நிதி பற்றாக்குறையை குறைக்க விமானங்களை குத்தகைக்கு விடும் ஏர்இந்தியா!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: புது விமானங்களை வாங்க நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு வங்கிகளும் குறைந்தளவே உதவி செய்துள்ளன. இதனால் இந்த நிதி பற்றாக்குறையை தவிர்க்க தனது விமானங்களை, பிற நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட ஏர் இந்தியா முடிவு செய்யதுள்ளது.

 

இந்த குத்தகை விடும் திட்டத்தால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு தேவையான தொகை கிடைத்துவிடும் என இந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.

14 விமானங்கள்

14 விமானங்கள்

இந்தியாவின் ஒரே பொது துறை விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவிடம் உள்ள 14 ஏ320 ரக விமானங்களை இக்குத்தகை திட்டத்தின் கீழ் விட இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த குத்தகை திட்டத்திற்கான காலம் 6 ஆண்டுகள் ஆகும்.

புதிய விமானங்கள்

புதிய விமானங்கள்

ஏர் இந்திய நிறுவனம் வாங்கும் புதிய விமானங்களையும் குத்தகை அடிப்படையில் செயல்படுத்த இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஏ320 விமானங்கள்

ஏ320 விமானங்கள்

ஏர்பஸ் நிறுவனத்தின் ஏ320 விமானங்களை அதிகளவில் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடதக்கது. 1989 முதல் 1993-ம் ஆண்டு இடைப்பட்ட காலங்களில் மொத்தம் 31 விமானங்கள் வாங்கப்பட்டன. அதேபோல் 2006 முதல் 2010-ம் ஆண்டு வரையிலான காலத்தில் 43 விமானங்கள் வாங்கப்பட்டன.

விற்பனை
 

விற்பனை

2014ஆம் ஆண்டில் 777-200 ரக 5 விமானங்களை அபுதாபியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்தது ஏர் இந்தியா.

777-200 ரக விமானங்களை...

777-200 ரக விமானங்களை...

மேலும் எஞ்சியுள்ள 777-200 ரக 3 விமானங்களை விற்பனை செய்யப் போவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Air India seeks to lease 14 Airbus A320 aircraft

Air India Ltd is seeking to lease 14 Airbus A320 aircraft, according to a tender document posted on the state-run carrier's website.
Story first published: Saturday, April 26, 2014, 15:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X