உலகின் டாப் 10 ஐடி நிறுவனங்களில் டிசிஎஸ்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: டாடா குழுமத்தின் டாடா கன்சல்டன்சி சர்விச்ஸ் நிறுவனம் உலகின் டாப் 10 சாப்ட்வேர் நிறுவனங்களில் 10 இடத்தை பிடித்துள்ளது. இப்பட்டியலில் இடம்பிடக்க கடந்த 5 வருடங்களாக டிசிஎஸ் நிறுவனம் போராடிக் கொண்டு இருக்கிறது.

 

கடந்த 2012ஆம் ஆண்டில் இப்பட்டியலில் 13வது இடத்தை பிடித்தது, 2013ஆம் ஆண்டில் 10வது இடத்தை பிடித்துள்ளது, இது இந்நிறுவனத்தின் அசராத முயற்சி மற்றும் செயல்பாட்டிற்கு ஒரு அத்தாட்சியாகும்.

நீண்ட கால கனவு

நீண்ட கால கனவு

12 வருடத்தின் முன்பு டிசிஎஸ் நிறுவனத்தின் லாபம் 1 பில்லியன் டாலரை எட்டியது. அப்போது பேசிய நிறுவனத்தின் முன்னாள் சிஈஓ எஸ். ராமதுரை 2010ஆம் ஆண்டிற்குள் உலகின் டாப் 10 நிறுவனங்களின் டிசிஎஸ் இடம்பெறும் என தெரிவித்தார். இந்த இலக்கை அடைய தனது பணிகாலத்தை முழுவதையும் செலவிட்டார். இவரின் கனவு 2014ஆம் ஆண்டு பளித்தது. (அப்ப அப்துல் கலாம் கண்ட கனவு எப்ப பளிக்கும்??)

இந்திய வளர்ச்சி

இந்திய வளர்ச்சி

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு சாப்ட்வேர் துறை பெரிதும் உதவியது என்று சொன்னால் மிகையாகாது. இன்றளவில் உலகில் மென்பொருள் உற்பத்திக்கு அடையாளமாக இந்தியா விளங்குகிறது.

வருவாய்
 

வருவாய்

டிசிஎஸ் நிறுவனம் இந்த ஆண்டு சுமார் 12.5 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டி இப்பட்டியலில் பத்தாவது இடத்தை பிடத்துள்ளதாக ஹெச்.எஃப்.எஸ் ரிசர்ச்சர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இப்பட்டியலில் இடம்பிடித்த மற்ற நிறுவனங்களை இப்போது பார்போம்.

ஐபிஎம்

ஐபிஎம்

மென்பொருள் மற்றும் வன்பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் கலக்கும் ஐபிஎம் நிறுவனம் 54.4 பில்லியன் டாலர் வருவாய் பெற்றது.

ஃபுஜிட்சு

ஃபுஜிட்சு

ஜாப்பான் நாட்டு நிறுவனமான இது உலகம் முழுவதும் மென்பொருள் மற்றும் வன்பொருள் சேவையில் ஈடுபட்டு வருகிறது இந்நிறுவனத்தின் வருவாய் 32.1 பில்லியன் டாலர்.

ஹெச்பி

ஹெச்பி

இந்நிறுவனமும் மென்பொருள் மற்றும் வன்பொருள் சேவையில் உலகம் முழுவதிலும் தனது வர்த்தகத்தை விரிவு செய்துள்ளது. இந்நிறுவனம் இப்பட்டியலில் முன்றாவது இடத்தை பிடித்துள்ளது, இதன் வருவாய் 29.2 பில்லியன் டாலர் ஆகும்.

மற்ற நிறுவனங்கள்

மற்ற நிறுவனங்கள்

இந்த முன்று நிறுவனங்களை தவிர்த்து அக்செஞ்சர், என்டிடி, சாப், ஆரகிள், கேப்ஜெமினி, சிஎஸ்சி மற்றும் டிசிஎஸ்

இந்திய நிறுவனங்கள்

இந்திய நிறுவனங்கள்

இப்பட்டியலில் இந்தியா நிறுவனங்களான காக்னிசண்ட் நிறுவனம் 15வது இடத்தையும், இன்போசிஸ் நிறுவனம் 18வது இடத்தையும், விப்ரோ நிறுவனம் 20வது இடத்தையும், ஹெச்சிஎல் நிறுவனம் 25வது இடத்தையும் பிடித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TCS joins top 10 global IT services companies club

This is a landmark for Indian IT. The country's largest IT services provider, Tata Consultancy Services (TCS), has broken into the league of top 10 global IT services companies, moving from the 13th position in 2012 to the 10th spot in 2013.
Story first published: Tuesday, April 22, 2014, 14:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X