய்யத வழக்குகளின் வரி ஏய்ப்பு மட்டும் சுமார் 1,879.69 கோடி மதிப்புடையது என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் தனியார் நிறுவனங்களே அதிகளவில் உள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்தார்.

450 வழக்குகள்

450 வழக்குகள்

2012-13ஆம் நிதியாண்டில் மத்திய உற்பத்தி வரி புலனாய்வு இயக்குநரகம் 458 வழக்குகள் பதிவு செய்தது குறிப்பிடதக்கது. இதன் மதிப்பு 2,940 கோடி, தற்போது 1,018 கோடியாக குறைந்துள்ளது மகிழச்சிக்குரிய விஷயம் என்றாலும் இந்த தொகை மிகவும் பெரியது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

உற்பத்தி வரி

உற்பத்தி வரி

இந்திய நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு மொத்தமாக 12.36 சதவீதம் உற்பத்தி வரி வதிக்கப்படும். மேலும் சில நிறுவனங்களுக்கு இந்த சதவீதத்தில் சில சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது.

வரி ஏய்ப்பு செய்த நிறுவனங்கள்

வரி ஏய்ப்பு செய்த நிறுவனங்கள்

மத்திய சுங்க வரி புலனாய்வு இயக்குநரகம் பதிவு செய்த வழக்குகளில் பான் மசாலா, சிகரெட், இருப்பு, ஸ்டீல், ஆட்டோமொபைல் பாகங்கள் உற்பத்தி, உணவு பொருட்கள் உற்பத்தி மற்றும் சாக்லெட் உற்பத்தி நிறுவனங்களே அதிகளவில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதிரடி நடவடிக்கை
 

அதிரடி நடவடிக்கை

வரி ஏய்ப்பு செய்த நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடிக்கப்போவதாக நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

வரி வசூல்

வரி வசூல்

2012-13ஆம் ஆண்டில் மத்திய அமைச்சகம் 1.75 இலட்ச ரூபாய் வரி வசூல் செய்தது, அதேபோல் 2011-12ஆம் ஆண்டில் 1.44 இலட்சம் மட்டுமே வசூல் செய்தது. 2013-14ஆம் ஆண்டிற்கான வரி வசூல் செய்யப்பட்ட தகவல் இன்னும் தெரியவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Finance Ministry detects over Rs 1800 crore excise duty evasion in 2013-14

Increased efforts in checking revenue leakage have resulted in detection of over Rs 1,800 crore central excise duty evasion across the country during 2013-14.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X