ரகுராம் ராஜனை உலுக்கிய ஐந்தாம் வகுப்பு மாணவியின் கடிதம்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் பொருளாதாரம் சற்று மோசமாகவே உள்ளது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று, இந்த விஷயத்தை மிகவும் சாதாரணமாக பார்க்கும் இந்திய மக்களுக்கு, உச்சந்தலையில் நறுக்கென்று கொட்டியதை போல ஐந்தாம் வகுப்பு மாணவி ஒரு செயலை செய்துள்ளர்.

 

கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் இந்திய பொருளாதாரம் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, நடப்பு கணக்கு பற்றாக்குறை, வர்த்தக பற்றாக்குறை, அன்னிய செலாவணி கையிருப்பு சரிவு போன்ற பல்வேறு சவால்களை சந்தித்து. இந்நிலையை தெளிவாக உணர்ந்த லைலா இந்திரா ஆல்வா என்ற பள்ளி மாணவி நாட்டின் பொருளாதார நிலை குறித்து கவலை தெரிவித்தும், அதற்காக தன்னிடம் உள்ள 20 டாலர்களை நிதியுதவியாக தருவதாகவும் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி கடிதம் அனுப்பினார்.

 லைலா இந்திரா ஆல்வா

லைலா இந்திரா ஆல்வா

இவர் டெல்லியில் உள்ள சாங்ஸ்கிருதி பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இக்குழந்தை எழுதிய கடிதத்தை படித்த ரகுராம் ராஜன் தன் மணம் மிகவும் இருக்கமானதாகவும் தெரவித்தார்.

பிஞ்சு கைகள் எழுதிய கடிதம்

பிஞ்சு கைகள் எழுதிய கடிதம்

இந்த பிஞ்சு கைகள் இந்திய பொருளாதாரத்தை உணர்ந்து எழுதிய கடிதத்தில் ''நமது நாட்டின் பொருளாதாரம் சந்தித்து வரும் சவால்களை கேள்விப்பட்டேன். மேலும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதை தொலைக்காட்சி செய்திகளில் காண்கிறேன். நான் சென்ற முறை எனது பெற்றோர்களுடன் வெளிநாடு சென்றுவிட்டு திரும்பிய போது 20 டாலர்களை சேமித்து வைத்துள்ளேன். அதை நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவியாக அளிக்க விரும்புகிறேன். நான் கொடுக்கும் இந்த சிறிய பணம் கண்டிப்பாக போதாது என்பது எனக்கு தெரியும்.'' என்று குறிப்பிட்டிருந்தார்.

ரகுராம் ராஜன்
 

ரகுராம் ராஜன்

இக்கடிதத்தை கண்டு ஆச்சர்யமடைந்த ரிசர்வ் வங்கி கவர்னர் நூற்றில் ஒரு கடிதம் என்று எடுத்துக்கொள்ளாமல், மிகவும் அக்கரையுடன் அந்த பள்ளி மாணவிக்கு செப்டம்பர் 12 ஆம் தேதி பதில் அனுப்பினார்.

ரகுராம் ராஜன் எழுதிய கடிதம்

ரகுராம் ராஜன் எழுதிய கடிதம்

லைலா எழுதிய கடித்தை படித்த ராஜன், தனது பதில் கடிதத்தில் ''உங்களுடைய கடிதம் என் மனதின் ஆழத்தை தொட்டது. நமது நாட்டு பொருளாதாரத்திற்கு தற்போது சவாலான நேரம் என்பதை நான் அறிவேன். ஆனால் விரைவில் நமது பொருளாதாரம் மீட்சியடையும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்ற உறுதியுடன் நீ அனுப்பிய 20 டாலரை திருப்பி அனுப்புகிறேன். தற்போதைய பொருளாதார சவால்களை சமாளிக்க போதுமான அன்னிய செலாவணி கையிருப்பு ரிசர்வ் வங்கியிடம் உள்ளது.'' என்று ரகுராம் குறிப்பிட்டிருந்தார்.

செய்தி வெளியீடு

செய்தி வெளியீடு

இந்த செய்தியை லைலா படித்து வரும் சாங்ஸ்கிருதி பள்ளியின் மேகசைனில் நேற்று வெளியிடப்பட்டது. இதனால் இச்செய்தி காட்டுத்தீ போல் பரவியது.

வார்த்தைகளை உண்மையாக்கிய ராஜன்

வார்த்தைகளை உண்மையாக்கிய ராஜன்

இந்நிலையில், ஆறு மாதங்களுக்கு பிறகு தற்போது நாட்டின் பொருளாதாரம் சற்று வலுப்பெற்று, ரூபாய் மதிப்பு 68.83 ரூபாயில் இருந்து 60.31 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பும் 310 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

A class V girl offered to help RBI governor Raghuram Rajan

One doesn't expect a fifth grade student to be worried about the state of the economy and the country's foreign exchange reserves, much less pen a letter to the Reserve Bank of India governor offering help. 
Story first published: Friday, May 2, 2014, 11:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X